வீட்டு வை பி இணைப்பின் திறனை அதிகப்படுத்த
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 அக்
2015
00:00

வீடுகளில், பிராட்பேண்ட் இணைய இணைப்பு தற்போது இன்றியமையாத ஒன்றாக உருவாகிவிட்டது. அத்துடன், அதனை வீடுகளில் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களிலும் பங்கிட்டுப் பயன்படுத்த வை பி இணைப்பாக மாற்றிப் பயன்படுத்துவதும் பெருகி வருகிறது. வீட்டில் நாம் பெற்றிருக்கும் வை பி இணைப்பினை எப்படி, அதிகப் பயன் உள்ளதாக அமைக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

சரியான இடத்தில் வை பி ரெளட்டர்: வை பி இணைப்பு தரும் ரெளட்டர் சாதனத்தைச் சரியான இடத்தில் வீட்டில் அமைத்திட வேண்டும். சரியாக இணைப்பு கிடைக்காததற்கு, அது அமைக்கப்படும் இடமே முதல் காரணமாக இருக்கும். வீடுகளில் பயன்படுத்தப்படும் ரெளட்டர்கள், பொதுவாக, 100 அடி வரை தன் சிக்னல்களை அனுப்பும். எனவே, வீட்டின் மையப் பகுதியில், சுவர்கள், கண்ணாடி மற்றும் மின்சார சாதனங்கள் அருகே இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும். ரெளட்டரில் இருந்து அனுப்பப்படும் ஒலி அலைகள் அனைத்து
திசைகளிலும் பயணிக்கும் தன்மை கொண்டவை. அறைகளின் மேற்கூரையிலிருந்து, ரெளட்டர் அமையும் இடம், மூன்றில் நான்கு பகுதி இடைவெளி விடப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக, வை பி அலைகள், கீழ் நோக்கிச் செல்லும் தன்மை கொண்டவை என்பதால், சற்று உயரமாக அமைப்பதுவும் நல்லது. அதே நேரத்தில், மேற்கூரைக்கு அருகேயும் இருக்கக் கூடாது.

பெரிய ஆண்டென்னா:
நம்முடைய ரெளட்டர் சாதனத்தில் மாறா நிலையில் அமைக்கப்பட்டு கிடைக்கும். ஆண்டென்னா மிகச் சிறந்ததாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ரெளட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் பல, தயாரிப்புச் செலவினைக் குறைக்கும் வகையில், விலை மலிவாகக் கிடைக்கும் ஆண்டென்னாக்களையே பெற்று, சாதனத்தில் இணைக்கின்றனர். இவற்றை நீக்கிவிட்டு, மேம்படுத்தப்பட்ட வகையில் இயங்கும் ஆண்டென்னாக்களை, இவற்றில் பொறுத்தலாம். ஏற்கனவே அமைக்கப்பட்டவற்றை மிக எளிதாக, ஸ்க்ரூவினைக் கழற்றி எடுத்துவிட்டு, அந்த இடத்தில், திறன் அதிகமான ஆண்டென்னாவினை அமைக்கலாம். இந்த வகை
ஆண்டென்னாக்களை, ரூ.500 க்குள் வாங்கி விடலாம். இத்தகைய ஆண்டென்னாக்கள், ஒரு திசையில் மட்டுமே அலைகளை அனுப்பும் என்பதால், வை பி இணைப்பில் இணையும் சாதனங்கள் இயக்கப்படும் இடத்தினை நோக்கி, இந்த ஆண்டென்னாக்கள் பொருத்தப்பட்ட பின், ரெளட்டர்களை அமைக்க வேண்டும்.

ரெளட்டர் சாப்ட்வேர்: நம்மில் பலர், ரெளட்டரில் இயங்கும் சாப்ட்வேர் செயல்பாட்டினை மேம்படுத்த முடியும் என்பதனைத் தெரியாதவர்களாக இருக்கிறோம். பல வகை செட்டிங்ஸ் மற்றும் அலை அனுப்பும் திறன் மேம்படுத்தலுக்கான வழிகளுடன் இந்த சாப்ட்வேர் செயலிகள் தரப்படுகின்றன. குறிப்பாக, இதன் அலை அனுப்பும் திறனை, (transmission power—TX Power) நம்மால், உயர்ந்த நிலையில் அமைக்க முடியும். இதன் மூலம், ரெளட்டர் அலைகள் செல்லும் இடவிஸ்தீரணத்தை அதிகப்படுத்த முடியும். மாறா நிலையில், அலைகள் செல்லும் சேனல் ஒன்றாகவே இருக்கும். உங்கள் வீட்டுக்கு அருகில், பல ரெளட்டர்கள், அதே சேனலில் இயங்குபவையாக இருந்தால், குறிக்கீடுகள் காரணமாக, ரெளட்டர் செயல்பாட்டுத் திறன் குறையலாம். உங்களுடைய ரெளட்டருக்கான சாப்ட்வேர் செயலியில், பல்வேறு சேனல்களை அமைக்கலாம். எந்த சேனலில், அமைக்கும்போது, திறன் கூடிய செயல்பாடு கிடைக்கிறதோ, அந்த சேனலைப் பயன்படுத்தலாம்.

