சின்ன சின்ன செய்திகள் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
சின்ன சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2015
00:00

அங்கக வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள் : வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது. துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
நெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது. மிளகாயில் ஏற்படும் ஆந்தராக்னோஸ் நோய், பழ அழுகல் மற்றும் நுனிகருகல் நோய்களுக்கு சீமைக்கருவேல் இலைச்சாறு 10 சதம் நாற்று நடப்பட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
வேப்ப இலைச்சாறு 10 சதம் கம்பு பயிரில் அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்துகிறது. சாணத்தை கரைத்து வடிகட்டப்பட்ட நீர் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தால் உளுந்து பயிரில் சாம்பல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. கரும்பு பயிரில் கரணை அழுகல் நோய்க்கு வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ 40, 60 மற்றும் 80 நாட்களில் இட நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஓங்கோல் மாடுகள் : ஆந்திர மாநிலத்தின் சொத்து என அழைக்கப்படும் ஓங்கோல் மாடுகள், ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், திருத்தணி, ஆதம்பாக்கம் ஆகிய சில பகுதிகளில் இந்தவகை மாடுகள் உள்ளன. இவை பாலுக்காக இல்லாமல் பெரும்பாலும் விவசாய வேலைகளுக்குத் தான் வளர்க்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு 8 லிட்டர் அளவுக்கு பால் கிடைக்கும். பாலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும். இவை அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டவை. அதோடு கடுமையான வெப்பத்தையும் தாங்கும் தன்மை கொண்டவை. ஓங்கோல் காளைகளை டென்மார்க் உள்பட பல நாடுகள் இன்றளவும் இறக்குமதி செய்து வருகின்றன. இந்தக் காளைகளுடன் அவர்களது நாட்டுப் பசுவை இணைத்து பல புதிய இனங்களை உருவாக்கி, வருகிறார்கள். இப்படி உருவாகும் மாடுகள் அதிக பால் உற்பத்தியைக் கொடுக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள ஓங்கோல் மாடுகள் 40 லிட்டர் பால் கொடுப்பதில்லை. 8 லிட்டர் பால் கொடுக்கும் திறன் உள்ள மாடுகள் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை பெறும். ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் இந்த இன மாடுகள் கிடைக்கும். தகவல் - ஓங்கோல் மாவட்டத்தில் (ஆந்திரா) கால்நடை மற்றும் விவசாய வளர்ச்சிக்காக "எபோட்' தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோகன்ராவ்.
வண்ண இறைச்சி கோழிகள் : தற்போது குறைந்த முதலீட்டில் நிலையான வருமானத்தைத் தரக்கூடிய தொழிலை பண்ணையாளர்கள் கொடுக்கிறார்கள். புறக்கடை கோழி வளர்ப்பிற்கேற்ப "நந்தனம் இறைச்சிக்கோழி-2' என்ற வண்ண இறைச்சிக்கோழி இரகம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தினுடைய அங்கமான கோழி இன ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டு பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
நந்தனம் இறைச்சிக்கோழி-2 சிறப்புகள் - சுவையான இறைச்சியைக் கொண்டது. 8 வது வார வயதில் உடல் எடை 1200 - 1400 கிராம், தீவனமற்றத் திறன் 2.2 - 2.4, உயிர் வாழும் விகிதம் 97 சதவிகிதம், தேவையான இடவசதி தலா 1 சதுர அடி புறக்கடை கோழிவளர்ப்பிற்கு ஏற்றவை. 6 மாத வயதில் முட்டையிடத் துவங்கும். ஒரு ஆண்டுக்கு முட்டையிடும் காலத்தில் சுமார் 140 - 160 முட்டைகள் வரை இடும், வளர்ப்பு முறை, தீவன மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை முறைகள் வீரிய இரக கோழி வளர்ப்பு முறையைப் போன்றதே ஆகும். நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. தகவல் - க.பிரேமவல்லி, உதவிப் பேராசிரியர் கோழியின ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை-600 051.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X