இந்தியாவில் பிரபலமான இணைய தளங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2015
00:00

இணையம் என்பது நம் வாழ்வில் ஒன்றாக இணைந்துவிட்டது. பெரும்பாலான மக்கள் நேரடியாக இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்றவர்கள், ஏதேனும் ஒரு வகையில், இணையத்தின் தாக்கத்தை அனுபவித்து வருகின்றனர். இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், ஏதேனும் பொருட்கள் வாங்க, விற்க வர்த்தக ரீதியில் இயங்கும் தளங்களுக்குச் செல்கின்றனர். சிலர், சமூக வலைத் தளங்களில், தாங்கள் விரும்பிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சில மணித்துளிகளாவது தினந்தோறும் செலவிடுகின்றனர். வேலை தேட, தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண என ஏதாவது ஒரு காரணம், மக்களை இணையத்துடன் இணைக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, உலக அளவில், அதிகமான எண்ணிக்கையில் இணையப் பயனாளர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. தற்போது 24.3 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற ஆண்டைக் காட்டிலும், தற்போது 19.19% பேர் கூடுதலாக, இணையப் பயனாளர்களாக இணைந்துள்ளனர். இதனாலேயே, இந்திய இணைய தளங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், இந்திய மக்களிடையே எந்த இணைய தளங்கள் பிரபலமாகப் பயன்பாட்டில் உள்ளன என்று ஓர் ஆய்வு எடுக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு முதல் அடிப்படை, இணைய தளங்களின் பயன்பாட்டினை, உலக அளவில் கணித்து வரும் அலெக்ஸா (Alexa) இணைய தளமாகும். அடுத்து, கடந்த ஆறு மாதங்களில், இந்தியாவில் வசிப்போர் பார்த்த இணைய தளங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதே நேரத்தில், பட்டியலில் முதல் சில இடங்களைப் பிடித்த இணைய தளங்கள், உலக அளவில் இத்தகைய பட்டியலில் எந்த இடத்தைக் கொண்டுள்ளன என்பதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அலெக்ஸா இணைய கணக்கெடுப்பு, பல்வேறு தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதாகும். எனவே, பட்டியலில் ஓர் இணைய தளத்திற்கான இடமும், அலெக்ஸா தந்துள்ள இடமும் வெவ்வேறாக இருக்கும். இந்திய மக்களின் இணையத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளை இங்கே காணலாம்.
1. Flipkart.com: பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது, வர்த்தக ரீதியாக இயங்கும் இணைய தளமான ப்ளிப் கார்ட் டாட் காம் ஆகும். கணக்கெடுப்பட்ட ஆறு மாதங்களில், இதனைப் பார்த்த இந்தியர்களின் எண்ணிக்கை 8.71 கோடியாகும். இந்தியாவில் இயங்கும் இணைய தளங்களில் இது 6 ஆவது இடத்தையும், உலக அளவில் 79 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவில், வர்த்தக ரீதியான இயங்கும் தளங்களில் முதலில் தோன்றியது இது. 1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தளம், கேமரா, கம்ப்யூட்டர் துணை சாதனங்கள், ஹெட் போன் போன்ற டிஜிட்டல் எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த தளம் தற்போது செய்திகள், தகவல்கள், வேலை வாய்ப்பு விளம்பரங்கள் ஆகியவற்றிற்கும் இடம் அளித்து வருகிறது.
2. Indiatimes.com: இதனைச் சென்ற ஆறு மாதங்களில் பார்த்த இந்தியர்களின் எண்ணிக்கை 7.85 கோடி. இந்தியாவில் இயங்கும் மீடியா நிறுவனங்களில், முன்னணியில் உள்ளது இந்தியா டைம்ஸ் டாட் காம். 1996 ஆம் ஆண்டு, இந்த செய்தி தகவல் தளம் நிறுவப்பட்டது. இந்தியா குறித்த செய்திகளுக்கு, பன்னாட்டளவில் பலரும் பார்ப்பதில் முதலிடம் பெறுகிறது. செய்திகள், வேலை வாய்ப்பு விளம்பரங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் போன்ற அனைத்திற்கும் இதில் இடம் தரப்பட்டுள்ளது. இந்திய அளவில், 12 ஆவது இடத்திலும், உலக அளவில் 109 இடத்திலும், அலெக்ஸா இதனைப் பட்டியலிட்டுள்ளது.
3. Amazon.in: பன்னாட்டளவில் புகழ் பெற்ற வர்த்தக இணைய தளமான அமேஸான் நிறுவனத்தின் இந்திய தளம் இது. மக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் பெரும்பாலும் இதில் கிடைக்கின்றன. 7.78 கோடி பேர் கடந்த ஆறு மாதங்களில் இதனைப் பார்த்துள்ளனர். பல்வேறு பிரிவுகளில் நுகர்வோர் பொருட்கள் வழங்கப்படுகின்றன. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நூல்கள் என இந்த தளம் விற்பனை செய்திடும் பொருட்கள் பலவாரியாக விரிகின்றன. அண்மையில் Amazon Fashion Store என்ற ஒரு கடைப் பிரிவும் இதில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளம், கருணையின் அடிப்படையில் பொருட்களைத் தானமாகத் தர விரும்புபவர்களுக்கு, தனியே ஒரு பிரிவினை Gift A Smile என்ற தலைப்பில் தருகிறது. இந்திய அளவில் இதன் இடம் 7; பன்னாட்டளவில் இதன் இடம் 91.
