கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2015
00:00

கேள்வி: நான் ஒரு டி.டி.பி. ஆபீஸ் நடத்துகிறேன். இப்போது கூடுதலாக கம்ப்யூட்டர் வாங்கி, டாகுமெண்ட் டைப் செய்திடும் பணி எடுத்து செய்து வருகிறேன். இதில் பணி புரிபவர்களுக்கு அவர்கள் செலவழிக்கும் நேரம், மற்றும் டைப் செய்திடும் டெக்ஸ்ட் வகையில் ஊதியம் தரப்படுகிறது. நேரத்தினைக் கணக்கெடுத்து தெரிய முடியுமா?
என். செல்வராஜ், மதுரை.
பதில்:
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். கம்ப்யூட்டர் இயங்கும் போது அனைத்தும் கவனிக்கப்பட்டுக் கொண்டே வரும். கம்ப்யூட்டரின் மெமரி, சி.பி.யு. மற்றும் பிற ஹார்ட்வேர் சாப்ட்வேர் பயன்பாடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அவை நாம் விரும்பினால், பார்க்கும் வகையில் தரப்படும். வேர்ட் செயலியைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் தரப்படுகின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால், நீங்கள் ஒரு டாகுமெண்ட்டினைத் திறந்து அதில் எதுவும் டைப் செய்திடவில்லை என்றாலும், அது உங்களின் அந்த செயலையும் கணக்கெடுத்து அறிவிக்கும். இதனை எப்படி அமைப்பது? எப்படி அறிவது எனப் பார்க்கலாம்.
1. எங்கு எடிட் டைம் காட்டப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. வேர்ட் ரிப்பனில் கிடைக்கும் Insert டேப்பினை கிளிக் செய்து அந்த பகுதியினைப் பெறவும்.
3. Text group கிளிக் செய்து திறந்து, Quick Parts டூலில் கிளிக் செய்திடவும். பின்னர் Fields என்பதில் கிளிக் செய்திடவும்.வேர்டில் இப்போது Field டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இங்கு Categories என்ற பட்டியலைப் பெறவும். Date and Time என்பதனை Categories பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து கிடைக்கக் கூடிய பீல்டுகளிலிருந்து EditTime என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் அருகே வலது பக்கத்தில், எண்களாக இருந்தால், என்ன பார்மட்டில் வேண்டும் என்பதனையும் நாம் அமைத்துக் கொள்ளலாம்.
பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் கேட்டபடி, வேர்ட் டாகுமெண்ட்டில் நீங்கள் எடுத்துக் கொண்ட எடிட் டைம் பதியப்படும்.

கேள்வி: நான் வேர்ட் 2003 பயன்படுத்திய போது, பிரிண்ட் பிரிவியூ நிலையில் கூட என்னால், எடிட் செய்திட முடிந்தது. ஆனால், வேர்ட் 2007க்கு மாறிய பின்னர், அந்நிலையில் எடிட் செய்திட முடியவில்லை. பலமுறை முயற்சித்தேன். எங்கு தவறு உள்ளது என்று அறியமுடியவில்லை. வழி காட்டவும்.
என். ஸ்ரீனிவாஸ், சோழவந்தான்.
பதில்:
வேர்ட் 2007 தொகுப்பிலும், நீங்கள் பிரிண்ட் பிரிவியூ நிலையில் எடிட் செய்திடலாம். வேர்ட் 2003ல் நீங்கள் பெற்ற அதே வசதிகளை இதிலும் பெறலாம். ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில், நீங்கள் 2007 செயலியில் சற்று கவனமாக எடிட் செய்திட வேண்டும். அந்நிலையில் எடிட் செய்திடுகையில் Magnifier பட்டன் அழுத்தப்பட்டிருக்கக் கூடாது. எடிட் செய்திட விரும்பினால், மேக்னிபையர் பட்டனை ஆப் செய்திட வேண்டும். இதன் மூலம், மவுஸ் வழக்கமாகச் செயல்படும். டாகுமெண்ட் உள்ளாகக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பியபடி எடிட் செய்திடலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். அதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலமாகத்தான் உள்ளே நுழைந்திட முடியுமா? வேறு லோக்கல் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்து இயங்க வழி உண்டா? விபரங்கள் தருமாறு வேண்டுகிறேன்.
என். அன்புச் செல்வன், சிதம்பரம்.
