இரகசியமாக ஒரு டைரக்டரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2015
00:00

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நம் கம்ப்யூட்டரில் அமைக்கும் போது, இவை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் “System Reserved” என்று ஒரு பிரிவை உருவாக்குகின்றன. விண்டோஸ் இந்த பிரிவிற்கு எந்த ஒரு தனி ட்ரைவின் பெயரை அமைப்பதில்லை. எனவே, இதனை Disk Management போன்ற ஒரு பயன்பாட்டு கருவியைப் பயன்படுத்தினால் தான் நாம் பார்க்க முடியும்.
இந்த System Reserved Partition என்ற பிரிவு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதல் நடைமுறைக்கு வந்தது. எனவே, இதற்கு முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில் இதனைக் காண முடியாது. இதனை ஒட்டி வந்த விண்டோஸ் சர்வர் (Windows Serer 2008 R2) ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இது தரப்பட்டது.
இந்த சிஸ்டம் பிரிவு என்ன செய்கிறது?
இந்தப் பிரிவில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை:

Boot Manager and Boot Configuration Data: நம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், விண்டோஸ் பூட் மேனேஜர் (Boot Manager) தொடக்கம் இயங்கி, தொடக்க இயக்கத்திற்கான டேட்டாவினை Boot Configuration Data (BCD) Store இருந்து படிக்கிறது. நம் கம்ப்யூட்டர் சிஸ்ட த்திற்கான பிரிவிலிருந்து பூட் லோடரை இயக்குகிறது. அது, பின்னர், சிஸ்டம் ட்ரைவில் இருந்து விண்டோஸ் சிஸ்டத்தினை இயக்கத் தொடங்குகிறது.

பிட் லாக்கர் ட்ரைவ் சுருக்கத்திற்கான தொடக்க பைல்கள்: நீங்கள் பிட் லாக்கர் ட்ரைவ் சுருக்கத்திற்கான டூலை உங்கள் ஹார்ட் ட்ரைவிற்கெனப் பயன்படுத்த முடிவெடுத்திருந்தால், சிஸ்டத்திற்கான இந்த ஒதுக்கப்பட்ட பிரிவில், அதற்குத் தேவையான பைல்கள் இருக்கும். உங்கள் கம்ப்யூட்டர் சுருக்கி அமைக்கப்படாத பிரிவினை பூட் செய்கிறது. பின்னர், சுருக்கி அமைக்கப்பட்ட முதன்மை ட்ரைவினை, விரித்து, சுருக்கி வைக்கப்பட்ட விண்டோஸ் சிஸ்டத்தினை இயக்குகிறது.
நீங்கள் BitLocker drive encryption பயன்படுத்த விரும்பினால், இந்த சிஸ்டம் ரிசர்வ்ட் பார்ட்டிஷன் கட்டாயம் தேவைப்படும். வேறு வழியில் இது செயல்படவே முடியாது. மாறா நிலையில், முக்கியமான பூட் பைல்கள் இங்கு ஸ்டோர் செய்யப்படுகின்றன. நம்மால், விண்டோஸ் இயக்க பிரிவில் இவற்றை ஸ்டோர் செய்திட முடியும் என்றாலும், அவை இங்கும் ஸ்டோர் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.

விண்டோஸ் System Reserved Partition ஐ உருவாக்குகையில் என்ன நடக்கிறது?: இந்தப் பிரிவு, விண்டோஸ் 7 சிஸ்ட த்தில் 100 எம்.பி. இடத்தையும், விண்டோஸ் 8 சிஸ்ட த்தில் 350 எம்.பி. இட த்தையும் எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்படும் செயல்பாடுகளின் போது, கம்ப்யூட்டரின் ட்ரைவ் பிரிக்கப்படும் பொழுதே, இந்தப் பிரிவு உருவாக்கப்படுகிறது.
உங்கள் ட்ரைவில், பிரித்து ஒதுக்கப்படாத இடத்தில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான பிரிவினை, கிராபிகல் பார்ட்டிஷன் மேனேஜர் கொண்டு அமைக்கும்போது, நமக்கு “To ensure that all Windows features work correctly, Windows might create additional partitions for system files.” என ஒரு செய்தி தரப்படும். இதனை அடுத்து, விண்டோஸ், வழக்கமாக, சிஸ்டத்திற்கான முதன்மை இடத்தினைப் பிரிக்கும் முன்னரே, System Reserved partition ஐ உருவாக்கிக் கொள்ளும்.

