கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 அக்
2015
00:00

கேள்வி: வீட்டிலேயே அலுவலகம் வைத்து வேலை வாய்ப்பு மற்றும் முக்கிய தகவல்களைத் தரும் பணியைச் செய்து வருகிறோம். விண்டோஸ் 7, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எம்.எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறோம். இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக, ஆன்லைன் படிவங்களில், தகவல்களைப் பதிகையில், ஏற்கனவே பதிந்த ஒருவரின் தகவல்கள் தாமாக அமைகின்றன. இவற்றை நீக்கிப் பதிகையில், ஒரு சில கட்டங்களை விட்டுவிடுகிறோம். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இதிலிருந்து எப்படி விடுபடுவது?
கா. பன்னீர்செல்வம், தஞ்சாவூர்.
பதில்
: வீட்டிலிருந்தபடியே நல்ல முயற்சியை மேற்கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் குறிப்பிடும் தாமாக தகவல் நிரப்பும் வசதி, கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் நமக்கு அனுகூலமான ஒன்று தான். இருப்பினும், நீங்கள் குறிப்பிடும் தகவல், நீங்கள் மேற்கொள்வதைப் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும். இதனைச் சரிப்படுத்த, சில செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமின்றி, அனைத்து பிரவுசர்களிலும் தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் பிரவுசரில் Tools>Internet Options>Content>Autocomplete எனச் செல்லவும். இங்கு உங்கள் விருப்பப்படி தானாக நிரப்பும் வசதியை நீக்கிவிடலாம்.

கேள்வி: என் நண்பன், என்னிடம் உள்ள லேப் டாப் கம்ப்யூட்டர், நாள் செல்லச் செல்ல மெதுவாக இயங்கும் என்று கூறுகிறான். இது எப்படி உண்மையாகும். டிஜிட்டல் சாதனம் ஒன்று எப்போதும் ஒரே மாதிரியாக, ஒரே வேகத்தில் தானே செயல்படும் தன்மை கொண்டது. நண்பரின் கூற்று உண்மையா? அப்படியானால், அதற்கான காரணம் என்ன? எப்படி இதனைத் தவிர்க்கலாம்?
ஜே. ஆர். தியாகராஜன், புதுச்சேரி.
பதில்:
நாள் செல்லச் செல்ல, நம் கம்ப்யூட்டரின் இயக்க வேகம் குறைந்து கொண்டே தான் இருக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. டவுண்லோட் செய்த புரோகிராம்கள், நாம் அறியாமல் பின்னணியில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள், போதுமான அளவில் இல்லாத ராம் மெமரி, மால்வேர் புரோகிராம்கள் எனப் பல காரணங்கள் இருக்கும். இருப்பினும், எளிதான முறையில் சரி செய்திட, நம் கம்ப்யூட்டரில் உள்ள கேஷ் மெமரியைப் புதுப்பிப்பது, தற்காலிக பைல்களை நீக்குவது, தற்காலிக பிரவுசர் பைல்களை நீக்குவது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடுவது, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினைத் தொடர்ந்து சீராக வைத்திருக்கும். தேவையற்ற புரோகிராம்கள் இயங்குவதனை ஸ்டார்ட் அப் சென்று நீக்கலாம். அல்லது இயங்காமல் வைத்திருக்கலாம்.

கேள்வி: என் மொபைல் போன் திரையில், அதன் வெளிச்ச தன்மை ஆட்டோ என்ற தானாகச் சரி செய்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, நாமாக சரி செய்திடும் வகையில் அமைத்துக் கொண்டால், பேட்டரியின் திறனை மிச்சப்படுத்தலாம் என்று என் நண்பர் கூறுகிறார். இதனை எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. டிப்ஸ் தரவும்.
என். ஷண்முகநாதன், முசிறி.
