எச்.டி.சி. நிறுவனத்திடமிருந்து அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போனாக எச்.டி.சி. டிசையர் 826 வெளிவந்துள்ளது. இது 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி போனாக இயங்குகிறது. இதில் இரண்டு நானோ சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 158 x 77.5 x 8 மிமீ. எடை 183 கிராம்.
இந்த ஸ்மார்ட் போனின் திரை 5.5 அங்குல அளவில் உள்ளது. எல்.சி.டி.3 கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆகத் தரப்பட்டுள்ளது. 1080 x 1920 பிக்ஸெல் திறன் கொண்ட இந்த திரையில், மல்ட்டி டச் வசதியும் கிடைக்கிறது. இதன் பயனர் இடைமுகம் எச்.டி.சி. நிறுவனத்தின் தனித்தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. போனை இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.0.1. லாலிபாப். சிப் செட் ஆக Qualcomm MSM8939 Snapdragon 615 தரப்பட்டுள்ளது. இதன் சி.பி.யு. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Cortex-A53 ஆகும். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி.ஆக உயர்த்தலாம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு, இந்த ஸ்மார்ட் போனில், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, 4ஜி, வை பி புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
பின்புறமாக இயங்கும் முதன்மை கேமரா, ஆட்டோ போகஸ். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு 13 எம்.பி. திறன் உடையதாகத் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங், டச் போகஸ், முகமறிந்து செயல்படுதல், ஒரே நேரத்தில் வீடியோ மற்றும் இமேஜ் பதிவு எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. முன்புறக் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. எப்.எம். ரேடியோ இயங்குகிறது. அக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி மற்றும் காம்பஸ் சென்சார்கள் செயல்படுகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ் மெயில் மற்றும் இமெயில் வசதிகள் கிடைக்கின்றன. எம்.பி.3, எம்.பி.4 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர், போட்டோ மற்றும் விடியோ எடிட்டர் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதில் தரப்பட்டுள்ள, எடுக்க இயலாத லித்தியம் பாலிமர் பேட்டரி, 2,600 mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 626 மணி நேரம் மின் சக்தியைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. தொடர்ந்து இதன் மூலம் 22 மணி நேரம் பேசலாம். இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.25,990 என அறிவிக்கப்பட்டுள்ளது.