பொதுவாக, ஆப்பிள் போன்களின் விலை இந்திய வாடிக்கையாளர்களுக்குச் சற்று அதிகமாகவே தெரிவதால், அவற்றின் விற்பனை, மற்ற நிறுவனப் போன்களுடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆப்பிள் நிறுவனமும், இந்திய வாடிக்கையாளர்களின் மன நிலை அறிந்து விலையைக் குறைக்காமல், பன்னாட்டளவிலான விலையிலேயே, தன் போன்களுக்கான விலையை அறிவித்து வந்துள்ளது. ஆனால், புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்துகையில், ஏற்கனவே வெளியான போன்களின் விலையைக் குறைத்து அறிவிப்பது இதன் வழக்கமாகும். அதே போல, இந்த முறை, அண்மையில், சென்ற ஆண்டு அக்டோபரில் வெளியான, தன்னுடைய ஆப்பிள் ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் மற்றும் ஐபோன் 5 ஆகியவற்றின் விலையைக் குறைத்து அறிவித்துள்ளது.
ஆப்பிள் போன்களின் தற்போதைய விலை கீழே தரப்பட்டுள்ளது. அவற்றின் பழைய விலை அடைப்புக் குறிகளுக்குள் காணலாம்.
ஐபோன் 5 எஸ் 16 ஜி.பி. ரூ.35,000 (47,000)
ஐபோன் 5 எஸ் 32 ஜி.பி. ரூ.40,000 (51,500)
ஐபோன் 6 16 ஜி.பி. ரூ.52,000 (56,000)
ஐபோன் 6 64 ஜி.பி. ரூ.62,000 (65,000)
ஐபோன் 6 ப்ளஸ் 16 ஜி.பி. ரூ.62,000 (65,000)
ஐபோன் 6 ப்ளஸ் 64 ஜி.பி. ரூ.72,000 (74,000)
மேலே தரப்பட்டுள்ளவை, ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து அறிவித்த நிறுவன விலைகள். ஆனால், விற்பனைச் சந்தையில் சில டீலர்கள், தங்கள் லாபத்தினைக் குறைத்துக் கொண்டு, இன்னும் குறைவாக விற்றுவருகின்றனர்.