சின்ன சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2015
00:00

பேசிலோ மைசிஸ்: இது ஒரு நூற்புழுவை (நெமெட்டோட்ஸ்) கட்டுப்படுத்தும் பூசாணமாகும். எல்லாவிதமான மலைத்தோட்டப்பயிர்களும் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், சவ்சவ்) பல வகையான நூற்புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்பட்டு செடிகள் மடிகின்றன. இந்த பேசிலோமைசிஸ் பூஞ்சாணம் அந்த நூற்புழுக்களை முட்டையிலிருந்து கடைசி பருவம் வரை தாக்கி அழிக்கிறது. இந்த வகையான நூற்புழுக்கள் பயிரின் வேரை அழிப்பதனால் அழுகல் நோய் உண்டாகக் கூடிய பூஞ்சாணங்கள் மிகவும் எளிதாக பயிர்களை தாக்க ஏதுவாகிறது. பேசிலோமைசிஸ்ஸை நிலத்தில் இடுவதன் மூலம் நூற்புழு மற்றும் வேர் அழுகல் நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.
மலைத்தோட்டப்பயிர்களில் விதை நேர்த்தி செய்வதற்காக டிரைபோமிக்ஸ் என்ற புதிய இயற்கை வழி மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் பயிர்களைத் தாக்கக் கூடிய அழுகல் நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. உருளைக்கிழங்கிற்கு டிரைபோமிக்ஸ் 1 கிலோவிற்கு 1 கிராம் வீதம் வழக்கமான முறையில் விதைநேர்த்தி செய்து விதைக்கவும். நிலத்திற்கு அசோஸ்பைரில்லம் - 2 கிலோ, பாஸ்போ பாக்டீரியா- 2 கிலோ, டிரைகோடெர்மா - 2 கிலோ, பேசிலோமைசிஸ் - 2 கிலோ அல்லது டிரைபோமிக்ஸ் - 3 கிலோ அளவில் இட்டு கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் மற்றும் சவ்சவுக்கும் பயன்படுத்தலாம்.

திறன்மிகு நுண்ணுயிர்கள்: நுண்ணுயிர்கள் இருவகைப்படும். அதாவது தீமை பயக்கும் நுண்ணுயிர்கள் (நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுண்ணுயிர்கள் போன்றவை) மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள். திறன்மிகு நுண்ணுயிர்கள் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் வகையைச் சார்ந்ததாகும். ஜப்பான் நாட்டில் ஒகினவாபில் உள்ள நியூக்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஹிகா என்பவர் அற்புதமான திறன்கொண்ட நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் கூட்டுக் கலவையை கண்டறிந்து அதற்கு திறன்மிகு நுண்ணுயிர்கள் என்று பெயரிட்டார். தொழு உரம், மக்கு உரம் போன்ற பெரும்பாலான உரங்களில் அதிக அளவிலான நுண்ணுயிர்கள் உள்ளன. இந்நுண்ணுயிர்களை மண்ணில் இடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
இத்திறன்மிகு நுண்ணுயிர்களை நடவு செய்த முதல் 3-4 வாரங்களுக்கு 8-10 நாட்கள் இடைவெளியில் மண்ணில் இடுவதால் இளம் நாற்றுகள் வறட்சி, வெப்பம், நோய் மற்றும் களை போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களை எதிர்கொண்டு வளரும் திறனை பெறுகின்றது. (தகவல் : முனைவர் ர.பரிமளாதேவி, முனைவர் அ.பரணி, வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி : 0422 - 661 1206).

சீமைக்கருவேல்: மரங்களை இலவசமாக அழித்துக் கொடுக்கிறார்கள். "ஏனாதி' பூங்கதிர்வேல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமைக்கருவேல் ஒழிப்பு இயக்கம் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தாலும், நகராட்சி தலைவர், பொதுமக்கள் கையெழுத்தும் போட்டு விண்ணப்பம் அனுப்பினால் அடுத்த 10 நாட்களில் வேலையை தொடங்கி விடுகிறார்கள். சீமைக்கருவேல் மரங்களை விற்பனை செய்யுறது மூலமோ கிடைக்கிற தொகையை செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சீமைக்கருவேலிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று தெரிவிக்கிறார் சேலம், ஆத்தூரைச் சேர்ந்த அண்ணாத்துரை. அலைபேசி : 99655 58220. சீமைக்கருவேலின் வேர் அதிக பட்சம் 12 மீட்டர் தூரம் வரை போகும். நிலத்தடியில் உள்ள நீரை உறிஞ்சுவதும், ஒளிச்சேர்க்கைக்காக காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஓரளவுக்கு உறிஞ்சுவதும் வறட்சியைத் தாங்கி வளரும். அனைத்து தாவரங்களுக்குமான பொதுவான குணம். ஆனால் சீமைக்கருவேல் மரத்தால் தமிழகம் பாலைவனமாகி விடும் என்பதெல்லாம் அதீத கற்பனை. இப்போதும் தென் தமிழகத்தில் இம்மரத்தை விதைத்து குத்தகைக்கு விடும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு முனைவர் பார்த்திபன், பேராசிரியர் மற்றும் தலைவர் வனக்கல்லூரி த.வே.ப.கழகம், மேட்டுப்பாளையம். தொலைபேசி : 04254 - 271 541.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X