இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2015
00:00

ஒரு பெண் தனியே நின்றால்...
அலுவலகம் முடிந்து வரும் தங்கையை அழைத்து வர, பஸ் நிலையம் சென்ற போது, பரபரப்பான அந்த சாலையின் நடுவே, 'ஏண்டா... பொம்பளைங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா... பொறுக்கி நாயே...' என திட்டியபடி, ஒருவனை, செருப்பால் விளாசினார் இளம் பெண் ஒருவர்.
'என்ன விஷயம்?' என்று அவரிடம் விசாரித்தோம். 'உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாக்குறேன். ஸ்பெஷஸ் கிளாஸ் முடிச்சுட்டு வர, லேட்டாகிடுச்சு. அதனால, பஸ் ஸ்டாப்பில தனியாக நின்றிருந்தேன். இருட்டில் தனியாக நிற்கிறத பார்த்ததும், அருகில் யாரும் இல்லாத தைரியத்தில், 'வர்றியா'ன்னு கேட்டான்.
'அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால, இவனுக்கு பாடம் புகட்டணும் என்பதற்காக, 'வர்றேன்'ன்னு சொல்லி இங்க அழைச்சுட்டு வந்தேன்...' என்றார்.
உடனே, எல்லாரும் சேர்ந்து, தர்ம அடி கொடுத்து, புத்தி சொல்லி அனுப்பினோம். அப்பெண்ணின் தைரியத்தை பாராட்டி, பின், பத்திரமாக பஸ் ஏற்றி விட்டோம். பெண்களே... ஆபத்து நேரத்தில் பயப்படுவதை தவிர்த்து, சமயோசிதமாக செயல்பட ஆரம்பித்தால், ரவுடிகள் உங்களிடம் வாலாட்ட மாட்டார்கள்!
— பி.மகேந்திரன், திருப்பூர்.

குடும்ப ஒற்றுமை நீடிக்க...
தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள் ஆறு பேர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஆனால், சிறு வயதில் எங்களுக்குள் இருந்த ஒற்றுமை, இப்போது இல்லை. ஏதாவது விசேஷ நாட்களில் சந்தித்தால் மட்டும் நலம் விசாரித்துக் கொள்வோம்; மற்றபடி எந்த ஒரு தொடர்பும் எங்களுக்குள் இல்லை. இந்நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் உறவுமுறை குறித்து பிள்ளைகளுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால், குடும்ப உறுப்பினர் அனைவரின் மொபைல் நம்பரை வாங்கி, 'வாட்ஸ்ஆப்'பில், எங்க அம்மாவின் பெயரில் ஒரு குரூப் துவங்கினேன்.
இப்போது, குடும்ப உறுப்பினர் அனைவரும் தங்களுடைய கருத்துகளுடன், புகைப்படங்கள் மற்றும் அன்றாட குடும்ப நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்; இதனால், நாங்கள் அனைவருக்கும் ஒரு கூட்டு குடும்ப உணர்வை உணர்கிறோம்.
— ரா.ஸ்ரீதர், திருப்பூர்.

