கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2015
00:00

கேள்வி: நான் பயன்படுத்தி வரும் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டத்திற்கான சப்போர்ட் எப்போது நிறுத்தப்படும்?
என். சிக்கந்தர், போடி.
பதில்:
பொதுவாக, விண்டோஸ் சிஸ்டம் அது வெளியான நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் முதன்மையான சப்போர்ட் கிடைக்கும். அதன் பின்னர், 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் தரப்படும். முதன்மை சப்போர்ட் என்றால், மைக்ரோசாப்ட் உருவாக்கும் புதிய வசதிகள் தரப்படும். இலவச தொழில் நுட்ப உதவியும், பாதுகாப்பிற்கான இயக்கத்திற்கான மேம்படுத்தப்படும் பைல்களும் கிடைக்கும். நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் என்றால், பாதுகாப்பான இயக்கத்திற்கு பிரச்னை ஏற்படுகையில் அதற்கான பாதுகாப்பு தரும் பைல்கள் தரப்படும். அவ்வளவுதான், அதற்கு மேல் எதுவும் கிடைக்காது. விண்டோஸ் 7 சென்ற 2010 ஆம் ஆண்டு வெளியானது. எனவே, ஜனவரி 13, 2015 வரை அதற்கு முதன்மை சப்போர்ட் கிடைத்து வந்தது. நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 வரை கிடைக்கும்.
ஆனால், உங்கள் சிஸ்டத்திற்கு முதன்மை சப்போர்ட் இப்போது வேண்டும் என்றால், அதற்கு ஒரு வழி உள்ளது. சிஸ்டத்தை, இலவசமாக விண்டோஸ் 10க்கு மேம்படுத்துங்கள். ஜூலை 2016 வரை இதனை மேற்கொள்ளலாம். இதற்கான முதன்மையான சப்போர்ட் 2020 ஆம் ஆண்டு வரை கிடைக்கும். பாதுகாப்பிற்கான சப்போர்ட் 2025 ஆம் ஆண்டு வரை கிடைக்கும்.
தற்போது உள்ள நிலையில், மைக்ரோசாப்ட் ஆப்பிள் நிறுவனம் வழங்குவது போல இலவச அப்டேட்களை வழங்கும் நிலைக்குத் தன்னை மாற்றிக் கொள்ளும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதுவும் நடக்கலாம்.

கேள்வி: என் அலுவலகத்தில், திடீரென நான் பயன்படுத்தி வந்த பெர்சனல் கம்ப்யூட்டரை, என் ஷிப்ட் முடிந்த பின்னர், மற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் தரப்போவதாகக் கூறுகிறார்கள். வேண்டும் என்றால், அவரவர் பைல்களைப் பாதுகாக்க, தனித்தனி யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றனர். இதனை எப்படி ஏற்படுத்துவது? பாஸ்வேர்ட் கொடுத்து மற்றவர், இன்னொருவரின் அக்கவுண்ட்டில் நுழையாத வண்ணம் அமைக்க எண்ணுகிறேன். உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
என். பரமசிவம், திருப்பூர்.
பதில்
: நிறுவனங்களில் இது போன்ற நிலை எப்போதும் ஏற்படும். அடிப்படைக் கட்டமைப்பில் முதலீடு செய்வதனைக் குறைத்திட நிர்வாகத்தினர், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்கையில் இந்த நிகழ்வுகள் ஏற்படும். இது நல்லதுதானே. இதற்கான வழி முறைகளை உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தலாம். அப்படி வழிமுறைகளை ஏற்படுத்திய பின்னர், ஒரு பயனாளர், எந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பயன்படுத்தலாம் என்று வரையறைகளை ஏற்படுத்தலாம். அதற்கான வழிகளைக் கீழே தருகிறேன்.
1. முதலில் ஸ்டார்ட் மெனுவிலிருந்து Control Panel ஐத் திறக்கவும்.
2. இங்கு, User Accounts என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்தால், Give other users access to this computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இல்லை எனில், Manage another account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே அந்த நெட்வொர்க்கில், அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட்கள் காட்டப்படும். இங்கு Add என்பதில் கிளிக் செய்திடவும். உடன் யூசர் நேம் (User Name) ஒன்று தரும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அத்துடன் டொமைன் பெயரும் தர வேண்டியதிருக்கும். அத்துடன், புதிய யூசருக்கு Standard account அல்லது Administrator account ஆகியவற்றில் எந்த அக்கவுண்ட் உரிமை தர இருக்கிறீர்கள் என்பதனைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அடுத்து Finish என்பதனை அழுத்தவும்.
4. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் தனியாக வைத்துப் பயன்படுத்தக் கூடியதான இயக்கத்தில் இருந்தால், யூசர் நேம் மட்டும் தர வேண்டியதிருக்கும். உடன் எத்தகைய தன்மை உடைய அக்கவுண்ட் என்பதனையும் குறிப்பிட வேண்டும். அதன் பின்னர், Create Account என்பதில் அழுத்தவும்.
5. யூசர் அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் தேவை இல்லை எனில், மைக்ரோசாப்ட், நீங்கள் அதனை உருவாக்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது. குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து, கண்ட்ரோல் பேனலைத் திறந்து, User Accounts தேர்ந்தெடுத்து அடுத்து Create a password, என்பதில் கிளிக் செய்து, உங்கள் அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்டை அமைக்கலாம். பாஸ்வேர்டை இரண்டாவது முறையும் டைப் செய்து உறுதி செய்திட வேண்டும். தேவைப்பட்டால், பாஸ்வேர்டினை நினைவு படுத்திப் password hint) பார்க்க ஏதேனும் தகவல்களையும் அமைக்கலாம். நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டிருந்தால், அட்மினிஸ்ட்ரேட்டர் மட்டுமே பாஸ்வேர்டை அமைக்க முடியும்.
6. இதற்கு, Control Panel திறந்து User Accounts தேர்ந்தெடுத்து, Manage another account, தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு, நீங்கள் எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Create a password என்பதில் அழுத்தவும். பின்னர், பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின்னர் மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் வகையில், டைப் செய்திடவும். பின்னர் Create password என்பதில் அழுத்தி வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு என் பெர்சனல் கம்ப்யூட்டரை மாற்றிவிட்டேன். இதில், விண்டோஸ் 7ல் எளிதாகக் கிடைத்த கண்ட்ரோல் பேனல், கிடைக்கவில்லை. எந்த இடத்தில் இருந்து பெற வேண்டும் என்பதுவும் தெரியவில்லை. இதற்கான டிப்ஸ் பதிலாகத் தரவும்.
ஆர். லஷ்மணன், கோவை.
பதில்:
விண்டோஸ் 10 தேடல் கட்டத்தில் “control panel” என டைப் செய்தாலே போதும். உடனே கிடைக்கும் விடைகளில், முதலாவது விடையில் கிளிக் செய்தால், கண்ட்ரோல் பேனல் திறக்கப்படும். நீங்கள் முழுமையாக விண்டோஸ் 10 பயன்பாட்டினைக் கொண்டிருந்தால், கார்டனா நம் நாட்டில் செயல்பாட்டிற்கு வரும்போது, “Hey, Cortana, open Control Panel,” என்று சொன்னால், கார்டனா உங்களுக்காக, கண்ட்ரோல் பேனலைத் திறந்து கொடுக்கும். அல்லது கண்ட்ரோல் பேனல் மூலமாக என்ன மாற்றம் செய்திட விரும்புகிறீர்களோ, அதனையே டெக்ஸ்ட்டாக டைப் செய்தால் போதும். எடுத்துக் காட்டாக தேதியும் நேரமும் மாற்ற வேண்டும் என முயற்சித்தால், “Change date and time” என்று தேடல் கட்டத்தில் டைப் செய்தால், விண்டோஸ் 10, அதற்கான செட்டிங்ஸ் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் 10 வேலையை எவ்வளவு எளிதாக மாற்றிவிட்டது பார்த்தீர்களா!

கேள்வி: விண்டோஸ் ஸ்டோரில் நம் தேவைகளுக்கான அனைத்து அப்ளிகேஷன்களும், டூல்களும், ஆட் ஆன் புரோகிராம்களும் இருப்பதாகப் படித்தேன். இது உண்மையா? அப்படி எத்தனை புரோகிராம் மற்றும் பிற வகை டூல்கள் கிடைக்கின்றன?
என். கோபால்தாஸ், சிவகங்கை.
பதில்
: ஒவ்வொருவருக்கும் தேவையான புரோகிராம்களுடன் ஒப்பிடுகையில், விண்டோஸ் ஸ்டோரில் இருப்பது ஒரு மலை என்று தான் சொல்ல வேண்டும். அங்கு கிடைக்கும் புரோகிராம்கள் மற்றும் டூல்களில், நாம் ஒவ்வொருவரும் மிக மிகக் குறைவான அளவே பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டர், டேப்ளட், எக்ஸ் பாக்ஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் போன்கள் என புரோகிராம்கள் லட்சக் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்த வகையில், அங்கு இருக்கும் புரோகிராம்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 69 ஆயிரம் ஆகும். இவை, போன், டேப்ளட் பி.சி. மற்றும் கம்ப்யூட்டர்களுக்கானவை. ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டோரில் 15 லட்சம் அப்ளிகேஷன்களையும், கூகுள் தன் ஸ்டோரில் 16 லட்சம் புரோகிராம்களையும் கொண்டுள்ளது. எப்படியாவது அந்த அளவிற்கு தங்கள் ஸ்டோரில் உள்ள புரோகிராம்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என மைக்ரோசாப்ட் திட்டமிட்டு வருகிறது.

