மூன்று ஏக்கரில் கொய்யா..! மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம்..!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2015
00:00

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் உள்ளன. தண்ணீர் வந்தால் இருபோக விவசாயம் நடக்கும். தண்ணீர் வராவிட்டால் நிலைமை தலைகீழ் தான். மதுரையை பொறுத்தமட்டில் கிணற்று பாசனம் மூலம் நெல், வாழை போன்ற பாரம்பரிய விவசாயம் நடக்கிறது. "பாரம்பரிய விவசாயத்தில் எதிர்பார்த்த லாபத்தை எதிர்பார்க்க இயலாது. "வந்தால் வரவு; போனால் செலவு' என்ற நிலையிலேயே நெல், வாழை சாகுபடியில் ஈடுபட முடியும்,' என்கின்றனர் அனுபவம் வாய்ந்த விவசாயிகள். இந்த வரிசையில் மதுரை நெடுமதுரையை சேர்ந்த விவசாயி மொக்கச்சாமி,60, விவசாயத்தில் புதுமையை புகுத்தி லாபம் ஈட்டி வருகிறார்.
மதுரையின் வறட்சி பகுதிகளில் நெடுமதுரை, வலையங்குளம், சோளங்குருணி, குரண்டி, திருமங்கலம் பகுதிகள் முதலிடம் வகிக்கிறது. இவற்றில் 99 சதவீத விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் மல்லிகை விளைவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் நெல், வாழை, மா போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளனர். துணிச்சல் மிக்க மொக்கச்சாமி, மூன்று ஏக்கர் நிலத்தில் கொய்யாவை விளைவித்து விவசாயத்தை லாபகரமாக மாற்றியுள்ளார். தவிர மா, தேக்கு தோட்டங்களையும் வைத்துள்ளார்.
மொக்கச்சாமி கூறியதாவது: ஒட்டு வகை, குட்டை ரகத்தை சேர்ந்த "லக்னோ 49' மற்றும் ஒட்டு வகை, நெட்டை ரகத்தை சேர்ந்த "லக்னோ 47' ஆகிய கொய்யா நாற்றுகளை தேனி மாவட்டம் பெரியகுளம் தனியார் பண்ணையில் இருந்து வாங்கினேன். முதலில் சோதனை அடிப்படையில் வளர்த்தேன். மரத்தில் காய்கள் பூத்து குலுங்கின. அடுத்ததாக மூன்று ஏக்கரில் கொய்யா தோட்டம் அமைத்தேன். மருந்து செலவு தவிர்த்து மாதம் சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
நெல், வாழை போல் அதிகபடியான பராமரிப்பு கொய்யாவில் இல்லை. அடிஉரம், மேல்உரம் மற்றும் பூ பூக்கும்போது ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால் போதுமானது. போர்வெல் மூலம் கிணற்றிற்குள் தண்ணீர் பாய்ச்சி மீண்டும் மோட்டார் வைத்து உறிஞ்சி தோட்டத்துக்கு பாய்ச்சுகிறேன். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண் நிலம் என்பதால் விளைச்சல் அமோகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 கிலோ காய்கள் கிடைக்கிறது. முறையாக பராமரித்தால் பத்து முதல் 13 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். தோட்டத்துக்கே வந்து சீசனுக்கு ஏற்ப கிலோ 20 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி சென்று 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கின்றனர். மதுரையின் தெற்குப்பகுதியில் கொய்யா விவசாயத்தை லாபகரமாக நான் மட்டுமே மாற்றியுள்ளேன். அடுத்ததாக சொட்டு நீர் பாசனம் மூலம், கொய்யா விவசாயத்தை விரிவாக்கவுள்ளேன் என்றார். தொடர்புக்கு 95432 34975.
-கா.சுப்பிரமணியன், மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X