ஒரு தாயின் எச்சரிக்கை!
என் இரண்டு வயது குழந்தையுடன், பேருத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு பின் சீட்டிலிருந்த இளைஞன் ஒருவன், குழந்தைக்கு வேடிக்கை காட்டுவதும், அதனுடன் விளையாடுவதுமாக இருந்தான்.
குழந்தை அவனுடன் சிறிது பழகியதும், 'பாப்புக்குட்டி... வா வா...' என குழந்தையை அழைக்க, குழந்தை அவனிடம் தாவியது. குழந்தையை என்னிடமிருந்து வாங்குவதும், திருப்பிக் கொடுப்பதும், விளையாட்டு காட்டுவதுமாக இருந்த அவன், குழந்தையை வாங்கும் போதும், கொடுக்கும் போதும், மெல்ல கையால் என்னை உரசுவதும், தடவுவதுமாக சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான். அவனை முறைத்த நான், அதன்பின், குழந்தையை என்னிடமே வைத்துக் கொண்டேன்.
குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்களே... உங்கள் குழந்தைக்கு வேடிக்கை காட்டும் ஆண் நரிகளின் இறுதி நோக்கம், உங்கள் உடலாக தான் இருக்கும். எனவே, வேடிக்கை காட்டும் கோமாளிகளிடம் கவனமாக இருங்கள்!
ஜெயலஷ்மி நந்தக்குமார், தேனி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam Sam - maryland,யூ.எஸ்.ஏ
09-நவ-201523:05:53 IST Report Abuse
Sam Sam ம்ம். என் தம்பியை நான் நேரில் பார்த்து பல வருடம் ஆகி விட்டது. என் மனைவியின் மனநல பிரச்சினை எங்களை எதிரி ஆக்கி விட்டது. இதில் என் தம்பி மனைவிக்கு ரொம்ப பெருமை மற்றும் மகிழ்ச்சி. என் தம்பி பேச்சில் ஒரு பயம் தெரிகிறது. பார்க்க விருப்பம் இருப்பது போல் பேசுவான் ஆனால் முயற்சி செய்தால் விலகி விடுவான். அவர்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமல்லவா? என் மகனுக்கு ஒரு சித்தப்பா இருப்பது மட்டும் தான் தெரியும்.. வருடம் 7 ஆகிறது. சித்தி என்றால் என்ன, என்பான். என் குடும்பம் உடல் மற்றும் மன நல பிரச்சினையால் தடுமாறுகிறது. ஆனால் பொறாமையும் வெறுப்பும் சுய நலமும் இங்கே தான் அதிகம். திருமதி பாலகிரி சொன்னது போல் நல்லவர்களும் பிறர் பிரச்சினைகளை புரிந்து கொள்பவர்களும் மிக குறைவு.
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
15-நவ-201500:58:19 IST Report Abuse
Girijaசாம் நீங்க சொன்னது தான் எங்கள் குடும்பத்தில் நிகழ்கிறது, உறவுகளுடன் பேசினால் குற்றம், நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்று, காசு காசு என்று துரத்தும் கூட்டம், இல்லாவிட்டால் நீ மட்டம், உன் கணவன் மட்டம், உன் பிள்ளைகள் மக்கு என்று நகைக்கும் உறவினர் கூட்டம்,"எங்கே மனித ஜாதி இல்லையோ அங்கே எனக்கொரு இடம் வேண்டும் " என்று கூட எனக்கு ஆசை இல்லை, ஆளை விடுங்கடா சாமி காற்றில் கலந்துவிடுகிறேன் என்று வேண்டுகிறேன் நாளும்,...
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
09-நவ-201500:02:21 IST Report Abuse
p.manimaran முத்தான கருத்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
08-நவ-201516:23:12 IST Report Abuse
Girija ஸ்ரீதர் அவர்களுக்கு, குடும்பங்களில் இடைவெளி வருவது வந்தது எதனால், பணத்தினால், பொறாமையால் தான், இதற்க்கு வாட்ஸ் அப்பும் தப்பாது ஒரு அப்பும் தப்பாது, நாளைக்கே உங்க கூட பிறந்தவர் நான் அங்கே சென்றேன் இங்கே சென்றேன், வளையல் வாங்கினேன் என்று படத்தை போட்டால், நீங்கள் உங்கள் வீட்டில் நூடில்ஸ் தான், நம்ப பணம் தேவைன்னு கேட்டப்ப இல்லேன்னு சொன்னங்க?, நம்ப வீட்டு பசங்களுக்கு வரும்போதோ போகும்போதோ கேவலம் ஒரு விளையாட்டு சாமான் வாங்கிதரமுடியல, அதுங்களை ஒரு சினிமாவுக்கு அட குறைஞ்சபட்சம் வெளிய கூட கூட்டிட்டு போக காசு கணக்கு பாத்து தங்கிட்டு போனவங்க, இப்போ இதெல்லாம் வாங்க முடியுது, போக முடியுது இல்ல? உங்க வீட்டு மனுஷங்க எல்லோரும் உங்க தலையில மொளகா அறைக்கறாங்க? அவங்கதான் உங்களுக்கு நல்லவங்க? நான் உண்மையை சொன்ன கெட்டவ? அப்படிதானே? உங்க அக்கா பிசாசுகள் தங்கை பிசாசுகள் இங்க வந்தால் ரகளை பண்ணி இருக்கிறதை சுருட்டிகிட்டு போறாளுக? உங்க அண்ணன் தம்பி அவங்க பொண்டாட்டியை தலைக்கு மேல் வச்சு தாங்கற மாதிரியா என்னை தாங்கறீங்க? நீங்க என்னையும் குழந்தைகளையும் எங்கயாவது சந்தோஷமா கூட்டிட்டு போய் இருக்கீங்க? இதுவே நீங்கள் படம் போட்டேர்கள் என்றால் உங்கள் சகோதரிகள், அவனுக்கு என்ன, அந்த மகராசி சொன்ன போதும் வானத்தையே வில்லாக வளைப்பான், நாம உதவி கேட்டா என்னமோ பஞ்சத்தில் இருப்பவன் போல் அளப்பான், இல்லாவிட்டால் சகோதரிகளுக்குள், நீ அவ குழந்தைக்கு மட்டும் பார்த்து பார்த்து செய்யறே, என் குழந்தைகள் மட்டமா? - ஆயிடுச்சா, நீங்க உங்க க்ருபினில் இருந்து வெளியே வந்தாச்சா வாழ்த்துக்கள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X