இணையம் வயது 46
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2015
00:00

அக்டோபர் 29 அன்று இணையத்திற்கு வயது 46 ஆகிறது. 1969 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், கலிபோர்னியா பல்கலைக் கழகத்திற்கும் ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்திற்கும் இடையே முதல் டேட்டா மெசேஜ், இணையத்தின் முன்னோடியான ஆர்பாநெட் (ARPANET) வழியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கற்பனையிலும் எண்ண முடியாத வேகத்தில், திட்டமிடாத திசைகளில், இணையத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் வளர்கிறது. இன்றைய அதன் நிலையை இங்கு பார்ப்போம்.
1. 2014 ஆம் ஆண்டில், பன்னாட்டளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் 280 கோடி. இவர்களில், 210 கோடி (75%) பேர் முதல் 20 நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மீதம் உள்ள 70 கோடி பேர் மற்ற 178 நாடுகளைச் சேர்ந்தவர்கள். மொத்த இணைய பயனாளர்களில், இந்த நாடு ஒவ்வொன்றிலும் 1% பேரே உள்ளனர்.
2. மொத்த இணையப் பயனாளர்களில், சீனாவில் 22% பேர் உள்ளனர். 2014ல் இவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 20 லட்சம். இதனை அடுத்து வரும் மூன்று நாடுகளான, அமெரிக்க, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த இணையப் பயனாளர்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில், சீனாவில் உள்ளோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
3. முதல் 20 நாடுகளில், இந்தியாவில், அதன் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்கள் 19% பேர் மட்டுமே. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வரும் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, மிக வேகமாக வளர்ந்து வருவதும் இங்கே தான்.
4. ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் அடிப்படையில், மிக அதிக இணையப் பயனாளர்களைக் கொண்டிருப்பது, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகும். இந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகையில், 80% பேர் இணைய இணைப்பு பெற்றுள்ளனர்.
5. 2000 முதல் 2015 வரையிலான காலத்தில், உலக அளவில் இணையப் பயன்பாடு 7 மடங்கு அதிகரித்தது. 6.5% லிருந்து 43% ஆக உயர்ந்தது.
6. தற்போதைக்கு, மொபைல் வழி இணைய இணைப்புதான், இணைய வர்த்தக சந்தையில் மிகத்துடிப்போடு இயங்குகிறது. பன்னாட்டளவில், மொபைல் இணைய இணைப்பு 47% ஆக, 2015 ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இது 17 மடங்காக உயர்ந்துள்ளது.
7. 2ஜி மொபைல் செல்லுலர் நெட்வொர்க்கில் இணைந்த மக்கள் தொகை, 2001ல் 58% ஆக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டில், 95% ஆக உயர்ந்துள்ளது.
8. 2015 ஆம் ஆண்டின் இறுதியில், வளரும் நாடுகளில் 34% வீடுகளில், இணைய இணைப்பு இருக்கும். இது வளர்ந்த நாடுகளில், 80% ஆக இருக்கும். மிகவும் குறைவாக வளர்ச்சி அடைந்த நாடுகளில், 7% வீடுகளில் மட்டுமே இணைப்பு உள்ளது. பன்னாட்டளவில் 46% வீடுகளில் இணைய இணைப்பு உள்ளது.
9. மொபைல் வழி இணைய இணைப்பு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் தான் மிக அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில், ஒவ்வொரு 100 பேரிலும், 78 பேர் மொபைல் வழி இணைய இணைப்பினைக் கொண்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் மட்டும் தான், மொபைல் இணைய இணைப்பு 20%க்கும் குறைவாக உள்ளது.
10. வளரும் நாடுகளில், வயர்வழி பிராட்பேண்ட் இணைப்புக்கான கட்டணம், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மொபைல் வழி இணைய இணைப்பு கட்டணம் இரு மடங்கு அதிகமாக உள்ளது.

இணையம் சார்ந்த இன்றைய நிலை மேலே தரப்பட்டுள்ளது. இணையம் எப்படி உருவானது, அதில் வைரஸ் எப்படி நுழைந்தது, எந்த நாளில் இது ஏற்பட்டது போன்ற குறிப்புகளைக் கீழே காணலாம்.
