கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 நவ
2015
00:00

கேள்வி: நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. என் பயன்பாட்டிற்காக, வீட்டில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறேன். வீட்டில் உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் (விண்டோஸ் 7) மெனு மற்றும் பிறவற்றில் உள்ள சொற்களை என்னால் எளிதாகப் படிக்க முடிகிறது. ஆனால், நான் பயன்படுத்தும் லேப்டாப் கம்ப்யூட்டரில், அதே விண்டோஸ் 7 இயக்கத்தில் உள்ள மெனுவில், சிறிய எழுத்துகள் உள்ளதனால், எதுவும் எளிதாகப் படிக்க இயலவில்லை. இதனை எப்படி பெரிதாக்கலாம்?
கா. நஞ்சுண்ட மூர்த்தி, தென்காசி.
பதில்:
பொதுவாக, அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. காட்டினாலும், சிரமங்கள் இருப்பின் சொல்வதில்லை. உங்களுடைய முயற்சிக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் சிரமம் நீக்கக் கீழ்க்காணும் வழிகளை லேப்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளவும்.
ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவின், மேல் வலது மூலையில் உள்ள தேடல் கட்டத்தில் Change window colors and metrics என டைப் செய்திடவும். இது Personalization என்ற ஆப்ஷனைக் காட்டும். இங்கு காணப்படும் Change window colors and metrics என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் Windows Color and Appearance என்ற விண்டோவில் அடுத்து இருப்பீர்கள். நீங்கள் விண்டோவின் எந்த பகுதியினை மாற்ற விரும்புகிறீர்களோ, அதனை அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் தேர்ந்தெடுக்கவும். இதில் காட்டப்படும் ஒவ்வொரு வகைக்கும், எழுத்து வகை அளவு மற்றும் வண்ணத்தினை மாற்ற ஆப்ஷன் கிடைக்காது. எடுத்துக் காட்டாக, Menu விண்டோவில் மாற்ற வேண்டும் எனில், நீங்கள் எழுத்து வகை, மாற்ற விரும்பும் அளவு, வண்ணம், அழுத்தமாகவா என்ற விருப்பம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் மாற்ற விரும்பும் அனைத்திற்கும் முன் தோற்றக் காட்சி விண்டோவின் மேலாகக் காட்டப்படும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வழக்கமாகப் பார்க்கும் அளவில் வண்ணங்கள், சிஸ்டம் விண்டோவில் தோன்றாது. எடுத்துக் காட்டாக, ஒரு வாழ்த்து அட்டையில், ஒரு வண்ணம் மிக அழகாக இருக்கலாம். ஆனால், அதே அளவில் சிறப்பான தோற்றம் சிஸ்டம் விண்டோவில் கிடைக்காது. முன் தோற்றக் காட்சியைப் பார்த்த பின்னர், அது உங்களுக்குப் பிடித்தமாக இருந்தால், OK கிளிக் செய்து வெளியேறவும். மறுபடியும் பிடிக்கவில்லை என்றால், மறுபடியும் இதே போல சென்று மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அண்மையில் மாறினேன். இதன் பின்னர், என் ஜிமெயில் அக்கவுண்ட்டில் அதிகான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் வருகின்றன. சில நாட்களில் இதன் எண்ணிக்கை 60 லிருந்து 100 வரையாக உள்ளது. நான் விண்டோஸ் 7 பயன்படுத்தும் போது, இந்த அளவிற்கு வந்ததில்லை. இதனை எப்படித் தடுக்கலாம்? ஜிமெயிலில் செட் அப் மூலம் இதனைத் தடுக்க முடியுமா?
ஆர். ஸ்நேகலதா, பெங்களூரு.
பதில்:
நீங்கள் என்ன வகை இமெயில் க்ளையண்ட் பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை. இணையம் சென்று, ஜிமெயில் தளத்தில் நீங்கள் மெயில்களைப் பார்க்கிறீர்களா? அப்படியானால், விண்டோஸ் 10 சிஸ்டத்தின் இன்டர்பேஸில் எந்த மாற்றமும் இந்த வகையில் ஏற்படுத்தவில்லை என்ற தகவலைத் தருகிறேன். எனவே, இதற்குக் காரணம் ஜிமெயில் தளமாகத்தான் இருக்கும். இந்த மெயில்களை “spam” எனக் குறிப்பிட்டு, ஜிமெயில் தளத்தின் சப்போர்ட் பிரிவிற்கு இது குறித்து மெயில் அனுப்பவும். இது ஜிமெயில் வடிவமைப்பாளர்களுக்கு, ஸ்பேம் அஞ்சல்களைக் கட்டுப்படுத்துவதில் வழிகளைக் காண உதவும்.