பதில்:
மொபைல் போன் திரையின் வெளிச்ச வெளிப்பாட்டினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பேட்டரியின் திறன் நாளை அதிகப்படுத்தும் என்பது உண்மையே. தொடக்கத்தில், மாறா நிலையில், இது "auto" setting என்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதனை நீக்கிவிட்டு நீங்களே கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கலாம். எந்த மொபைல் போனிலும், செட்டிங்ஸ் பிரிவு சென்றவுடனேயே, அதில் திரை ஒளி வெளிப்பாட்டிற்கான கட்டுப்பாடு காட்டப்படும். வலது ஓரத்தில், "auto" என்ற கட்டம் தரப்பட்டு அது இயக்கப்பட்டிருக்கும். அதனைத் தொட்டு நீக்கவும். அடுத்து நீளமான கட்டம் ஒன்று காட்டப்படும். இதனை விரல் தொட்டு இயக்கி இடது பக்கமாக இழுத்தால், வெளிச்சம் குறையும். வலது பக்கம் இழுத்தால் அதிகமாகும். இதனை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் பேட்டரி திறன் சேமிப்பினை முன்னிலைப்படுத்தி இந்தக் கேள்வியைனைக் கேட்டுள்ளீர்கள். இன்னொரு குறிப்பும் தருகிறேன். உங்களுக்குத் தேவை இல்லாத நேரத்தில் Bluetooth, GPS, Wi-Fi, mobile data ஆகிய வசதிகள் உங்கள் போனில் இருந்தால், அவற்றை நிறுத்தி (off) வைக்கவும். ஏனென்றால், தொடர்ந்து இவற்றை இயங்க வைத்துக் கொண்டிருப்பது, உங்கள் பேட்டரியின் திறனை உறிஞ்சிவிடும்.

கேள்வி: எனக்கு அவுட்லுக் டாட் காம் தளத்தில் மின் அஞ்சல் அக்கவுண்ட் வைத்துள்ளேன். இதனை என்னுடைய மொபைல் சாதனத்துடன் இணைத்தால், எனக்கு எவ்வளவு அளவிலான இன் பாக்ஸ் கிடைக்கும்? இது தெரிந்தால், அஞ்சல்களை டவுண்லோட் செய்திட எளிதாக இருக்கும்.
ஆ. நிறைமதி, கோவை.
பதில்
: நல்ல கேள்வி, நிறைமதி. அவுட்லுக் டாட் காம் எப்படி உங்கள் மொபைல் சாதனத்தில், மின் அஞ்சல் அப்ளிகேஷனுடன் செயல்படுகிறது எனப் பார்க்கலாம். இந்த அப்ளிகேஷன், உங்களுடைய அவுட்லுக் காம் அக்கவுண்ட் இன்பாக்ஸிலிருந்து, உங்கள் போனுக்கு எதனையும் டவுண்லோட் செய்திடாது. ஏனென்றால், இது ஒரு அப்ளிகேஷனுடன் இணைந்த IMAP connection ஆக இருக்கும். உங்களுடைய அவுட்லுக் இன்பாக்ஸில் உள்ள அனைத்தையும் டவுண்லோட் செய்திடாமல், உங்களுடைய மின் அஞ்சல்களை நீங்கள் காணலாம்.
உங்களுடைய அக்கவுண்ட்டினை, மொபைல் போனில் செட் அப் செய்திடுகையில், உங்களுக்கு வந்திருக்கும் அஞ்சல்களில் கடந்த வாரம் அல்லது மாதத்தில் வந்ததில், எதனை பார்க்கப்போகிறீர்கள் என்று பல விருப்ப செயல்பாடுகள் தரப்பட்டு, நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதிருக்கும். நீங்கள் எந்த விருப்பத்தினை செட் செய்தாலும், மற்றவற்றையும் காண முடியும். எடுத்துக் காட்டாகக் கடந்த வாரம் வந்ததை மட்டும் பார்க்க விருப்பம் தெரிவித்தாலும், அதற்கு முன்பு வந்ததையும் பார்க்கலாம். நான் பரிசோதனை முறையில் என்னுடைய அவுட்லுக் டாட் காம் அக்கவுண்ட்டினை, என் ஆண்ட்ராய்ட் இமெயில் அப்ளிகேஷனுடன் இணைத்தேன். என்னுடைய இன்பாக்ஸில் ஆயிரக்கணக்கான மெசேஜ் இருந்த போதிலும், ஒரு எம்.பி. அளவிலான டேட்டா மட்டுமே, அந்த அப்ளிகேஷனுக்கான இடத்தில் காட்டப்பட்டது. நீங்கள் மெயில்களுடன் இணைக்கப்பட்ட பைல்களை, போனுக்கு டவுண்லோட் செய்தால், போனில் இடம் உள்ளதைப் பொறுத்து அவை டவுண்லோட் செய்யப்படும். நீங்கள் அனைத்து மெசேஜ்களையும் டவுண்லோட் செய்து வைத்துப் பார்க்க வேண்டும் என விரும்பினால், அதற்கு மொபைல் சாதனம் சரியாக வராது. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றைப் பயன்படுத்தவும். இதற்கு நீங்கள் POP3 அக்கவுண்ட்டைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் இமெயில் கிளையண்ட் ஒன்றைப் பயன்படுத்தவும். சரியாக, எவ்வளவு இடத்தினை உங்கள் மொபைல் இன்பாக்ஸ் கொள்ளும் என்பதை அறிய எதுவும் வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி: நீங்கள் முன்பு க்ளவ்ட் சர்வர்களில் பைல்களைப் பதிவு செய்து குறித்த பயனுள்ள கட்டுரை ஒன்றைத் தந்தீர்கள். நான் முன்பே அவற்றைப் பயன்படுத்தி வந்தேன். அந்த சேவையை நீக்குவது எப்படி என்று அறிய விரும்புகிறேன். நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன்.