ரிபீட்டர் செயல்பாடு: வை பி சிக்னல்களின் திறனை, 'ரிபீட்டர்கள்' (repeater) கொண்டு, வீட்டிற்குள்ளாகவே அதிகப்படுத்தலாம். ரிபீட்டர் சாதனம், உங்களுடைய வை பி ரெளட்டரிலிருந்து சிக்னல்களைப் பெற்று, சிக்னல்கள் செல்லக் கூடிய பரப்பினை அதிகரிக்கிறது. கையடக்க அளவில், மொபைல் போன் அளவில், ரிபீட்டர்கள் கிடைக்கின்றன. இவற்றைப் பெற்று, எந்த இடத்தில், சிக்னல்கள் பலமிழக்கின்றனவோ, அந்த இடத்தில் மின் சக்தி கிடைக்கும் இணைப்பில் நிரந்தரமாக அமைத்துவிடலாம்.
இவ்வாறு அமைக்கப்படும் ரிபீட்டரும், ரெளட்டரும் ஒரே வை பி பெயரினைக் கொண்டு (Wi-Fi SSID name) இயங்க வேண்டும். மேலும், ரெளட்டரும் ரிபீட்டரும், வெவ்வேறு ப்ராட்காஸ்ட் சேனல்களுக்கு செட்டிங்ஸ் அமைக்கப்பட வேண்டும். இதனை அமைத்து விட்டு, மேலே கூறியபடியான இடத்தில், ரிபீட்டரை அமைக்க வேண்டும்.

வித்தியாசமான சுதேசி முயற்சி: சில வேடிக்கையான முயற்சிகளும் ரெளட்டரின் அலைவீச்சை ஒழுங்கு படுத்தும் எனச் சிலர் இணையத்தில் எழுதி உள்ளனர். அவற்றை third-party hacks என அழைக்கின்றனர். குளிர்பானங்கள் அடைக்கப்படும் காலி அலுமினிய டப்பா ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாக இதனை வெட்டவும். இது பரவளையமாக இருக்கட்டும். பின்னர், இதனை ஆண்டென்னாவைச் சுற்றி அமைக்கவும். இது ரெளட்டரின் அலைகளை மேம்படுத்துவதுடன், ஒரே திசையில் அவற்றைச் செலுத்தும். டப்பாவிற்குப் பதிலாக, ஏதேனும் அலுமினிய பேப்பரையும் பயன்படுத்தலாம். அலுமினிய பேப்பரை, மேலே கூறியபடி வெட்டி அமைத்து ரெளட்டரின் ஆண்டென்னா அருகே வைக்கவும்.

ரெளட்டர் பாதுகாப்பு: ரெளட்டர் செட்டிங்ஸ் நிலைகளை மாற்றி அமைப்பது உங்களுக்குப் புதியதாக இருந்தால், சற்று கவனத்துடன் செயல்படவும். முதலில் நீங்கள் உங்களுடைய ரெளட்டரின் ஐ.பி. முகவரியை அறிந்து கொள்ள வேண்டும். விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டரில், கமாண்ட் ப்ராம்ப்ட்டினை முதலில் பெறுங்கள். Win+R அழுத்திப் பின்னர் cmd என டைப் செய்து எண்டர் தட்டவும். பின்னர், இதில் ipconfig என டைப் செய்திடவும். Ipconfig திறக்கப்பட்டவுடன், அதில் the 'Default Gateway' IP address என்பதைத் தேடிப் பெறவும். இந்த ஐ.பி. முகவரியை பிரவுசரின் முகவரி கட்டத்தில் டைப் செய்தால், உங்களிடம் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் கேட்கப்படும். வழக்கமாக, இது admin மற்றும் admin என இருக்கும். இதனை நீங்கள் ஏற்கனவே மாற்றி இருந்தால், மாற்றப்பட்டதனைத் தர வேண்டும். பின்னர், பாதுகாப்பு நிலை மற்றும் புதிய பாஸ்வேர்டினைத் தரலாம்.
இதில் வை பி நெட்வொர்க் செயல்பாட்டினை நிறுத்தலாம். அப்படி நிறுத்தினால், மற்றவர்களின் சாதனங்களில், உங்கள் வை பி நெட்வொர்க் பெயர் காட்டப்பட மாட்டாது. ஆனால், நீங்கள் அதனையும், அதற்கான பாஸ்வேர்டையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X