இருபது ஆண்டுகளைக் கடந்த இந்திய இணையம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2015
00:00

இந்தியாவில் இணைய இணைப்பு வழங்கப்பட்டு, சென்ற ஆகஸ்ட் 15 உடன், இருபதாண்டுகள் நிறைவு பெற்றன. ஆம், மனித வாழ்க்கையில் மகத்தான புரட்சி ஏற்படுத்திய இணைய இணைப்பு, இந்தியாவில், சென்ற 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று தரப்பட்டது. சென்ற வார சுதந்திர தினத்தன்று, 20 ஆண்டுகளை இந்திய இணையம் நிறைவு செய்துள்ளது.
இந்தியா தன் 49 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய போது, பொதுமக்களுக்கு இணையத்தை அணுக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுத்துறை நிறுவனமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் (Videsh Sanchar Nigam Limited (VSNL)) இதனை வழங்கியது. அதற்கென Gateway Internet Access Service (GIAS) என்றொரு பிரிவினை இந்நிறுவனம் அமைத்து, இணைய இணைப்பினை வழங்கியது.
இந்தியாவில் இணைய இணைப்பு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் 1986 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. முதலில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டும் இணைய இணைப்பு பெற Educational Research Network (ERNET) என்ற நெட்வொர்க் அமைக்கப்பட்டது. இந்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் துறையும் (Department of Electronics (DOE)) ஐக்கிய நாடுகள் சபையின், நாடுகளின் வளர்ச்சிக்கான United Nations Development Program (UNDP) துறையும் இணைந்து இந்த முயற்சிகளை மேற்கொண்டன.
பின்னர், 1988ல், அரசின் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) அரசின் பல்வேறு துறைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கென NICNet என்னும் நெட்வொர்க்கினை ஏற்படுத்திச் செயல்படுத்தியது.
இணைய இணைப்பை ஏற்படுத்தித் தருவதில் வி.எஸ்.என்.எல். தலைவர் கனகசபாபதி பாண்டியன், அந்நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குநர் பி.கே.சிங்கால் மற்றும் அமிதாப் குமார் ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
முதன் முதலில், 1995, ஆகஸ்ட் 15 அன்று, சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள் TCP/IP இணைய இணைப்பைப் பெற, ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 செலுத்த வேண்டியிருந்தது.
இணைய இணைப்பின் வேகம் 9.6 kbps. தொடங்கிய மாதத்தில், பலவகையான நெட்வொர்க் மற்றும் ஹார்ட்வேர் பிரச்னைகளை வி.எஸ்.என்.எல். சந்தித்தது. ஆனால், அனைத்தையும் சமாளித்து வெற்றி பெற்று, முதல் ஆறு மாதங்களில் 10,000 வாடிக்கையாளர்களைப் பெற்றது. பின்னர், பொதுமக்களுக்கு மணிக்கு ரூ.35 என்ற கட்டணத்தில் இணைப்பு வழங்கப்பட்டது.
தொடக்கத்தில் விநாடிக்கு 9.6 கிலோ பிட்ஸ் என்ற அளவில் தொடங்கிய வேகம், பின்னாளில் மிக வேகமாக வளர்ந்து தற்போது மெகா பிட்ஸ் என்ற அளவை எட்டியுள்ளது. லீஸ்டு லைன் எனப்படும் தனிப்பட்ட சர்வர் இணைப்பு தற்போது குறைந்த கட்டணத்தில் நொடிக்கு கிகா பிட்ஸ் வேகத்தில் கிடைக்கிறது.
அண்மையில் ட்ராய் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தற்போது இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X