கே. சுந்தர ராஜன், திருபுவனம்.
பதில்
: நீங்கள் ஒன் ட்ரைவ் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால், குறிப்பிட்ட க்ளவ்ட் சேவையை நீங்கள் அணுகாமல் இருந்தாலே போதும். ஆனால், ஒன் ட்ரைவ் அப்ளிகேஷனை உங்கள் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருவதாக இருந்தால், அதனை அன் இன்ஸ்டால் செய்து நீக்கி விடலாம். இதனை ஆல் புரோகிராம்ஸ் பட்டியலில், ஒன் ட்ரைவ் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் மெனுவில் uninstall தேர்ந்தெடுத்து செய்திடலாம். அல்லது Control Panel > Add or Remove a Program சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்திடலாம். இவ்வாறு நீக்கினாலும், நீங்கள் மீண்டும் இன்ஸ்டால் செய்திடாமலேயே, ஒன் ட்ரைவ் வசதியைப் பெற்று பைல்களை சேவ் செய்திடலாம். பிரவுசர் வழியாக, ஒன் ட்ரைவ் சென்று, உங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் பயன்படுத்தி, ஒன் ட்ரைவில் இடம் பெற்று, பைல்களை சேவ் செய்திடலாம். எந்த இடத்திலிருந்தும், இணைய இணைப்பில் ஒன் ட்ரைவ் சென்று, பைல்களைப் பெறலாம்.

கேள்வி: என்னுடைய பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள பதிவுகளைப் பார்க்கச் செல்கையில், ஒவ்வொரு முறையும் என் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் போட வேண்டியுள்ளது. யூசர் நேம் தானாகத் தோன்றுகிறது. இதே போல பாஸ்வேர்டினையும் ஒரு ஹாட் கீயில் வைத்துப் பயன்படுத்த முடியுமா, அண்ணா?
என். சுரேந்திரன், சிவகாசி.
பதில்
: தம்பி சுரேந்திரன், பேஸ்புக் தளத்தில் உங்கள் பக்கத்தினைப் பெற யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைக் கொடுத்தே ஆக வேண்டும். குக்கிகளின் உதவியால், உங்கள் யூசர் நேம், உங்கள் கம்ப்யூட்டரில் மட்டும் சேவ் செய்யப்பட்டுள்ளதா, யூசர் நேம் தரப்பட்டு, அதுதானா என்று கேட்கப்படுகிறது. பாஸ்வேர்டைப் பொறுத்தவரையிலும் அதே போல் சேவ் செய்திடலாம். நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்த பின்னர், அதன் கீழாக ஓர் ஆப்ஷன் காட்டப்படும். அதில் “Keep me logged in” என்று இருக்கும். இதில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இதனை அடுத்து, நீங்கள் பாஸ்வேர்ட் அமைக்க வேண்டியிருக்காது. கம்ப்யூட்டர் நீங்கள் ஒத்துக் கொண்ட “Keep me logged in.” என்ற வசதியில் பாஸ்வேர்டை நினைவில் வைத்துப் பயன்படுத்தி, உங்கள் அக்கவுண்ட் தளத்தினைத் தரும்.

