கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 நவ
2015
00:00

கேள்வி: ஐ போனின் எந்த மாடலில், எப்போது வந்த ஐ போனில், மெமரி கார்டை இணைக்கும் வசதி தரப்பட்டது. புதியதாக வந்துள்ள போனில், இந்த வசதி இல்லை. கூடுதல் மெமரி கொண்ட போன் எனில், விலை எக்கச்சக்கமாய் உள்ளது. எனவே தான் இதனைத் தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.
என். ராமானுஜம், திருப்பூர்.
பதில்:
எந்த மாடல் ஐபோனிலும் மைக்ரோ எஸ்.டி. கார்டைப் பொருத்தும் வசதி தரப்படவில்லை. ஆப்பிள் நிறுவனம் வழங்கும், க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதியை நீங்கள் பயன்படுத்தலாம். ஐபோனைத் திறக்க முடியாது. இயக்கத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதற்கான பழுது நீக்கும் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, உங்களுக்குப் புதிய போன் தருவார்கள். எனவே, மெமரி உங்களுக்கு அதிகம் வேண்டும் என்றால், தேவைப்படாத, அதிகம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை நீக்கவும். அவை எப்போதாவது தேவைப்பட்டால், எப்போது வேண்டும் என்றாலும், இலவசமாக ஐ ட்யூன்ஸ் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். போனில் அதிகம் போட்டோக்கள் சேர்ந்துவிட்டால், போனை பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைத்து, கம்ப்யூட்டருக்கு மாற்றிவிடவும். மாற்றியபின், போனில் இருப்பவற்றை அழித்துவிடவும். ஐபோன் மட்டுமல்ல, ஐபேட் சாதனத்திலும், வெளியிலிருந்து இணைக்கக் கூடிய ஸ்டோரேஜ் சாதனங்கள் எதனையும் ஆப்பிள் அனுமதிப்பதில்லை.

கேள்வி: யாஹு மெயில் பயன்படுத்துகிறேன். என்னால், அதனைச் சரியாகப் பெறவில்லை என்ற நிலையில், அதனை நீக்கி, கம்ப்யூட்டரில் மீண்டும் செட் அப் செய்தேன். ஆனால், இப்போது “private browsing“ நிலையை ஆப் செய்திட வேண்டும் என செய்தி காட்டுகிறது. இது எதைக் குறிக்கிறது என்று தெரியவில்லை. வழி காட்டவும். டிப்ஸ் தரவும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கா. நித்யானந்தம், பெங்களூரு.
பதில்:
நீங்கள் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது பிரவுசர் பயன்படுத்துகிறீர்கள் என்ற தகவலைத் தரவில்லை. இருப்பினும் அனைவருக்கும் இந்த தகவல் செல்ல வேண்டும் என்பதால், அனைத்து சிஸ்டங்களுக்குமான தீர்வைத் தருகிறேன்.
“Private browsing'' என்பது உங்கள் இணைய பிரவுசரில், நீங்கள் மேற்கொள்ளும் தேடல், செல்லும் தளங்களை, கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசர் அறியாமல் தடுக்கும் நிலையாகும். இதனால், நம் தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், இது மின் அஞ்சல் போன்ற விவகாரங்களில் சிரமங்களை ஏற்படுத்தும். ஏனென்றால், மின் அஞ்சல் செயலிகள் சீராகச் செயல்பட, சில குக்கிகள் போன்றவை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளன. நீங்கள் இன்டர்நெட் பிரவுசர் பயன்படுத்துவதாக இருந்தால், InPrivate இயக்கப்பட்டிருந்தால், அதனை இடது பக்கத்தில் InPrivate Off என இருப்பதைக் காணலாம். இதன் இயக்க நிலையை நிறுத்த, விண்டோவின் வலது பக்கத்தில் உள்ள கியர் குறியீட்டில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Security and InPrivate என்பதைத் தேர்தெடுக்கவும். இதில் திறக்கப்படும் விண்டோவை மூடுவதன் மூலம் InPrivate நிலை இயக்கத்தினை நிறுத்தலாம். இன்டர்நெட் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரில், இதனை மீண்டும் இயக்கினால் மட்டுமே, தடம் அறியப்படாத, பதியப்படாத வகையில் பிரவுசிங் பணியை மேற்கொள்ளலாம். இந்த இரண்டு பிரவுசர்களிலும் Ctrl + Shift + P என்ற கீகளை அழுத்துவதன் மூலமும் இதனை இயக்கலாம்.
நீங்கள் சபாரி பிரவுசர் மூலம் உங்கள் அஞ்சலைப் பெற முயற்சித்தால், வலது பக்கம் கீழாக இருக்கும் இடத்திற்குச் செல்லாவும். இங்கு இரு சதுரங்கள் ஒன்றின் மீது ஒன்றாக இருக்கும் குறியீட்டில் டேப் (தட்டுதல்) செய்திடவும்.
அடுத்து Private என்பதில் தட்டி, பிரைவேட் பிரவுசிங் நிலையை இயக்கவும், நிறுத்தவும் செய்திடலாம். நீங்கள் ஐபேட் சாதனத்தினைப் பயன்படுத்துவதாக இருந்தால், நீங்கள் யாஹூ மெயில் செயலியை, அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து (app store) பெற்று பயன்படுத்தலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி உள்ள கம்ப்யூட்டரில், வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8, இன்ஸ்டால் செய்ய முடியாததால், அதனையே பயன்படுத்தி வருகிறேன். உருவாக்கிய டாகுமெண்ட் ஒன்றைத் திறப்பதற்கு முயற்சிக்கையில், டெஸ்க்டாப்பில், வேர்ட் புரோகிராமிற்கான ஐகானில் கிளிக் செய்திடாமல், வேறு ஒன்றை கிளிக் செய்துவிட்டேன். அது முதல், அனைத்து ஐகான்களும், டெஸ்க் டாப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டது போல காட்சி அளிக்கிறது. அனைத்து ஐகான்களிலும் செக் மார்க் அடையாளம் ஒன்று காணப்படுகிறது. இதனை எப்படி நீக்குவது? இதனால், சிக்கல்கள் ஏற்படுமா?
என். முத்துவிநாயகம், சின்னமனூர்.
பதில்:
பதட்டப்பட வேண்டாம். இதனைச் சரி செய்துவிடலாம். விண்டோஸ் சிஸ்டம், மாறா நிலையில், டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களுக்கு “ட்ராப் ஷேடோஸ்” எனப்படும் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இதனால், டெஸ்க்டாப் ஐகானில் உள்ள டெக்ஸ்ட் தெளிவாகக் காட்டப்படும். உங்களுடைய தவறைச் சரி செய்திட, கீழ்க்காணும் வழி முறைகளைப் பின்பற்றவும்.
1. மை கம்ப்யூட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து Advance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Performance என்ற பிரிவில் Settings என்பதில் கிளிக் செய்திடவும்.
3. பின்னர் Use drop shadows for icon labels on the desktop என்பதில் செக் மார்க் அடையாளம் அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறினால், ஐகான்கள் அனைத்தும் பழைய நிலையில் காட்டப்படும்.
இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், இணைய இணைப்பிற்குப் பயன்படுத்தினால், வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் எளிதில் கம்ப்யூட்டரைத் தாக்கும் அபாயம் உண்டு. எனவே, தவிர்க்கவும்.

