விண்டோஸ் 10 தரும் வியக்கத்தக்க வழிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 நவ
2015
00:00

மிக விரைவாகச் செயல்படும் வகையில், பல வழிகளை நமக்கு விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவதே ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

செயல்படா விண்டோக்களைச் சுருக்க: நாம் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களைத் திறந்து, பல செயலிகளில் பணியாற்றுவோம். பின்னர், ஒரே செயலி இயங்கும் ஒரே விண்டோவில் நம் கவனம் இருக்கும். அப்போது மற்ற விண்டோக்களை, நாம் திரையில் திறந்து வைக்காமல், மினிமைஸ் செய்து, டாஸ்க் பாருக்குக் கொண்டு செல்லலாம். இதற்கு விண்டோஸ் 10 ஒரு விந்தையான வழியைத் தருகிறது. செயல்படாத விண்டோக்களின் மேலாக உள்ள டைட்டில் பாரை, மவுஸ் கொண்டு பிடித்து சிறிது அசைக்கவும். ஒன்றிரண்டு அசைவுகளுக்குப் பின், அனைத்து செயல்படா விண்டோக்களும் கீழாக மினிமைஸ் செய்யப்படும்.

ப்ராப்பர்ட்டீஸ் மெனு: பைல் எக்ஸ்புளோரர் (File Explorer) சென்று, ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, ஏதேனும் ஒரு பைல், புரோகிராம் அல்லது போல்டர் மீது டபுள் கிளிக் செய்தால், அதற்கான ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும்.

புதிய விண்டோஸ் கீ ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் 10 சிஸ்டத்தில், சில புதிய விண்டோஸ் கீ இணைந்த ஷார்ட் கட் வழிகள் தரப்பட்டுள்ளன. Win key + I அழுத்த புதிய செட்டிங்ஸ் மெனு கிடைக்கும். Win key + A அழுத்தினால், புதிய ஆக் ஷன் சென்டர் கிடைக்கும். Win key +X அழுத்தினால், 'ரகசியமான' ஸ்டார்ட் மெனு கிடைக்கும்.

ஸ்டார்ட் மெனுவில் ரீசைக்கிள் பின் என்னும் குப்பைத் தொட்டி: உங்களுக்கான குப்பைத் தொட்டி மிக எளிதில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டுமா? அதனை ஸ்டார்ட் மெனுவில் அமைத்துவிட்டால், மிக எளிதாக இருக்கும் அல்லவா! ரீசைக்கிள் பின் ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Pin to Start என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய ஸ்டார்ட் மெனுவின் வலது பக்கம் அது இடம் பெறும்.

பின்னணியில் ஸ்குரோலிங்: விண்டோஸ் 10 சிஸ்டத்தில், பல விண்டோக்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்களா? அப்போது, பின்னணியில் உள்ள விண்டோவினை ஸ்குரோல் செய்திட விரும்பினால், அதற்கான வசதியையும் சிஸ்டம் தருகிறது. இது மாறா நிலையில் கிடைக்கும் வசதி இல்லை. சில செட்டிங்ஸ் அமைப்பு மேற்கொள்ள வேண்டும். Settings Devices Mouse & touchpad எனச் செல்லவும். அங்கு Scroll inactive windows when I hover over them என்று இருப்பதை இயக்கி (On) வைக்கவும். இதன் பின்னர், செயல்படாத விண்டோவில் உங்கள் மவுஸை வைத்து, உங்கள் மவுஸில் உள்ள ஸ்குரோலிங் வீலை முன்புறமாக அல்லது பின்புறமாக நகர்த்தி, விண்டோவினை ஸ்குரோல் செய்திடலாம்.

ஸ்டார்ட் மெனுவில் வேகமாக இயங்க: ஸ்டார்ட் மெனுவில் மிக வேகமாக, புரோகிராம்களைப் பெற ஒரு விரைவு வழியை, விண்டோஸ் 10 தருகிறது. ஸ்டார்ட் மெனுவின், All apps பிரிவில், ஒவ்வொரு பிரிவின் மேலாக உள்ள எழுத்து அல்லது எண்ணை கிளிக் செய்தால், "speed dial" ஜம்ப் லிஸ்ட் ஒன்று கிடைக்கும். இதில் ஸ்டார்ட் மெனுவின் எந்த பிரிவிற்கு நீங்கள் உடனே செல்ல விருப்பமோ, அதற்கான எழுத்து அல்லது எண்ணில் கிளிக் செய்தால் போதும்.

டாஸ்க் பார் கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள்: நீங்கள் டாஸ்க் பாரில், புரோகிராம்களை 'பின்' செய்து வைத்திருந்தால், அவற்றை கீ போர்ட் ஷார்ட் கட் மூலம் நேரடியாகத் திறக்கலாம். இதற்கு விண்டோஸ் கீ + அந்த புரோகிராம் பெற்றிருக்கும் இடத்திற்கான எண்ணை அழுத்த வேண்டும். இரண்டாவதாக 'பின்' செய்யப்பட்ட புரோகிராமினைப் பெற விண்டோஸ் கீயுடன் '2' அழுத்த வேண்டும். 'பின்' செய்யப்பட்ட மற்றும் 'பின்' செய்யப்படாத புரோகிராம்களைப் பெற Win key +T அழுத்திப் பெறலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X