செப்டம்பர் 14ல், மோட்டாரோலா நிறுவனம் Moto X Play என்ற தன் புதிய மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. இது கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இதன் திரை 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன் 5.5 அங்குல அளவில் அமைந்துள்ளது. இதற்கென, கொரில்லா கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 615 ப்ராசசர் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியைப் பொறுத்தவரை, இரண்டு மாடல்களில், 16 மற்றும் 32 ஜி.பி. தரப்பட்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. ஆக உயர்த்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1.1 லாலி பாப்.
டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 21 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. இதன் வீடியோ பதியும் திறன் 1028 பி. முன்புற செல்பி கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது.
இதன் பரிமாணம் 148 x 75 x 8.9-10.9 மிமீ. எடை 169 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., 3ஜி, வை பி, புளுடூத் 4.0., மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 3630 mAh திறன் கொண்டதாக உள்ளது. ப்ளிப் கார்ட் நிறுவனம், Moto X Play போனுக்காகவே தனியாக இணையப் பக்கம் ஒன்றை வடிவமைத்து இயக்கி வருகிறது.