சமூக தள, மின் அஞ்சல் கணக்கை முடித்திட
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2015
00:00

நினைத்த நேரத்தில் எல்லாம், எதிர்ப்படும் மின் அஞ்சல் சர்வர்களிலும், சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn), பலர் தங்களுக்கு என பல அக்கவுண்ட்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே, தொடங்கப்பட்டவை சரியாகச் செயல்படுத்த முடியாத நிலை ஒரு காரணமாக இருக்கும். அல்லது, ஒவ்வொரு வகை செயல்பாட்டிற்கும் என ஒவ்வொரு அஞ்சல் மற்றும் சமூக வலைத்தள அக்கவுண்ட்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒரு சிலர், பாஸ்வேர்ட்களை மறந்துவிட்டு, புதிய பெயர்களில், அக்கவுண்ட்களைத் தொடங்கி, தங்கள் நண்பர்களுக்குத் தெரியப் படுத்துகின்றனர்.
இவர்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்னை, ஏற்கனவே, தொடங்கப்பட்ட இத்தகைய அக்கவுண்ட்களை மூடுவது எப்படி? என்று தெரியாத நிலை தான். அக்கவுண்ட்களை எளிதாகத் தொடங்கலாம். ஆனால், அவற்றை மூடுவது சற்று சிக்கலான விஷயம் தான். இதனால், மூடப்படாத, அஞ்சல் முகவரிகளுக்குப் பழைய நண்பர்கள் முக்கிய தகவல்களைத் தரலாம். அவற்றை இயக்க முடியாத நிலையில், அவற்றிற்கு உரியவர்கள், அவற்றைப் பெற முடியாத நிலை ஏற்படலாம். அனுப்பியவரோ, மிக நம்பிக்கையுடன் தான் அனுப்பிய அஞ்சலுக்கு பதிலை எதிர்பார்ப்பார்.
இது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் வாசகர்கள் பலர், எப்படி இந்த மின் அஞ்சல் மற்றும் சமூக வலைத்தள அக்கவுண்ட்களை நிரந்தரமாக மூடுவது என்று கேட்டு கடிதங்களை அனுப்புகின்றனர். ஏற்கனவே, இது குறித்து, கம்ப்யூட்டர் மலரில் கட்டுரை ஒன்று வெளியானது. இருப்பினும், இன்றைய தேவைகளின் அடிப்படையில், அது குறித்த வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
உங்களுடைய மின் அஞ்சல் முகவரியினை ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிட விரும்புகிறீர்கள். என்ன செய்வது? எப்படி மூடுவது? என்ற வழிகள் தெரியவில்லை. ஆனால், நம் அக்கவுண்ட் இனி இதில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த பின்னர், எப்படி மூடுவது என்ற வழி எங்கும் கிடைக்கவில்லை. இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக விரும்புகிறீர்கள். அக்கவுண்ட்டைப் பார்க்காமல், எதுவும் எழுதாமல் இருக்கலாம்; ஆனால், மொத்தமாக நம் கணக்கே இருக்கக்கூடாது என விரும்பினால் என்ன செய்திட வேண்டும். இங்கு அதற்கான வழிகளைப் பார்க்கலாம்.
இதில் என்ன ஒரு நல்ல தகவல் எனில், ஏறத்தாழ அனைத்து மின் அஞ்சல் வசதி தரும் நிறுவனங்களும், உங்கள் மின் அஞ்சல் கணக்கினை நிரந்தரமாக மூடிக் கொள்ள வழி ஒன்றைத் தருகின்றன. ஆனால், அந்த வழிகளை நாம் நேரடியாக, எளிதாகப் பெற இயலவில்லை. அவற்றைப் பெற பல்வேறு சுற்று வழிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

ஜிமெயில்

1. https://www.google.com/accounts/DeleteCaribou Service என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. இங்கு உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் அமைக்கவும்.
3. இங்கு கிடைக்கும் செக்பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். பின்னர், மற்ற கூகுள் சேவைகளைப் பயன்படுத்த என்ன அக்கவுண்ட் பயன்படுத்தப் போகிறீர்கள் என்ற வினாவிற்கு, மாற்றாக உள்ள கூகுள் அக்கவுண்ட் பெயரினை அமைக்கவும்.
4. பாஸ்வேர்டினைக் கொடுத்து, "Remove Gmail" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இரண்டு நாட்களில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கப்படும்.
5. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கப்பட்ட பின்னர், என்ன செய்தாலும், அந்த அக்கவுண்ட்டினை மீண்டும் பெற முடியாது. அதில் உள்ள மெசேஜ்கள் கிடைக்காது.

