எச்.பி.நிறுவனத்தின் முதல் டேப்ளட் பிசி | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
எச்.பி.நிறுவனத்தின் முதல் டேப்ளட் பிசி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2010
00:00

வர்த்தகம் மற்றும் அலுவலகப் பிரிவுகளில் இயங்குபவர்களை இலக்காகக் கொண்டு, ஹ்யூலட் பேக்கார்ட் நிறுவனம், தன்னுடைய முதல்  டேப்ளட் பிசியினை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் விற்பனைக்கு வந்திருக்கும் இதன் விலை ஏறத்தாழ 800 டாலராகும்.  மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம் என்றாலும், மற்றவை ஒரு ஸ்மார்ட் போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகத் தோற்றமளிக்கும் வேளையில், இது ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் போலவே இயங்குகிறது. இதில், பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இயங்கும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிக்கப்பட்டுள்ளது.
இதன் திரை 8.9 அங்குல அகலம் உடையது. இது ஒரு மல்ட்டி டச் செயல்திறன் கொண்டது. 64 கிகா பைட் கொள்ளளவு கொண்டது. இதனுடன் இணைத்து இயக்க ஒரு ஸ்டைலஸ் பேனா தரப்படுகிறது. இதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், ஐந்து மணி நேரம் இயங்க திறன் அளிக்கிறது. வை-–பி இணைப்புக்கான வசதி உள்ளது. ஆனால் ஐ–பேட், சாம்சங் கேலக்ஸி மற்றும் டெல் ஸ்ட்ரீட் டேப்ளட் பிசிக்களில் உள்ளது போல செல்லுலர் நெட்வொர்க் இணைப்பிற்கு வழி தரப்படவில்லை.  இது ஸ்லேட் வடிவில் உள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் தான். இதில் உங்கள் அலுவலக கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் என்று எச்.பி. நிறுவன அதிகாரி கூறியுள்ளார். 
இந்த டேப்ளட் பிசியில் முன்னும் பின்னும் இரு கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் வீடியோ  கருத்தரங்கினை எளிதாக மேற்கொள்ளலாம். இதில் யு.எஸ்.பி. போர்ட்டும் தரப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவிலும் விற்பனைக்கு வெளியாகும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X