செய்முறை:
1. தரை விரிப்பில் கவிழ்ந்த நிலையில் படுக்கவும்
2. இரண்டு கால்களையும் பின்புறம் மடக்கி, இரண்டு கைகளால், கால்களின் கணுப் பகுதியை பிடிக்கவும்
3. பின், மூச்சை இழுத்துக் கொண்டே, வயிறு மட்டும், தரையில் படுமாறு வைத்துக் கொண்டு, மற்ற அனைத்து பாகத்தையும் மேலே உயர்த்தவும்
4. சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வரவும்.
குறிப்பு:
வயிற்றுப் புண் உள்ளவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், யோகா நிபுணர்களின் அறிவுரைப்படி செய்ய வேண்டும்
பலன்கள்:
உடல் எடை குறையும்
ஜீரணக் கோளாறு, மலச் சிக்கல் பிரச்னைகள் சரியாகும்
நுரையீரல் நன்கு பலமாகும்; இதனால் சளி, சைனஸ், இருமல் போன்ற பிரச்னைகள் சரியாகும்
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல் பிரச்னை சரியாகும்; பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும்
சிறுநீரக கோளாறுகள் இருந்தால் சரியாகும்.
- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053