கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2015
00:00

கேள்வி: லெனோவா டேப்ளட் பி.சி.ஒன்று எனக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதுதான் நான் பயன்படுத்தும் முதல் டேப்ளட் பி.சி. இதனை இயக்கி சில லிங்க்குகளில் உள்ள பைல்களை இயக்க முயற்சிக்கையில், சில இணைய தளங்களுக்குச் செல்கையில், ப்ளாஷ் இணைந்த பிளேயர் இல்லை என்றும், அதனை டவுண்லோட் செய்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. டவுண்லோட் செய்திட முயற்சி செய்தால், ப்ளாஷ் கிடைப்பதில்லை. எங்கு பிரச்னை உள்ளது எனத் தெரியவில்லை. இதனை எப்படி சமாளிக்கலாம்?
என். காசிநாதன், வில்லாபுரம், மதுரை.
பதில்:
உங்கள் டேப்ளட் பி.சி.யின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஆக இருக்க வேண்டும். டேப்ளட் பி.சி.க்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 4.1 மற்றும் அதன் பின்னர் வெளியானதாக இருந்தால், இந்த பிரச்னை இருக்கும். அடோப் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான தன் ப்ளாஷ் பிளேயரைப் புதுப்பிப்பதை நிறுத்திவிட்டது. இது நடந்தது சென்ற 2011 நவம்பர். அதற்கு முன்னர் ப்ளாஷ் பிளேயரில் இயங்குபவை இன்றும் இயங்கும். ஆனால், இதன் பின்னர் வந்தவை இயங்காது. பழைய ப்ளாஷ் பிளேயருக்கு அவ்வப்போது அப்டேட் பைல்களும் கிடைக்கின்றன. எனவே, தற்போதைய ஆண்ட்ராய்ட் இயங்கும் டேப்ளட் பி.சி.களில், ப்ளாஷ் பிளேயர் என்பது இல்லாத ஓர் அம்சமாகவே மாறிவிட்டது.
ஆனால், நீங்கள் கட்டாயம் ப்ளாஷ் பிளேயர் தேவைப்படும் பைல்களை இயக்க வேண்டும் எனில், Puffin எனப்படும் பிரவுசரில் இயக்கலாம். இந்த பிரவுசர் https://play.google.com/store/apps/details?id=com.cloudmosa.puffin&hl=en என்ற முகவரியில், தரவிறக்கம் செய்திட இலவசமாகக் கிடைக்கிறது.

கேள்வி: கம்ப்யூட்டரில் நான் உருவாக்கும் பைல்களை எப்போதும் பேக் அப் காப்பியாக என் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவில் சேமித்து வைக்கிறேன். கம்ப்யூட்டரை ஏதேனும் வைரஸ் கைப்பற்றி அது கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினைக் கெடுக்கும் நிலையில், அது போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவில் பதிந்துள்ள பைல்களையும் பாதிக்குமா? என் பணிக்காக, போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினை எப்போதும் கம்ப்யூட்டருடன் இணைத்த நிலையிலேயே வைத்திருக்கலாமா?
ஆர். ராகவ் சுந்தர், கோவை.
பதில்
: உங்களுடைய கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு, அதனால், பயனற்ற நிலையை அடைந்தால், அது கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினைப் பாதிக்காது. ஆனால், கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியில் பிரச்னை ஏற்பட்டு, அதிக அழுத்தமுள்ள மின்சக்தி பாய்ந்தால், அப்போது போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் சாதனமும் பாதிக்கப்பட்டு, பைல்களை இழக்க நேரிடலாம். வைரஸ், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவினைத்தான் முதலில் பாதிக்கும். ஆனால், பாதிப்படைந்த ஹார்ட் டிஸ்க்கிலிருந்து, உங்கள் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றப்படும் பைல்களுடன் அந்த வைரஸ் இருந்து, அதுவும் மாற்றப்படும் நிலையில், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவும், அதில் உள்ள பைல்களும் பாதிக்கப்படலாம்.
தொடர்ந்து நீங்கள் உருவாக்கும் அனைத்து பைல்களையும், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவில் பதிந்து வைக்கும் தேவை உங்களுக்கு இருந்தால், இதனை எப்போதும் இணைத்து வைத்துப் பயன்படுத்தலாம். இல்லை எனில், பணி முடிந்த பின்னர், இரவில் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினை இணைத்து, அனைத்து புதிய பைல்களையும் பேக் அப் எடுத்துக் கொள்ளலாமே. தொடர்ந்து இணைப்பில் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினை வைப்பது நல்லதல்ல. தேவையுமல்ல. மேலும், கம்ப்யூட்டர் செயல்படும் போது ஏற்படும் வெப்பம், உங்கள் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினையும் பாதிக்கலாம். அதனாலேயே, சில நிறுவனங்கள் தங்கள் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினை எப்போதும் இணைத்து வைக்கக் கூடாது என அறிவுறுத்துகின்றன.