நீங்கள் அவுட்லுக் அல்லது விண்டோஸ் 10 மெயில் அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுடைய இமெயில் க்ளையண்ட் செயலியில், செக்யூரிட்டி செட்டிங்ஸ் சென்று, ஸ்பேம் வடிகட்டுவதில் இன்னும் சற்றுக் கடுமையான நிலையை அமைக்கவும். நீங்கள் விண்டோஸ் 10 சிஸ்டம் அமைத்த போது, இமெயில் க்ளையண்ட் புரோகிராமினை மாற்றி இருந்தால், அது கூட காரணமாக இருக்கலாம். ஆனால், எந்த நிலையிலும், விண்டோஸ் 10 காரணமாக இருக்காது.
உங்களுடைய நண்பரின் தொடர்பு மூலம், உங்களுடைய அஞ்சல் முகவரியை, ஸ்பேம் மெயில் அனுப்புபவர்கள் தெரிந்து கொண்டு, உங்களுக்கும் ஸ்பேம் மெயில்களை அனுப்பும் வழிகளை மேற்கொண்டிருக்கலாம். எப்படி இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தும் மெயில் புரோகிராமில், இவற்றைத் தடுக்க வழிகள் தரப்பட்டிருக்கும். அவற்றை இயக்கவும்.

கேள்வி: என் அலுவலகத்தில், நான் அமைக்கும் வேர்ட் டாகுமெண்ட்களை, இங்கு பணியாற்றும் சிலரும் பார்த்து, அவர்கள் விரும்பும் மாற்றங்களையும் மேற்கொள்வார்கள். இவை அனைத்தும் Track Changes என்ற வகையில் அமையும். ஆனால், சிலர், நான் மேற்கொண்ட மாற்றங்களை நீக்கிவிடுகின்றனர். அல்லது இணைத்துவிடுகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், நான் ஏற்படுத்திய மாற்றங்களை, மற்றவர்கள் மாற்ற முடியாமல் சேவ் செய்திட அல்லது லாக் செய்திட முடியுமா? நான் பலவகைகளில் முயன்றும் இயலவில்லை.
ஆர். கிறிஸ்டோபர் நெல்சன், புதுச்சேரி.
பதில்:
மிக அருமையான, தேவையான, சிந்திக்க வைக்கும் கேள்வி. நன்றி. வேர்ட் புரோகிராமில் இதற்கான நேரடியான வழி இல்லை. ஆனாலும், சற்று சுற்றி வளைத்து இதனை மேற்கொள்ள முடியும். இதோ அந்த வழியினைத் தருகிறேன்.
1. ரிப்பனில் Review டேப் பெறவும்.
2. Protect என்ற குரூப்பில் Protect Document என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Protect Document என்ற பிரிவினைக் காட்டும். இது உங்கள் டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டப்படும்.
3. இதில் Editing Restrictions என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் Allow Only This Type of Editing In the Document என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த செக் பாக்ஸில் வேர்ட் ஒரு கீழ்விரி மெனுவினைத் தரும்.
4. இந்தப் பட்டியலைப் பயன்படுத்தி Tracked Changes என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இதில் Start Enforcing Protection என்பதனை இயக்கவும்.
6. இங்கு வேர்ட் Start Enforcing Protection டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்கவும். பாஸ்வேர்டினை இரு முறை அமைக்க வேண்டியதிருக்கும். பின் ஓகே கிளிக் செய்து, வழக்கம்போல டாகுமெண்ட்டினை சேவ் செய்திடவும். இந்த பாதுகாப்பு இருப்பதால், உங்களுக்கு அடுத்தபடியாகப் பார்ப்பவர்கள், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களில் கை வைக்க முடியாது. அவர்கள் மாற்றங்களை மேற்கொள்ளலாம். அவை ட்ரேக் சேஞ்சஸ் என்ற முறையில் காட்டப்படும்.

