சாம்சங் நிறுவனம் தன் 'ஜே' வரிசையில், அண்மையில் காலக்ஸி ஜே 2 என்னும் ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,490 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் குறிப்பிடத்தக்க அம்சம் இதில் தரப்பட்டுள்ள Ultra Data Saving வசதி. இதனைப் பயன்படுத்தி, போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட செயலிகள், மொபைல் டேட்டாவினைப் பயன்படுத்துவதை நாம் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம், நம் தேவைக்கு மட்டுமே மொபைல் டேட்டா வசதி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திடலாம். இதன் மூலம், இதுவரை வீணாகத் தேவையின்றி நம் மொபைல் டேட்டாவினைப் பயன்படுத்த நாம் நம்மை அறியாமல் அனுமதித்தது தடை செய்யப்படுகிறது. இதனால் 50% பயன்பாடு தடுக்கப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது.
இதன் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 960 x 540 பிக்ஸெல்களுடன், 4.7 அங்குல அளவில், qHD Super AMOLED டிஸ்பிளேயுடன் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதியும் உள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் Exynos 3475 ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1.1 லாலிபாப்.
சாம்சங் நிறுவனத்தின் யூசர் இன்டர்பேஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த போனின் பின்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா, எல்.இ.டி.ப்ளாஷ் இணைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஹை டெபனிஷன் விடியோ பதிவினை மேற்கொள்ளலாம். இதன் முன்புறமாக, 2 மெகா பிக்ஸெல் கேமரா இயங்குகிறது. ப்ராக்ஸிமிட்டி அக்ஸிலரோமீட்டர் இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்களுடன், போட்டோ/விடியோ எடிட்டர் மற்றும் டாகுமெண்ட் எடிட்டர்களும் உள்ளன.
இந்த போனில் இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் தடிமன் 8.4 மிமீ. ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பரிமாணம் 136.5 x 69 x 8.4 மிமீ. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். பின்புறக் கவர் தோலினால் அமைக்கப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது. இதன் லித்தியம் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டதாக உள்ளது. வெள்ளை, கருப்பு மற்றும் தங்க வண்ணங்களில் இந்த மாடல் போன் வெளியாகியுள்ளது.