கேள்வி: பேஸ்புக்கினை நான் தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறேன். என் உறவினர்களும் நண்பர்களும் அதில் உள்ளனர். அவர்களிடமிருந்து புதிய தகவல்கள் கிடைக்கின்றன. பேஸ்புக் மூலமும் வைரஸ் பரவும் என்று என் நண்பர் கூறி வருகிறார். இது உண்மையா? இது எனக்குக் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தயவு செய்து இதனைத் தெளிவாக்கவும்.
இராச. காவிரிநாடன், தஞ்சாவூர்.
பதில்:
பேஸ்புக் என்பது வைரஸ் உள்ள தளம் அல்ல. இதனை உறுதியாகச் சொல்லலாம். இதில் உங்களைப் பதிவு செய்து, உங்கள் உறவினர்களின், நண்பர்களின் தளங்களைப் பார்ப்பதனால், நிச்சயம் வைரஸ் உங்கள் கம்ப்யூட்டருக்கு வராது. ஆனால், அதில் அவர்கள் ஏதேனும் ஒரு பைல் அல்லது இணையதளத்திற்குத் தொடர்பினை வழங்கி, அதில் கிளிக் செய்து, அந்த தளம் மூலம், அல்லது பைல் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸ் அல்லது மால்வேர் பரவலாம். அதற்கு வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, இங்கு கிளிக் செய்தால், ஐ பேட் இலவசம். அழகிகளைக் காண இங்கு கிளிக் செய்திடுங்கள் என வரும் விளம்பரங்கள் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டருக்கு மால்வேர் போன்ற பிரச்னைகளைக் கொண்டு வந்து தரும். எனவே, எந்த லிங்க்கிலும் கிளிக் செய்திடாமல், நீங்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்தலாமே.

கேள்வி: பிரவுசர்களில் லைட் வெய்ட் பிரவுசர் என (Lightweight Browser) தனி வகை உண்டா? அதில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியுமா? அப்படிப்பட்ட பிரவுசர்கள் எவை?
எஸ். சிக்கந்தர், கும்பகோணம்.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் Lightweight Browser என்பது, வழக்கம்போல நாம் பயன்படுத்தும் பிரவுசர்களே. ஒரு பிரவுசர் அது செயல்படுகையில், தான் இயங்க, கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் திறன்களைக் குறைவாக, அதாவது ராம் மெமரி, ஸ்டோரேஜ் மெமரி போன்றவற்றை, பயன்படுத்தினால், அது லைட் வெயிட் பிரவுசர் என அழைக்கப்படும். பொதுவாக, மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்படும் பிரவுசர்களை, இது போல விளம்பரம் செய்கின்றனர். இவை வேகமாக இயங்க,
சில வேளைகளில், இணையத்திற்கென இருக்கும் சில வரையறைகள் மீறப்படலாம்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட் தயாரித்த பின்னர், எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகளைத் திருத்துகையில், சில பிழைகளை அந்த டாகுமெண்ட்டில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாமென்று (Ignore) அமைத்து பிழைகளைத் திருத்துகிறேன். ஆனால், நான் எடுத்துக் கொள்ள வேண்டாமென்று அமைத்த சிலவற்றில் பிழைகளை மீண்டும் திருத்த சென்றால், வேர்ட் அவற்றை பிழையாகக் காட்ட மறுக்கிறது. இது ஏன் ஏற்படுகிறது? மாற்ற வேண்டுமானால் என்ன செய்திட வேண்டும்?
என். சுந்தர மூர்த்தி, கோவை.
பதில்:
டாகுமெண்ட் ஒன்றில், நீங்கள் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைத் திருத்த முயற்சி எடுக்கையில், உங்கள் முடிவுகளை வேர்ட் தன் நினைவில் வைத்துக் கொள்கிறது. அதனால் தான், அடுத்த முறை, மீண்டும் அவற்றை பிழை என்று சுட்டிக் காட்டாமல் செல்கிறது. ஏற்கனவே மேற்கொண்ட முடிவுகளை வேர்ட் மறந்து, பிழைகளச் சுட்டிக் காட்ட வேண்டும் என எண்ணினால், கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டன் அழுத்தில், பின் Word Options என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின் Options என்ற இடத்தில் கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது புறம் Proofing என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. தொடர்ந்து Check Document (வேர்ட் 2007) அல்லது Recheck Document (வேர்ட் 2010) என்பதில் கிளிக் செய்திடவும். உடன், இன்னொரு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில் நீங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சோதனை செய்திட விரும்புகிறீர்களா என்ற கேள்வி நீளமான கட்டத்தில் காட்டப்படும்.
4. இதற்கு Yes என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து OK என்பதில் கிளிக் செய்து, வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.
இந்நிலையில், வேர்ட் டாகுமெண்ட்டில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியாது. மீண்டும் ஒரு முறை எழுத்துப் பிழை அறிய சோதனை நடத்தினால், உடன் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் என்று முன்பு ஒதுக்கிய பிழைகள் இப்போது காட்டப்படும்.

