ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
00:00

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் ஒரு கூட்டத்திற்கான அழைப்பிதழை அனைவருக்கும் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 9 அன்று, சான்பிரான்சிஸ்கோவில், பில் கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியத்தில், காலை 10 மணி அளவில், நடைபெற உள்ளது. இந்த ஆடிட்டோரியத்தில், 7,000 பேர் அமர்ந்து கூட்டத்தின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனம் நடத்திய இது போன்ற விழாக்களில், அதிக பட்சம் 2,500 பேர் உட்கார்ந்து பங்கு கொள்ளும் இடங்களாகவே இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நடைபெற இருக்கும் இந்த விழாவில், புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் டிவி அறிமுகமாகும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஐ போன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் அறிமுகமாகிச் சரியாக ஓராண்டு ஆகும் நாளில், இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போன்களும், ஆப்பிள் நிறுவனத்தின் மிக அதிகமாக விற்பனையான சாதனங்கள் என்ற பெயரை எடுத்துக் கொடுத்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தை, அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக, உலக அளவில் பெயர் எடுக்க வைத்ததும் இந்த இரு சாதனங்களே.
விழாவில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை. ஆப்பிள் நிறுவனம் இதனையே ஒரு கேலியாக ஒரு வாக்கியத்தில் தந்துள்ளது. "Hey Siri, give us a hint."
ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில், மூன்றில் இரண்டு பங்கு, ஐபோன் விற்பனையிலிருந்து தான் கிடைக்கிறது. எனவே, ஐபோனில் வாடிக்கையாளர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க் கின்றனர் என்று அறிந்து நிறைவேற்றி வைப்பது ஆப்பிள் நிறுவனத்தின் கடமையாகிறது. உலக அளவில் மொபைல் போன் சந்தையில் தளர்வு ஏற்பட்ட போதிலும், பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தன் போன்களை ஆப்பிள் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், தன் டேப்ளட்கள் மீதும், வாடிக்கையாளர்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதை ஆப்பிள் தன் கவனத்தில் கொண்டுள்ளது. கடந்த ஆறு காலங்களில் இல்லாத வகையில், ஐபேட் சாதனத்தின் விற்பனை குறைந்துள்ளது. எனவே, வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்குத் தேவையானதாக, சற்றுப் பெரிய அளவில் தன் ஐபேட் சாதனத்தை வடிவமைத்துத் தர ஆப்பிள் முயற்சிக்கலாம்.
இந்த விழாவில், தன் சாதனங்களில், புதிய ஹார்ட்வேர் மேம்பாடு எதனையும் ஆப்பிள் தராது என அனைவரும் எண்ணுகின்றனர். அதற்குப் பதிலாக, சாதனங்களில் இயங்கும் சாப்ட்வேர் செயலிகளில் மாற்றங்களும் மேம்பாடும் இருக்கலாம். ஆப்பிள், ஐபோன் 4 எஸ் சாதனத்தில் அறிமுகம் செய்த, டிஜிட்டல் உதவியாளன் Siri செயலியில் மேம்பாட்டுக்கான
மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம். தன் புதிய சாதனங்களில் ForceTouch technology என்ற தொழில் நுட்பத்தினை அறிமுகம் செய்திடலாம். இந்த தொழில் நுட்பம், டிஸ்பிளே திரையில், நாம் அமைக்கும் வலிந்த தொடு உணர்ச்சி மற்றும் மென்மையான தொடு உணர்ச்சி என இரண்டுக்குமாக உள்ள வேறுபாட்டில், சில செயல்பாடுகளை புகுத்தலாம். இன்னும் சற்று அதி வேகமாக இயங்கக் கூடிய ப்ராசசர் கொண்டு வரப்படலாம். கேமராவில் மாற்றம் இருக்கலாம். மேலும் பல வண்ணங்களில் சாதனங்கள் அமைக்கப்படலாம். இருப்பினும், புதிய ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் ப்ளஸ் ஆகியவை அறிமுகமாகும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
புதிய ஆப்பிள் டிவி பெட்டி ஒன்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணைய இணைப்பு வழி செயல்படும் டிவி வசதி தரும் தொழில் பிரிவும் இதனுடன் அறிமுகமாகலாம். இவை எல்லாம், கடந்த ஜூனில் நடைபெற்ற டெவலப்பர் கருத்தரங்கில் காட்டப்படுவதாக இருந்தது. ஆனால், என்ன காரணத்தினாலோ, ஒத்தி போடப்பட்டன. எனவே, தற்போது இவை வெளிவரலாம். இதற்குக் காரணம், டிவி சேவை வழங்குவதற்குத் தேவையான காட்சி தொகுப்புகள் அந்த அளவிற்குத் தயாராக இல்லாததுதான் என்று பின்னால் தெரிய வந்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனம், இந்தக் கூட்டத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, தன் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட்களுக்கு என தனி அறிமுக விழாவினை ஆப்பிள் நடத்தும். ஐபோன் செப்டம்பரில் அறிமுகமானால், அக்டோபரில் ஐபேட் குறித்த செய்தி வெளியாகும். ஆனால், இந்த கூட்டத்தில் ஐபேட் புதிய மாடல் அறிமுகமாகும் எனப் பலர் அடித்துச் சொல்கின்றனர். 12.9 அங்குல அளவிலான ஐபேட் ப்ரோ வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X