System Reserved partition ல் உள்ள பைல்களை நம்மால் அழிக்க முடியுமா?: இந்த பிரிவில் உள்ள பைல்கள் மீது கை வைக்காமல் இருப்பதே நல்லது. மாறா நிலையில், உங்களுக்கு இதனைக் காட்டாமல், விண்டோஸ் உருவாக்கி வைத்துக் கொள்கிறது. அதனால் தான், அதற்கெனத் தனியே ஒரு ட்ரைவ் எழுத்தினைத் தருவதில்லை. பெரும்பாலான பயனாளர்களுக்கு, System Reserved partition என ஒரு பிரிவு இருப்பதே தெரியாது. பயன்படுத்தினாலோ, அல்லது பிற்காலத்தில் பயன்படுத்த திட்டமிட்டாலோ, இந்த Reserved partition பிரிவு ஒரு கட்டாயத் தேவையாகும். விண்டோஸ் விஸ்டாவில் இன்ஸ்டலேஷனுக்குப் பின்னர், இதனைத் தனியே உருவாக்கி அமைக்க வேண்டியிருந்தது. இப்போது, விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்படுகையில், ஒவ்வொரு ட்ரைவும் பிட் லாக்கர் அமைக்கப்படும் வகையில் தயார் செய்து வைக்கப்படுகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் இந்தப் பிரிவு அமைக்கப்படுவதனை நீங்கள் விரும்பாவிட்டால், முதலிலேயே அம் முயற்சியைத் தடுக்க வேண்டும். விண்டோஸ் System Reserved partition அமைக்க இடம் இல்லை என எடுத்துக் கொண்டு, விண்டோஸ் சிஸ்டத்தினை, ஒரே ட்ரைவ் பிரிவில் அமைக்கும். இந்த வகையில் செயல்பட வேண்டும் என்றால், கிராபிகல் டிஸ்க் பார்ட்டிஷனிங் டூல் தவிர மற்ற எதனையும் பயன்படுத்த வேண்டும். இதற்குக் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்படுகையில், Shift+F10 ஆகிய கீகளை அழுத்தவும். Command Prompt விண்டோ கிடைக்கும்.
2. இந்த கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில் diskpart என டைப் செய்து எண்டர் தட்டவும்.
3. இந்த diskpart டூலைப் பயன்படுத்தி, இதுவரை பிரிக்கப்படாத ஹார்ட் ட்ரைவின் இடத்தில், புதிய பிரிவினை உருவாக்கவும். எடுத்துக் காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு ட்ரைவ் இருந்தால், அது முற்றிலும் காலியாக இருந்தால், select disk 0 என டைப் செய்து,பின்னர் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது முதல் டிஸ்க் தேர்ந்தெடுக்கப்படும். இதன் பின்னர், ட்ரைவின் ஒதுக்கப்படாத இடத்தைப் பயன்படுத்தி, புதிய பார்ட்டிஷன் ஒன்றை உருவாக்கவும்.
4. தொடர்ந்து செட் அப் செயல்பாட்டினை மேற்கொள்ளவும். உங்களிடம் ஒரு புதிய பார்ட்டிஷன் ஒன்றை உருவாக்கவும் என்று கேட்கப்படும் போது, ஏற்கனவே முன்பு உருவாக்கிய பார்ட்டிஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. சிஸ்டம் ரிசர்வ்ட் பார்ட்டிஷனை நீக்க முடியும். ஆனால், பூட் லோடர் பைல்கள் அனைத்தும் அதில் ஸ்டோர் செய்யப்பட்டிருப்பதால், விண்டோஸ் அவை இல்லாமல் வழக்கம்போலத் தொடங்க இயலாது. எனவே, கட்டாயம் அதனை நீக்க வேண்டும் என முடிவு செய்தால், பூட் பைல்களை System Reserved பிரிவிலிருந்து விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் உள்ள சிஸ்டம் ட்ரைவிற்கு மாற்றிய பின்னரே, நீக்க முடியும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இது இன்னும் சற்று குழப்பமான செயல்பாடாகப் பின்பற்ற வேண்டியுள்ளது. விண்டோஸ் ரெகவரி சூழ்நிலையை முதலில் முடக்கி வைத்து, பின்னர் மீண்டும் இயக்க வேண்டியதிருக்கும். அதன் பின்னர், சிஸ்டம் ரிசர்வ் பார்ட்டிஷனை நீக்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் தேவையா என முடிவு செய்து கொள்வது நல்லது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraj - vellore,இந்தியா
22-நவ-201517:45:32 IST Report Abuse
selvaraj sir How to know password from wifi router through lan connection
Rate this:
Share this comment
Cancel
selvaraj - vellore,இந்தியா
22-நவ-201517:43:55 IST Report Abuse
selvaraj sir how to copy operating tems in to pendrive
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X