ஹாட்மெயில்/எம்.எஸ்.என்./விண்டோஸ் லைவ்:
1. கீழ்க்காணும் லிங்க் உள்ள தளம் செல்லவும். http://mail.live.com/mail/CloseAccount Confirmation.aspx இது கிடைக்கவிலை என்றால் https://account.live.com/CloseAccount.aspx என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. உங்களுடைய இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டினை இங்கு அமைக்கவும்.
3. தொடர்ந்து CloseAccount என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
4. உங்கள் அக்கவுண்ட் 270 நாட்களுக்கு ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்தக் காலத்தில் மீண்டும் உங்கள் அக்கவுண்ட்டினை உயிர்ப்பிக்க விரும்பினால், மீண்டும் அதனை இயக்கலாம். இல்லை என்றால், 270 நாட்களுக்குப் பின்னர், முழுமையாக நீக்கப்படும். உங்கள் நண்பர்கள் இதற்கு தொடர்பு கொண்டால், அப்படி ஒரு அக்கவுண்ட்டே இல்லை என்ற செய்தி அவர்களுக்குத் தரப்படும்.

யாஹூ தளம்:
1. இந்த தளத்தில் உள்ள மின் அஞ்சல் கணக்கினை நீக்க https://edit.yahoo.com/config/delete_user என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. உங்களுக்கான தனி நபர் தகவல்களை அளித்து, நீக்க விரும்புவதனை confirm என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
3. 90 நாட்களில் உங்கள் அக்கவுண்ட் முழுமையாக நீக்கப்படும். பின்னர், நீங்கள் விரும்பினாலும், அக்கவுண்ட் கிடைக்காது.

பேஸ்புக் சமூக இணைய தளம்: பலரும் பயன்படுத்தும் இந்த தளத்திலிருந்து தங்கள் அக்கவுண்ட்டினை நீக்க அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்குக் காரணம், ஒருவரே பல அக்கவுண்ட்களில், பெயர்களில் சிறிய வித்தியாசத்துடன் அக்கவுண்ட்களை அமைத்துவிடுவதே காரணம்.
1. முதலில் பேஸ்புக் இணைய தளத்தில் உங்களுடைய அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Account -> Account Settings என்பதில் செல்லவும்.
2. இது Settings பக்கத்தினைத் திறக்கும்.
3. இங்கு "Deactivate Account" என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
4. அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
5. "Why are you deactivating:" என்ற பிரிவில், உங்களுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account" என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
6. http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account என்ற இணைய தளம் சென்று, நிரந்தரமாக பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

ட்விட்டர் சமூக இணைய தளம்:
1. ட்விட்டர் இணைய தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
2. இது Account Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இந்தப் பக்கத்தின் இறுதியில் உள்ள "Deactivate my account" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
3. அல்லது நேரடியாக http://twitter.com/settings/accounts/confirm_delete என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டினை நீக்கலாம். இங்கு உறுதிப்படுத்துவதற்காக உங்கள் முடிவினைக் கேட்கையில் "Okay, fine, deactivate my account" என்பதில் கிளிக் செய்து கணக்கினை முடிக்கவும்.

லிங்க்ட் இன் சமூக இணைய தளம்:
1. முதலில் லிங்க்ட் இன் சமூக இணைய தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டினைத் திறக்கவும்.
2. வலது மூலையில் தரப்பட்டுள்ள "Settings" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
3. இது Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இங்கு "Personal Information" என்ற பிரிவில், "Close Your Account" என்பதில் கிளிக் செய்திடவும்.
4. அல்லது https://www.linkedin.com/secure/settings?closemyaccountstart என்ற லிங்க்கில் கிளிக் செய்து நேரடியாக உங்கள் அக்கவுண்ட்டினை முடிக்கலாம்.
5. "Close Account Reason" என்ற பிரிவில் நீங்கள் விரும்புவதில் கிளிக் செய்து, "Continue" அழுத்தி தொடரலாம்.
மேற்காணும் வழிகளில், எந்த மின் அஞ்சல் மற்றும் சமூக இணைய தளங்களில் உள்ள உங்கள் தேவைப்படாத, பயன்படுத்தாத அல்லது நீக்கப்பட வேண்டும் என எண்ணுகிற அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X