கேள்வி: டாகுமெண்ட்டில் டேபிள்களைத் தயாரிக்கையில், நெட்டு வரிசை (Column)களைப் பல பயன்பாட்டிற்காக, டிசைன் அமைப்பதற்காக, துல்லியமான அளவில் அமைக்க வேண்டியதுள்ளது. இவற்றில் டேட்டா அமைக்கையில் அவை விரிவடைகின்றன. அப்படி அமையக் கூடாது. இதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்?
எஸ். சுமதி ரவீந்திரன், செங்கல்பட்டு.
பதில்
: நல்ல கேள்வி. நிச்சயமாக, நீங்கள் முடிவு செய்திடும் அளவில், டேபிளின் நெட்டு வரிசைகளை அமைக்க முடியும். கீழே தந்துள்ள குறிப்புகளின்படி செயலாற்றவும்.
1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.
5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.
6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.
8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ளது. அவ்வப்போது, எனக்கு வரும் டெலிபோன் அழைப்புகள் குறித்து இதன் டெஸ்க்டாப் திரையில், ஸ்டிக்கி நோட்ஸ் அமைத்து எழுதி வைத்துப் பயன்படுத்த விரும்புகிறேன். இதனை எப்படி உருவாக்குவது? என விளக்கம் அளிக்கவும்.
என். ஜெயராமன், கீழக்கரை.
பதில்
: இது போன்ற செயல்பாடுகளுக்குத் தான், ஸ்டிக்கி நோட்ஸ் டூல் தரப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரிலேயே தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு, இது ஒரு நல்ல வசதி. பேப்பர், பேனா அல்லது பென்சில் தேடி, குறிப்புகளை எழுதி வைக்க வேண்டியதில்லை. எத்தனை ஸ்டிக்கி நோட் பேட் வேண்டுமானாலும் உருவாக்கிப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுத்த, பல வண்ணங்களில் இவற்றை உருவாக்கிப் பயன்படுத்தலாம். இனி, இவற்றை உருவாக்குவதற்கான வழிகளையும் பயன்படுத்துவதற்கான வழிகளையும் காணலாம்.
ஸ்டிக்கி நோட்ஸ் பயன்பாட்டினை இயக்கத்திற்குக் கொண்டு வர, ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். டெஸ்க் டாப் மட்டுமின்றி, நீங்கள் ஏதேனும் ஒரு புரோகிராமினைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், எடுத்துக் காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றினைத் தயாரித்துக் கொண்டிருந்தால், அதன் மீதாகத் திரையில் ஸ்டிக்கி நோட்ஸ் தோன்றும். நீங்கள் வேர்ட் டாகுமெண்டில் மீண்டும் செயல்பட ஆரம்பித்தால், ஸ்டிக்கி நோட்ஸ் டாஸ்க் பாரில் அமர்ந்து கொள்ளும்.
இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இதனை இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில் காட்டப்படும். இதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் குறிப்பினை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும். நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் (“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது [Ctrl]+[D] என்ற கீகளை அழுத்த வேண்டும்.
நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் பார்மட் செய்வது போல, அழுத்தம், சாய்வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,)
நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா, மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்ப பாட்டை நாம் தேர்ந்தெடுப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு, ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.
இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால், சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:\Users\{username}\AppData\Roaming\Microsoft\Sticky Notes என்ற போல்டரில் காணலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukhari - sivakasi,இந்தியா
20-நவ-201512:13:57 IST Report Abuse
mukhari whatsapp for pc windows 7 ஆபீஸ் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய தகவல் தர முடியுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X