பெண்களை ஆண்கள் கேலி கிண்டல் செய்ய முக்கிய காரணம் என்ன?
லோ.லதா, திருச்சி.
பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் தான். ஆண்கள் கேலி செய்யும்போது, பெண்கள் தைரியமாக எதிர்ப்பு காட்டினால், அது ஆண்களின் ஈகோவை தூண்டுகிறது. இது அதிகமாகும்போது, பெண்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் தனியாக இருக்கும்போது, ஆண்கள் கிண்டல் செய்தால், அந்த இடத்திலிருந்து கிளம்புவது தான் நல்லது. இதை, பெண்களின் உரிமை, தைரியம், பலம் இவற்றோடு சம்பந்தப்படுத்துவதை விட, சமயோசிதமாக நடந்து கொள்வதே நல்லது. த.சத்யா, மனநல மருத்துவர், சென்னை.
மழைக்காலத்தில் கொசுவின் தாக்கம் அதிகமாக உள்ளது. கொசுவை விரட்ட இயற்கையான வழிமுறை உள்ளதா?
எம்.மணிமேகலை, திருநின்றவூர். ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையை லேசாக காய வைத்து புகை போட்டால், வீட்டு பக்கம் கொசு வரவே வராது. மஞ்சள், வேப்பிலை, வெங்காயத்தோல் பூண்டுத்தோல் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக் கூட புகை போடலாம். ஆனால், உங்கள் வீட்டில் ஆஸ்துமா, வீசிங் பிரச்னை யாருக்காவது இருந்தால், இந்த முறையை தவிர்ப்பது நல்லது. கறிவேப்பிலை, புதினா இலைகளை கசக்கி, வீட்டின் மூலைகளில் வைக்கலாம். ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அதன் மேல், கிராம்புகளை சொருகி வைத்தால், கொசு வராது. வெ.தெய்வநாயகம், இயற்கை வைத்தியர்
மழைக் காலத்தில் பொதுவாக, காய்ச்சல், சளி, இருமல் போன்றவை எல்லா வயதினரையும் தாக்கும். இதற்கு, சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா?
கே.சகுந்தலா, சென்னை.
கற்பூரவல்லி இலையை தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு, வடிகட்டி கஷாயமாக தரலாம். உணவில் மிளகாய் தூளுக்கு பதிலாக, மிளகுத்தூள் சேர்க்கலாம். மிளகில் இயல்பாகவே இருக்கும், 'பி-காம்ப்ளக்ஸ்' கபத்தை வெளியேற்றும்; பசியை அதிகரிக்கும். ஒரு சிட்டிகை மிளகுத்தூளை, அரை டீஸ்பூன் தேனில் கலந்து குடித்து வந்தால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தலைவலி, சளி போன்றவற்றுக்கு, மஞ்சள் தூளையும், ஓமத்தூளையும் நீரில் குழைத்து பற்று போட்டால், நோய்கள் பறந்து போகும். தெ.ரங்கபாஷ்யம், சித்த மருத்துவர், மதுரை
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வணக்கம். எனது மகளுக்கு வயது 5. அவளுக்கு கண்ணின் மேல் மற்றும் கீழ் இமைகளில் சிறு சிறு கொப்புளங்கள் உள்ளன. முதலில் சிறு கொப்புளங்கள் வந்து பிறகு பெரிய கொப்பளங்களாக மாறி விடுகின்றன. அவற்றில் சலம் பிடித்து உள்ளது போல் இருக்கிறது. டாக்டர் இடம் காமித்த பொழுது கண்ணில் உள்ள சுரப்பிகள் கேட்டு போனதால் இது வருகிறது என்கிறார்கள். டெய்லி ஒத்தடம் கொடுக்க சொன்னார். கொடுத்து வருகிறேன். மீண்டும் மீண்டும் சிறு சிறு கொப்புளங்கள் வந்து கொண்டே உள்ளது. அனால் பெரிதாக ஆகவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. எப்போது அவள் கண் சரியாகும் என்று தெரியவில்லை. அவர் கொடுத்த மொசிப்லெக்ஷின் ஆய்ன்மென்ட் போட்டு வருகிறேன். தயவு செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். 1 வருடமாக இதே தொல்லை. இது எதனால் வருகிறது. நான் எப்டி அவள் கண்களை பாதுகாப்பது என வழி காட்டுங்கள் ப்ளீஸ். இப்படிக்கு பிரேமா, கரூர்
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.