1. முதன் முதலில் ஓர் இணையதளமாகப் பதிவு செய்யப்பட்டது Symbolics.com என்னும் தளமாகும். 1985 மார்ச் 15 அன்று இந்த தளப் பெயர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தனக்கெனப் பதிவு செய்து கொண்ட நிறுவனம் Symbolics Computer Corporation.
2. மிகப் பெரிய அளவில் வைரஸ் பரவிய முதல் நிகழ்வு 1988 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த உலகளாவிய சர்வர்களில் 10% சர்வர்கள் இதனால், முடங்கிப் போயின. இந்த வைரஸை “The Internet Worm” என அழைத்தனர்.
3. Frederick Cohen என்ற மாணவர், வைரஸ் (“virus,”) என்ற சொல்லை முதன் முதலில், கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமிற்குப் பயன்படுத்தினார். இவர் கலிபோர்னியா பொறியியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 'தானாகவே, தன்னைப் பெருக்கிக் கொள்ளும் புரோகிராமிற்கு' இந்த சொல்லை வடிவமைத்துப் பயன்படுத்தினார். தன் வகுப்பு தோழர்கள் அறிந்து கொள்ள வைரஸ் புரோகிராம் ஒன்றைத் தயாரித்துக் காட்டினார். பின்னர் கம்ப்யூட்டர் வைரஸ் என்பதைக் கீழ்க்காணும் விளக்கத்துடன் விவரித்தார்.”கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களைக் கெடுத்து, அவற்றைப் போலவே நகலினை உண்டாக்கும் புரோகிராம்”. இவரே, இத்தகைய வைரஸ் புரோகிராம்களைத் தடுக்கும் தொழில் நுட்ப வழிகளை உருவாக்கிக் காட்டினார். பின்னர், அவரே, 1987 ஆம் ஆண்டு, அனைத்து வைரஸ்களையும் கண்டறிய ஒரு வழியினால் முடியாது என்று நிரூபித்தார்.
4. இன்டர்நெட் (“internet”) என்னும் சொல், 1882 ஆம் ஆண்டிலேயே புழங்கப்பட்டது. “ஒன்றோடொன்று இணைந்த, இணைக்கப்பட்ட செயல்பாடுகள்” என்பதனைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. பின், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1982ல், உலகளாவிய டி.சி.பி/ஐ.பி. நெட்வொர்க் இணைப்பினைக் குறிக்க இது பயன்பட்டது.
5. 1971 ஆம் ஆண்டு, பாப் தாமஸ் என்பவர் “Creeper” என்றொரு புரோகிராம் எழுதினார். அப்போது வைரஸ் என இது அழைக்கப்படாவிட்டாலும், இதுவே, முதன் முதலாக வைரஸ் புரோகிராம் ஒன்றின் செயல்பாட்டினைக் கொண்டிருந்தது. எப்படி புரோகிராம் ஒன்று கம்ப்யூட்டர்களுக்கிடையே பரவும் என்று காட்டுவதற்கு இந்த புரோகிராமினை அவர் எழுதினார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரைக் கெடுப்பது போல் எழுதப்படவில்லை. அதற்குப் பதிலாக “நான்தான் கிரீப்பர்; முடிந்தால் என்னைப் பிடித்துப் பார்” என்ற செய்தியை வெளியிட்டது. இது ARPANET இணைய இணைப்பில் ஒரு சர்வருக்கும் இன்னொரு சர்வருக்குமான இணைப்பில், காணப்பட்ட வெற்றிடத்தைக் கண்டறிந்து பரவியது. எந்த கம்ப்யூட்டரில் இது பதியப்பட்டு செயல்படுத்தப்பட்டதோ, அதிலிருந்து தாமாகவே வெளியேறிச் செல்லும் தன்மையினையும் இது கொண்டிருந்தது. இறுதியாக கிரீப்பரைக் கண்டறிய “the reaper” என்னும் புரோகிராம் எழுதப்பட்டுச் செயல்படுத்திக் காட்டப்பட்டது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X