கேள்வி: எனக்கு பேஸ்புக் சமூக தளத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக அக்கவுண்ட் உள்ளது. சமீபத்தில், என் நண்பர்கள் பதிவில் ஏதேனும் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தால், அதன் அருகே சென்றவுடன் தானாக இயங்கத் தொடங்கி விடுகிறது. நான் விரும்பாத விடியோவாக இருந்தால், எனக்கு அவர் மீது கோபம் வருகிறது. நான் விருப்பப் பட்டால் மட்டுமே, அது இயங்கும் வகையில் அமைக்க முடியுமா? முன்பு அப்படித்தான் இருந்தது. எப்படி மாறிவிட்டது எனத் தெரியவில்லை. தயவுசெய்து செட் அப் வழிகளைக் கூறவும்.
இரா. சங்கரலிங்கம், பண்ருட்டி.
பதில்:
சற்று கோபம் தரத்தக்க சூழ்நிலை தான். நீங்கள் நண்பர்களிடம் கோபப்படாமல், இதனை மாற்றி அமைக்க வழி தேடுவது உங்கள் நல்ல குணத்தைக் காட்டுகிறது. இனி, அதற்கான வழிகளைக் காணலாம்.
பேஸ்புக் தளத்தில் முதலில் உங்கள் அக்கவுண்ட் பக்கத்தில் நுழையவும். பின்னர் திரையில், மேலாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்து, கிடைப்பதில் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்து செட்டிங்ஸ் மெனு பெறவும். திரையின் இடது புறம் உள்ள பிரிவில், கீழாக Videos என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். பின்னர், இரண்டு பிரிவுகள் காட்டப்படும். ஒன்று மாறா நிலையில் உள்ளவை; இன்னொன்று Auto-Play Videos. பேஸ்புக் திறந்தவுடன், அதில் பதியப்பட்டுள்ள வீடியோக்கள் உடனே இயங்க வேண்டாம் என முடிவெடுத்தால், இதன் அருகில் உள்ள அம்புக் குறியை கிளிக் செய்து, அதில் Off என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான். இனி, நீங்கள் எந்த வீடியோவினைப் பார்க்க வேண்டும் என்றாலும், நீங்களாக அதற்கான பட்டனை அழுத்தாமல் அது இயங்காது.

கேள்வி: நான் புதிதாய்ச் சேர்ந்த அலுவலகத்தில், விண்டோஸ் 7 மற்றும் வேர்ட் 2007 கொண்ட கம்ப்யூட்டர் தந்துள்ளனர். இங்கு தமிழில் டாகுமெண்ட் தயாரிக்கும் வேலை அதிகம். யூனிகோட் தமிழ் பயன்படுத்துகிறேன். தமிழ் ட்ரைவர் ஏற்கனவே லோட் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழில் டைப் செய்கையில், உயிர் மெய் எழுத்தினைத் தொடர்ந்து மெய்யெழுத்து டைப் செய்தால், முதல் மெய்யெழுத்து, உயிர் நீங்கி மெய்யெழுத்தாக அமைகிறது. அதாவது, ”படங்கள்” என்று டைப் செய்தால், ”படங்க்ள்” என்று ஆகிறது. இது எதனால்? ஆனால், என் அருகில் அமர்ந்து வேலை பார்க்கும் சக தோழரின் கம்ப்யூட்டரில் சரியாக வருகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம். அதற்கான வழி என்ன?
-இரா. பன்னீர்செல்வம், கோவை.
பதில்
: இது ட்ரைவரால் ஏற்படும் பிரச்னை அல்ல. உங்களின் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் 2007ல் உள்ள செட்டிங்ஸ் அமைப்பால் ஏற்படும் பிரச்னை. இந்த சிக்கலை அதிலேயே தான் தீர்க்க வேண்டும். அதற்கான வழிகளைச் சொல்கிறேன்.
முதலில் வேர்ட் ரிப்பனில், கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த விண்டோவின் வலது புறம் Language Settings என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் Enabled Editing Languages என்பதில், English மற்றும் அதற்குக் கீழாக, Tamil என்று இருக்கும். Tamil என்பதனைத் தேர்ந்தெடுத்து, Remove என்பதில் கிளிக் செய்து, அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் கூறும் மெய் எழுத்து பிரச்னை வராது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saba - Coimbatore,இந்தியா
10-நவ-201520:14:29 IST Report Abuse
Saba வணக்கம் ஐயா. உங்கள் கம்பீயூட்டர் மலர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. MS ஆபீஸ் WORD மற்றும் Excel படிப்படியாக கற்றுக்காெள்ள சிறந்த இணையதள முகவரியை பகிருமாறு கேட்டுக்காெள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X