கேள்வி: பெர்சனல் கம்ப்யூட்டரில், லேப்டாப் கம்ப்யூட்டரில், இணையத்தைப் பயன்படுத்துகையில், நாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும், இணைய தள முகவரிகள் பதிந்திருப்பதை ஹிஸ்டரி பிரிவு சென்று அழிக்கிறோம். ஆனால், ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இந்த இணைய தள முகவரிகளை அழிக்க முடியுமா? அதற்கான செயல்முறை வழிகளைப் படிப்படியாகக் கூறவும்.
என். சுப்பிரமணியன், தேவாரம்.
பதில்:
பலரின் மனதில் இருக்கும் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி. இணையத்தில் தள முகவரிகள் மட்டுமின்றி, நாம் பார்த்த யு ட்யூப் படங்கள், கூகுள் பிளே ஸ்டோரில் தேடியவை, புத்தகங்கள் போன்ற அனைத்து தேடல்களும் பதியப்படுகின்றன. ஸ்மார்ட் போனில், இலவசமாக எந்த அப்ளிகேஷனையோ அல்லது ஒரு பொருளையோ பெற்றாலும், அது தளம் சார்ந்து பதியப்படுகிறது. தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன்கள் “My Apps” என்ற பட்டியலில் இடம் பெறும். இந்த பட்டியல் நாளுக்கு நாள் தொடர்ந்து வளரும். எனவே, இந்தப் பதிவுகளை அவ்வப்போது நீக்குவதும் நல்லதே. இதற்கு ஹோம் ஸ்கிரீனில், கூகுள் பிளே ஸ்டோர் ஐகான் அழுத்தி, பிளே ஸ்டோர் செல்லவும். அங்கு மேலே, இடது புறம் சிறிய மூன்று கோடுகள் ஒரு சிறிய படமாகத் தெரியும். அதனைத் தொட்டு இயக்கவும். அங்கு ஒரு மெனு கிடைக்கும். அதில், “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில் “Clear local search history” என்று இருக்கும் இடத்தைத் தொட்டு இயக்கவும். உங்கள் தேடல் பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும். ஆனால், நீக்கப்பட்டுவிட்டதா என உங்களுக்குத் தகவல் கிடைக்காது. மீண்டும் தேடல் கட்டம் சென்று, எதனையேனும் தேட முயற்சிக்கையில், பழைய தேடல்கள் காட்டப்படவில்லை என்றால், அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், ரோ (Row) ஒன்றுக்கு மேலாக அல்லது கீழாகத் திடீரென ஒரு வரிசையைச் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு மேலே மெனு சென்று, இன்ஸெர்ட் தேடி செயல்படுகையில், பல நேரங்களில் தவறாக புதிய வரிசை கிடைக்கிறது. அல்லது வரிசை இணைக்கப்படுவதே இல்லை. கீ போர்ட் மூலம் இதனை மேற்கொள்ள ஷார்ட் கட் கீ உள்ளதா என எப்1 அழுத்திப் பார்த்தேன். அதிலும் விடை கிடைக்கவில்லை. இதற்கான வழி கூறவும்.
ஜே. முத்துராஜா, தேனி.
பதில்:
கீ போர்டை மட்டுமே பயன்படுத்தி, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், படுக்கை வரிசை ஒன்றுக்கு மேலாக அல்லது கீழாக ஒரு வரிசையை இணைக்கலாம். முதலில், எந்த வரிசைக்கு மேல் அல்லது கீழ் இன்னொரு வரிசையைச் சேர்க்க விரும்புகிறீர்களோ, அதில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஷிப்ட் மற்றும் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். இப்போது முழு வரிசையும் தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+ '+' கீயை அழுத்தவும். இந்த + கீ எழுத்துக்கள் மேலாக உள்ள கீ. நம்பர் பேடில் உள்ள கீ அல்ல. இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசைக்கு மேலாக, புதியதொரு வரிசை தோன்றியிருப்பதைக் காணலாம்.
இன்னொரு வழியும் உள்ளது. தொடர்பான வரிசையில் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஆல்ட் + 'ஐ' கீயை அழுத்திப் பின்னர் 'ஆர்' கீயை அழுத்தவும். தேர்ந்தெடுத்த செல் இருக்கும் வரிசைக்கு மேலாக ஒரு வரிசை இடைச் செருகப்படும்.

கேள்வி: சிகிளீனர் புரோகிராமினை எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். இது மால்வேர் அல்லது வைரஸ்களை நீக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகவும் செயல்படுமா? அதற்கான செட்டிங்ஸ் என்ன?
ஆர். பாக்யலட்சுமி, பழனி.
பதில்
: சிகிளீனர் என்னும் புரோகிராம், நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் ஏற்படும் தேவையற்ற தற்காலிகப் புரோகிராம்களை நீக்கும் ஒரு புரோகிராம் ஆகும். கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் ஏதேனும் தவறான குறியீடுகள், சில புரோகிராமினால் ஏற்படுத்தப்பட்டால், அவற்றையும் நீக்கும். இணையத் தேடலில் ஏற்படும் பதிவுகளை நீக்கும். எவை எல்லாம் நீக்கும் என்பதனை இந்த புரோகிராம் தொடங்கியவுடன் இடது பக்கம் உள்ள பட்டியலில் பார்த்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் வகையில், இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகச் செயல்படாது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X