பதில்:
விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, ஒரு முழுமையான பன்னாட்டளவிலான சிஸ்டமாக மைக்ரோசாப்ட் கொண்டு வந்துள்ளது. அதாவது, இதனைச் சார்ந்த மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலமாக, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திட வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதன் மூலம், நீங்கள் மைக்ரோசாப்ட் தரும் பல வசதிகளை அனுபவிக்க முடியும். இதில் சிலவற்றை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றைப் புதியதாக அமைக்க வேண்டுமே என எண்ணலாம். (அந்த அடிப்படையில் தான் இந்த கேள்வி என்று நினைக்கிறேன்.) உங்களைப் போன்ற எண்ணம் உடையவர்களுக்காகவே, விண்டோஸ் 10 சிஸ்டம், உங்களின் லோக்கல் அக்கவுண்ட் பயன்படுத்துவதற்கான வழியையும் தருகிறது. இதனை செட் அப் செய்வதும் எளிது. இருப்பினும், நீங்கள் விண்டோஸ் ஸ்டோர், ஒன் ட்ரைவ் பைல்களை ஒருங்கிணைப்பது போன்றவற்றிற்கு, உங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டினைத்தான் பயன்படுத்த வேண்டும். இனி, லோக்கல் அக்கவுண்ட் ஒன்றை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
1. முதலில் Settings > Account > Your account எனச் செல்லவும்.
2. Sign in with a local account instead என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது பாப் அப் விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் உங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டினை சோதனை செய்திட, அதற்கான பாஸ்வேர்ட் கேட்கப்படும். பாஸ்வேர்டை டைப் செய்து அடுத்து Next. என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு உங்களுடைய லோக்கல் அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தரவும். உங்களுடைய யூசர் நேம், பாஸ்வேர்ட், பாஸ்வேர்ட் மறந்து போனால், பெறுவதற்கான கேள்வி பதில் ஆகியவற்றைத் தர வேண்டும். அடுத்து Next கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Sign out and finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் உங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டிலிருந்து லாக் ஆப் செய்யப்படுவீர்கள். பின்னர், உங்களுடைய லோக்கல் அக்கவுண்ட் மூலம், புதிய பாஸ்வேர்ட், யூசர் நேம் பயன்படுத்தி லாக் இன் செய்திடலாம்.

கேள்வி: என்னுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, தங்கள் அறிவுரைப்படி விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்துள்ளேன். ஆனால், அப்கிரேட் செய்த நாளிலிருந்து எந்த ஒலியும் அதிலிருந்து கேட்கவில்லை. எங்கு பிரச்னை உள்ளது எனவும் அறிய முடியவில்லை. பல முயற்சிகள் செய்து பார்த்துவிட்டேன். ஆடியோவினைத் திரும்பப் பெறும் வழிகளைத் தயவு செய்து கூறுங்கள். இல்லை எனில், ஒரு மாத கால அவகாசத்தைப் பயன்படுத்தி விண்டோஸ் 8.1க்கு மீண்டும் செல்லப் போகிறேன்.
கா. நீலகண்டன், திண்டுக்கல்.
பதில்:
கம்ப்யூட்டர் ஒன்றை, அதன் பழைய விண்டோஸ் பதிப்பிலிருந்து புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்கையில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமானது, கம்ப்யூட்டரின் டிவைஸ் ட்ரைவர்களில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதில் சவுண்ட் கார்டும் ஒன்றாகும். ஆனால், கட்டாயமாக, பாதிப்பு ஏற்படும் எனக் கூற முடியாது. ஆடியோவின் புதிய ட்ரைவர் சாப்ட்வேர் காப்பி ஒன்றைப் பெற்றுப் பயன்படுத்தலாம். இதற்கு ஸ்டார்ட் மெனு சென்று, அதில் Device Manager என டைப் செய்tது, அதில் கிடைக்கு முடிவுகளில், முதல் முடிவின் மீது கிளிக் செய்திடவும்.
அடுத்து, “Sound, video and game controllers” என்ற பகுதியில், உங்கள் கம்ப்யூட்டரின் சவுண்ட் கார்ட் பெயர் உள்ளதா எனத் தேடவும். உங்கள் மாடலுக்கேற்றபடி, கிரியேட்டிவ் லேப்ஸ் அல்லத் இன்டெல் (Creative Labs, Intel) அல்லது வேறு ஒரு நிறுவனத்தின் ஹார்ட் வேர் சாதனங்கள் பட்டியலிடப்பட்டு அதில் இதுஇருக்கும். இங்கு Driver என்ற டேப்பில் கிளிக் செய்து, பின்னர் Update Driver என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் சிஸ்டம் இந்த புதிய ட்ரைவர் பதிப்பினை இன்ஸ்டால் செய்திடவா? என்று கேட்கும். சரி என ஒப்புதல் கொடுத்தால், ட்ரைவர் சாப்ட்வேர் அப்டேட் ஆகி, இயங்கத் தொடங்கும்.
அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், குறிப்பிட்ட நிறுவனத்தின் இணைய தளம் சென்று வாடிக்கையாளர்களுக்கு சப்போர்ட் தரும் பிரிவில் தேடவும். அங்கு, நிச்சயமாக சவுண்ட் கார்டுக்கான ட்ரைவர் சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்ட நிலையில் புதியதாகக் கிடைக்கும். அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். அல்லது, தளத்திலேயே, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வசதி இருப்பின், அதனைக் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.
இன்னொரு வழியும் உள்ளது. ஏற்கனவே உள்ள ட்ரைவரை அன் இன்ஸ்டால் செய்து, விண்டோஸ் 10 சிஸ்டத்தினையே, அதற்கான ட்ரைவர் சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்கலாம். இதற்கு Device Manager பாக்ஸ் செல்லவும். ஆடியோ ட்ரைவர் என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். அருகே உள்ள Uninstall என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவும். விண்டோஸ் மீண்டும் இயங்கும்போது, உங்கள் ஆடியோவிற்கான ட்ரைவரை இயக்கும்.
விண்டோஸ் இயக்கத்தில், இது போல ஆடியோ ட்ரைவர்கள் தங்கள் செயல் இழப்பது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான். அதனால் தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத் தளங்களில், இது குறித்த தகவல்களையும், எப்படி தவறுகளை சீர் செய்வது என்றும் அறிவித்துள்ளது. அந்த தளங்களின் முகவரிகள் இதோ: http://windows.microsoft.com/en-us/windows-10/fix-sound-problems#v1h=tab01
விடியோ விளக்கவுரை பெற: https://www.youtube.com/watch?v=7eCy-K5zlw4&list=PLWs4_NfqMtozP_oATmM8FTMhsAPtn3m_F&index=3
சிக்கல்கள் தீர்க்கும் வழிகளைப் பெற: http://windows.microsoft.com/en-us/windows-10/fix-sound-problems#v1h=tab03
விண்டோஸ் இயக்கத்தின் பொதுவான சப்போர்ட் பெற: http://windows.microsoft.com/en-us/windows/support#1TC=windows-10

கேள்வி: பல வேளைகளில் நான் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்களில், பெரிய அளவில் டேபிள்களை அமைத்துவிடுகிறேன். ஆனால், பின்னர், அவற்றைப் பிரித்து அமைப்பது சிரமமாக உள்ளது. மீண்டும் டேபிள் அமைத்து, டேட்டாவைத் தனித்தனியே காப்பி செய்திட வேண்டியுள்ளது. இதற்கான எளிய சுருக்கு வழி உள்ளதா? வேர்ட் 2007 புரோகிராமினை நான் பயன்படுத்தி வருகிறேன்.
எம்.அனுசுயா தேவி, தென்காசி.
பதில்:
நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் 2007 தொகுப்பில் இதற்கான டூல் ஒன்று தரப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி, டேபிளைப் பிரிக்கலாம். அதற்காக எப்படி செயல்பட வேண்டும் என கீழே தருகிறேன்.
1. முதலில் எந்த படுக்கை வரிசையிலிருந்து டேபிளைப் பிரித்து, அதனை முதல் வரிசையாக அமைக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. அடுத்ததாக, ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு முன்னதாக, உங்கள் கர்சர் டேபிள் உள்ளாக இருப்பது மிகவும் அவசியம். டேபிளின் உள்ளாக உங்கள் கர்சர் இருந்தால் தான், இந்த டேப்பினைப் பார்க்கலாம்.
3. இதனைத் தொடர்ந்து, Merge group குரூப் உள்ளாக உள்ள Split Table டூலைக் கிளிக் செய்திடவும்.
4. உடன் வேர்ட், சாதாரணமாக அமைக்கப்படும் பாரா போன்ற பார்மட் ஒன்றினை, அந்த வரிசைக்கு முன்பாக இணைக்கும். இதனால், இரண்டு டேபிள்கள் தனித்தனியாக அங்கே உருவாக்கப்படும்.
எளிதான இந்த வழியினைப் பின்பற்றி, பெரிய டேபிள் ஒன்றை சிறிய டேபிள்களாக அமைக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X