கேள்வி: ஜிமெயில் அஞ்சல் வசதியையே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். இதில் மெசேஜ் டைப் செய்திட நமக்கு ஏன் மிகச் சிறிய கட்டம் தரப்படுகிறது. சற்றுப் பெரிய வரிகள் அதிகமான எண்ணிக்கையில் இடம் பெறும்போது, இந்த கட்டம் சிக்கலைத் தருகிறது. நம்மால், முழுமையாகப் படிக்க, திருத்த முடியவில்லை. இதனைச் சற்றுப் பெரியதாக்க, ஜிமெயில் செட்டிங்ஸ் பிரிவில் எந்த இடத்தில் வழி உள்ளது என்று டிப்ஸ் தரவும். எப்போதும் நான் விரும்பும் வகையில் கிடைக்கும் வகையில் அமைக்க முடியுமா?
என். மதுசூதனன், திருச்சி.
பதில்:
சற்றுப் பெரியதாகவே இந்த கம்போஸ் விண்டோவினை ஜிமெயில் தளத்தில் அமைக்கலாம். முதலில் கம்போஸ் பட்டனைக் கிளிக் செய்தால், கிடைக்கும் கட்டத்தினைக் கவனியுங்கள். விண்டோஸ் சிஸ்டத்தில் வழக்கமாக நமக்குத் தரப்படும் விண்டோ போன்றதுதான் இதுவும். மினிமைஸ் செய்திடலாம்; பெரியதாக்கிச் செயல்படலாம். இந்த விண்டோவிலும் உள்ள மூன்று கட்டங்களைக் கவனியுங்கள். அவை Minimize, Full-screen, and Close ஆகியவற்றையே குறிக்கின்றன. நடுவில் உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், முழு விண்டோ கிடைக்கும். இது முழு விண்டோ அல்ல; சற்றுப் பெரிய விண்டோ. பின்புலத்தை இருட்டாக்கி, இதுவே ஸ்கிரீன் முழுமையும் இருப்பதாகக் காட்டும். சரி, இதனையே மாறா நிலை விண்டோ அளவாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்திற்கு வருவோம். Compose கிளிக் செய்த பின்னர், கம்போஸ் விண்டோவில் கீழே வலது மூலையில் சிறிய அம்புக் குறி அடையாளத்தைக் காணலாம். அந்த அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Default to full-screen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி நீங்கள் கம்போஸ் கிளிக் செய்திடுகையில், இதே பெரிய விண்டோ கிடைக்கும். மீண்டும் சிறிய விண்டோ வேண்டும் என்றால், மேலே சொல்லப்பட்ட வழிகளில் சென்று, மாற்றவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரை மூன்று பேர் பயன்படுத்தி வருகிறோம். சில வேளைகளில் வேர்ட் புரோகிராமில், மினி டூல் பார் கிடைக்கவில்லை. இதனை உடனடியாகத் திரும்பக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும்? பலர் பயன்படுத்துவதால் இந்த பிரச்னையா?
என். பார்த்திபன், விருதுநகர்.
பதில்
: பலர் பயன்படுத்துவதால், இந்த பிரச்னை ஏற்படுவதில்லை. அந்த பலரில், ஒருவர், இதனை மறைத்திருப்பார். பின்னர், அப்படியே விட்டுச் சென்றிருப்பார். இதனை எளிதாக, மீண்டும் கொண்டு வரலாம். கீழே தரப்பட்டுள்ளபடி செயல்படவும்.
நீங்கள் கீழே கண்டுள்ள செட்டிங்ஸ் மேற்கொண்டு, அதன் இயக்கத்தினை மீண்டும் கொண்டு வரலாம்.
1. முதலில் Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. பின்னர் Word Options கிளிக் செய்து பெறவும்.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
உடன் இன்னொரு தகவலும் தருகிறேன். பலர் ஆபீஸ் 2010 தொகுப்பினை இப்போது பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கான செட்டிங்ஸ் அமைப்பு இது.
1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், Mini Tool Bar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X