4. Rediff.com: மாதந்தோறும் சராசரியாக 5.05 கோடி பேர் பயன்படுத்தும் தளம் இது. 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தளத்தில், Rediff Song Buzz, Rediff Bol, and Rediff Locale என்ற பிரிவுகள் மக்களிடையே பிரபலமானவை. இந்த பிரிவுகள் தரும் பொருட்கள் அனைத்தும், இந்திய அளவில் மட்டுமின்றி, பன்னாட்டளவிலும் புகழ் பெற்றவை ஆகும். அண்மையில், Rediff Deal Ho jaye என்ற பெயரில் ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 27 ஆவது இடத்தையும், பன்னாட்டளவில் 334 ஆவது இடத்தையும், அலெக்ஸா கணிப்பில் இந்த தளம் பெற்றுள்ளது.
5. Torrentz.in: டாரண்ட் பைல்களுடன் (torrent files) திரைப்படங்கள், நூல்கள், புரோகிராம்கள், இசை மற்றும் மக்கள் விரும்பும் அனைத்தையும் தருகிறது இந்த தளம். சென்ற ஆறு மாதங்களில், இதனைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 4.36 கோடி. இந்திய அளவில் 20 ஆவது இடத்தையும், பன்னாட்டளவில் 506 ஆவது இடத்தையும் இந்த தளம் பெற்றுள்ளது.
6. Snapdeal.com: இந்தியா முழுவதும் மிகப் பிரபலமான வர்த்தக இணைய தளம். சென்ற ஆறு மாதங்களில் 4.16 கோடி பேர் இதனைப் பார்த்துள்ளனர். பல பிரிவுகளில், ஏறத்தாழ 40 லட்சம் பொருட்களை விற்பனை செய்கிறது. பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இதில் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரம். இந்தியாவில் 5,000க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய நகரங்களுக்கு பொருட்களை வழங்குகிறது. இந்திய அளவில் 13 ஆவது இடத்தையும், பன்னாட்டளவில் 170 ஆவது இடத்தையும் இந்த தளம் பெற்றுள்ளது.
7. NDTV.com: ஆறு மாத காலத்தில்,4.05 கோடி பேரைத் தன்பால் ஈர்த்த தளம் இது. இந்திய அளவில் 23 ஆவது இடத்தையும், பன்னாட்டளவில், 245 ஆவது இடத்தையும் கொண்டுள்ளது. இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுவனம், 1988 ஆம் ஆண்டில் பிரணாய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது. New Delhi Television என்பதன் சுருக்கமே NDTV என்பதாகும். இந்தியாவில், இணையத்தில் மிகச் சிறந்த செய்தி தளமாக இது மதிக்கப்படுகிறது.
8. HDFCBank.com: சென்ற ஆறு மாதங்களில், 3.81 கோடி பேரால் பயன்படுத்தப்பட்ட எச்.டி.எப்.சி. வங்கியின் இணைய தளம் இது. இந்தியாவில் 16 ஆவது இடத்தையும், பன்னாட்டளவில், 283 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவின் ஐந்தாவது மிகப் பெரிய வங்கி, எச்.டி.எப்.சி. வங்கியாகும். பன்னாட்டளவில் பயன்படுத்தக் கூடிய டெபிட் கார்டினை முதன் முதலில் இந்தியாவில், VISA நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்திய பெருமையைக் கொண்டது இந்த வங்கி. இந்திய நகரங்களில் அதிகம் விரும்பப்படும் வங்கியாகப் பெயர் பெற்றது. இந்தியாவின் 2,000க்கும் மேற்பட்ட நகரங்களில், 3,251 கிளைகளையும், 11,177 ஏ.டி.எம். மையங்களையும் கொண்டது.
9. Naukri.com: 2.02 கோடி பேரால், ஆறு மாதங்களில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் 38ஆவது இடத்தையும், பன்னாட்டளவில், 459 ஆவது இடத்தினையும் இந்த தளம் கொண்டுள்ளது. Info Edge (India) Ltd என்ற நிறுவனம், 1997ல் இதனை நிறுவியது. வேலை வாய்ப்புகளைத் தேடுவோருக்கு இந்த தளம் மிகப் பெரிய அளவில் சேவை செய்து வருகிறது. இதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் சேவைக்குப் பல விருதுகளை வென்றுள்ளது.
10. Intoday.in: சென்ற ஆறு மாதங்களில், 1.62 கோடி பேரால் பயன்படுத்தப்பட்ட தளம். இந்திய அளவில், 63 ஆவது இடத்தையும், பன்னாட்டளவில் 622 ஆவது இடத்தையும் கொண்டுள்ளது. “India Today Group” என்னும் மீடியா குழுமத்தின் இணைய தளம். இந்த தளத்தில், இக்குழுமத்தின் India Today Magazine, Business Today, and Aaj Tak News Channel ஆகிய இதழ்கள், செய்தி சேவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X