கேள்வி: லெனோவா டேப்ளட் பி.சி. ஒன்றைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் திடீரென எழுத்துகளுக்குப் பதிலாக, எண்கள் திரையில் தோன்றுகின்றன. இது அனைத்து எழுத்துகளிலும் இல்லாமல், ஒரு சிலவற்றில் ஏற்படுகின்றன. ஆனால், இதனால், வை பி இணைப்பில் இமெயில்களைப் பார்க்க பாஸ்வேர்ட் தர இயலவில்லை. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கான தீர்வு என்ன? சிஸ்டம் கெட்டுப் போய் இருக்குமா?
ஆ. சந்திரக் குமார், பெங்களூரு.
பதில்:
இது மிகவும் சாதாரண பிரச்னைதான். எளிதில் தீர்த்துவிடலாம். மிக நீளமான கடிதம் எழுதும் அளவிற்கு தீர்வு இல்லாத பிரச்னை அல்ல. உங்களுடைய டேப்ளட் பி.சி.யின் திரையில் தரப்படும் கீ போர்ட் அமைப்பினையும், அதனை இயக்கும் முறையினையும் தெரிந்து கொண்டால், பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும். திரையில் காட்டப்படும் கீ போர்ட், வழக்கமாக நாம் பெர்சனல் கம்ப்யூட்டருடன் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலிருந்து வேறுபட்டது. இந்தக் கீ போர்டுகளில், எண்கள், கீ போர்டின் மேல் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். அல்லது, வலது பக்கத்திலும், எண்களுக்கான கீ போர்ட் இருக்கும். இதே, எண்களுக்கான கீகளை, ஷிப்ட் கீயுடன் அழுத்தி, சில விசேஷமான, நாம் அடிக்கடி பயன்படுத்தும் சில அடையாளங்களைப் பெறலாம். டாலர், ஸ்டார், அடைப்புக் குறி போன்றவை. ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், திரையில் காட்டப்படும் கீ போர்ட் மிகச் சிறியதாகும். எண்கள் மற்றும் சிறப்பு அடையாளக் குறிகளை, இடது புறம் “123” மற்றும் symbols என்ற கீயை அழுத்திப் பெறலாம். இவற்றை அழுத்துகையில், எண்கள், அடையாளக் குறியீடுகள் அடங்கிய கீ போர்ட் கிடைக்கும். இவற்றிலிருந்து எழுத்துகளுக்கான கீ போர்ட் தேவை எனில், ABC என்ற கீயினை அழுத்த வேண்டும். சில திரைக் கீ போர்டுகளில், “123” என்ற கீயை மீண்டும் ஒருமுறை அழுத்தினால், டாகிள் (Toggle) கீ என்ற முறையில், symbols கீ கிடைக்கும். ஒரு சில டேப்ளட் பி.சி.க்களில், எண்கள் கொண்ட கீ போர்டும் தரப்படுவது உண்டு. ஆனால், அவை பார்க்க மிகச் சிறியதாகக் காட்சி அளிக்கும்.
உங்கள் பிரச்னைக்கான தீர்வு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். உங்களுக்கு எழுத்துகள் கொண்ட கீ போர்ட் வேண்டும் எனில் ABC என்ற கீயினை அழுத்திப் பெறலாம். விரலால், அழுத்துகையில், டேப்ளட் பி.சி.யில், வேறு வேறு எழுத்துகள் அல்லது எண்கள் கிடைத்தால், துல்லியமாகக் குறிப்பிட்ட கீயினை அழுத்த, ஸ்டைலஸ் எனப்படும் டிஜிட்டல் பென்சிலைப் பயன்படுத்தலாம். சில டேப்ளட் பி.சி.க்களில் வாய்ஸ் கண்ட்ரோல் எனப்படும் வசதி தரப்பட்டிருக்கும். கீ போர்டில் மைக் போன்ற ஒரு குறியீடு கீ இருக்கும். இதனை அழுத்தி, டைப் செய்திட வேண்டிய டெக்ஸ்ட்டினைப் பேசினால், அது டெக்ஸ்ட்டாகப் பதியப்படும். ஆனால், இதற்கு நிறைய பயிற்சி தேவைப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kanthan - valliyur,இந்தியா
14-அக்-201510:10:31 IST Report Abuse
kanthan என்னுடைய மொபைலில் போன் மெமரி கம்மியாக உள்ளது ( 144 MB மட்டும் ) இதனை அதிகரிக்க முடியுமா? Apps ஏதும் install செய்ய முடியவில்லை. தயவுசெய்து கூறவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X