சந்தோஷ், மயிலாப்பூர், சென்னைநீண்ட நேரம் மூளைக்கு கடுமையான வேலை கொடுத்து, இரவில், 8 மணிநேரம் துாங்கினால், மூளை செல்கள், சீரான இடைவெளியில் ஓய்வு பெறுவதோடு, புத்துயிர் பெற்று, ஆரோக்கியமாக செயல்படும்; சீரான உடல் எடையையும் பராமரிக்கலாம். நம் உடலில், 'லெப்டின்' என்னும் ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோன் தான், நாம் பசியுடன் உள்ளோமா இல்லையா என்பதை, நமக்கு உணர்த்தும். ஒருவர் சரியாக துாங்காவிட்டால், இந்த ஹார்மோனின் அளவு குறைந்து, அதிகப்படியான பசியை துாண்டும். அதனால், அதிக அளவில் உணவை உட்கொள்ள நேரிடும். விளைவு, உடல் பருமனாகி விடும். அதுவே, நல்ல துாக்கத்தை மேற்கொண்டால், 'லெப்டின்' அளவு சீராக இருக்கும்.ஒருவர், தினமும் 8 மணிநேரம் துாங்கினால், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதோடு, மன அழுத்தத்தினால் மற்ற உறுப்புக்கள் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.
காசி விஸ்வநாதன், பொது மருத்துவர், சென்னை
என் வயது 21; இப்போது தான் கல்லுாரி படிப்பு முடித்துள்ளேன். மருத்துவர், என் எலும்புகள் பலவீனமாக உள்ளதாக கூறுகிறார். எலும்புகள் உறுதியாக என்னென்ன சாப்பிடலாம்?நித்யா, சென்னை பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடலாம். குறைந்த கொழுப்புச் சத்துள்ள பால் பொருட்களாக பார்த்து சாப்பிட வேண்டும். வெண்ணெய், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது; அவற்றை சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலமடையும்.பாதாம், பிஸ்தா போன்ற பொருட்களில், உடலுக்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இவற்றை, உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.
பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அது, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வி.வெற்றிவேந்தன், எலும்பு நிபுணர், சென்னைநீச்சல் குளத்தின் நீரில் கலக்கப்படும் குளோரின் என்ற வேதிப் பொருளால், உடலின் நிறம் கறுத்துப் போகும் என்கின்றனர். கறுத்துப் போகாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?நஸ்ரின், பொன்னுார்.நீச்சல் குளத்தில் குளித்தால், உடல் கறுப்பாகும் என்பது நிஜம் தான். ஆனால், இந்த பிரச்னை தற்காலிகமானது தான். நீச்சல் குளம் துாய்மையாக இருப்பதற்காக, நீரில் குளோரின் பவுடரை கலப்பதால் உடல் கறுப்பாகிறது. இதைத் தடுக்க, 25 முதல் 30 முதல் எஸ்.பி.எப்., உள்ள, 'சன்ஸ் கிரீம் லோஷன்' தடவிய பின், நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும்.
மனோகரன், சரும நிபுணர், சென்னை.
Advertisement