அண்மையில், தமிழக முதலமைச்சர், தமிழக கிராமங்களை இணைக்கும் வகையில், கிராமங்களுக்கான இணைய வசதிகளை, ரூ. 3,000 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது மத்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் அனைத்தும் ஆப்டிகல் பைபர் வழியாக இணைக்கப்பட்டு அரசின் சேவைத் தளங்கள் அனைத்தும், கிராம மக்களுக்குக் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். இதற்கென, “தமிழ்நாடு பைபர் நெட் வாரியம்” ஒன்று அமைக்கப்படும். அனைத்து கிராம ஊராட்சிகளும் பாரத் டாட் நெட் (Bharat Net) உடன் இணைக்கப்படும். அரசின் அமைப்பான, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் இதற்கான Internet Protocol Television (IPTV) ஐயும், பிராட்பேண்ட் நெட் இணைப்பினையும், குறைந்த கட்டணத்தில் வழங்கும்.