வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 நவ
2010
00:00

வேர்ட் டேபிள் – சில டிப்ஸ்:
வேர்ட் தொகுப்பில் தரப்பட்டுள்ள டேபிள் வசதி, பல வழிகளில் நமக்கு உதவிடும் ஒரு வசதி ஆகும். ஆனால், இதனைப் பயன்படுத்துபவர்களில் பலர், இதன் வசதிகள் சிலவற்றில் சிரமங்களைச் சந்தித்து,   அவற்றை வேண்டாம் என நீக்கிவிடும் அளவிற்குச் செல்வார்கள். சில வழிகளைப் பின்பற்றினால், வேர்ட் டேபிள் தரும் அனைத்து வசதிகளையும் முழுமையாக அனுபவிக்கலாம்.
1. டேபிளைப் பிரிக்க: டேபிள் ஒன்றை உருவாக்கிய பின்னர், அதனை இரண்டாகப் பிரித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்கள். எப்படிப் பிரிப்பது என்று யோசிக்கிறீர்களா? எந்த படுக்கை வரிசை யிலிருந்து புதிய டேபிள் தொடங்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரைக் கொண்டு சென்று, கிளிக் செய்திடவும். அடுத்து, டேபிள் மெனு சென்று, Split Table  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 / வேர்ட் 2010 தொகுப்புகளில், Layout (context) டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. தலைப்பைக் காட்ட: டேபிள் ஒன்று ஒரு பக்கத்திற்கு மேல், அல்லது பல பக்கங்களில் இடம் பெறுகையில், டேபிளின் முதல் படுக்கை வரிசையில் உள்ள, தலைப்புகள் மற்ற பக்கங்களிலும் இடம் பெற வேண்டும் என நீங்கள் விரும்பலாம். இதனை மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது: எந்த படுக்கை வரிசையில் உள்ளவை தலைப்புகளாக, ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெற வேண்டுமோ, அந்த வரிசையில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். பின்னர், டேபிள் மெனு சென்று, கீழ்விரியும் பட்டியலில் Heading Rows Repeat  என்பதைத் தேர்ந்தெடுத்து மூடவும்.  வேர்ட் 2007/ வேர்ட் 2010 தொகுப்புகளில், Layout (context) tab  தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர் டேட்டா குரூப்பில், Repeat Header Rows  என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அநாதையாக ஒரு பகுதி: சில வேளைகளில், டேபிளின் ஒரு வரிசை மட்டும் அடுத்த பக்கத்திற்குச் சென்று அநாதையாக நிற்கும். இது போன்று நிகழ்வதைத் தடுக்க, ஒரு செட்டிங்ஸ் ஏற்படுத்தலாம். டேபிள் மெனு சென்று, டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள   Row  என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Allow Row To Break Across Page    என்று உள்ள இடத்தில் காட்டப்படும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4.வேகமாக எண்கள் இட:  டேபிளின்  ஒரு நெட்டு வரிசையில் உள்ளவற்றிற்கு எண்கள் இட விரும்புவோம்.  அந்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்கவும்.   Formatting டூல்பாரில்  Numbering என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது ஹோம் டேப்பில் Numbering  என்பதில் கிளிக் செய்திடவும். எண்கள் இடப்படும். ஆனால், இந்த செயல்பாடு, நீங்கள் வரிசையில் உள்ள ஐட்டங்களை, என்டர் கீ அழுத்தி அமைத்திருந்தால் தான் மேற்கொள்ளப்படும். தானாக அடுத்தடுத்து ஏற்பட்டிருந்தால், அவை அனைத்தும் ஒரே ஐட்டமாகவே கம்ப்யூட்டர்    எடுத்துக் கொள்ளும்.
டேபிளில் பார்டர்களை நீக்க:
வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு Ctrl+Alt+U)  கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும்.
இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.
டாகுமெண்ட்டில் பக்க எண் பீல்ட்:
பொதுவான பீல்டுகளை நம் டாகுமெண்ட்டில், நம் வசதிக்கென,  ஆங்காங்கே அமைத்திட வேர்ட்  தொகுப்பு வசதிகளைத் தந்துள்ளது. உங்கள் டாகுமெண்ட்டில், பக்க எண்ணை, ஆங்காங்கே அமைத்திட விரும்பினால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதன் மூலம் அமைக்கப்படும் பேஜ் பீல்ட், தானாகவே அது அமைந்துள்ள பக்க எண்ணைக் காட்டும். எடுத்துக் காட்டாக, பேஜ் பீல்ட் பக்கம் 4ல் அமைக்கப்பட்டிருந்தால், பீல்டில் 4 எனக் காட்டப் படும். பேஜ் பீல்டு அமைக்கப்பட்ட பக்கங்கள் பின்னர் மாற்றப்பட்டால், அவையும் அதற்கேற்ற வகையில் அப்டேட் ஆகும். இதனை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
எங்கு பீல்டு அமைக்கப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு செல்லவும். பின்னர், Shift+Alt+P   ஆகிய கீகளை அழுத்தவும். இனி, இந்த பீல்டு தானாகவே பக்க எண் காட்டும்; அவ்வப்போது ஏற்படுத்தப்படும் மாற்றங்களுக்கேற்ப அப்டேட் ஆகும்.
டாகுமெண்ட்டில் கிரிட் லைன்:
சிலவகை எழுத்துக்கள், படங்கள் அமைக்க, கிராப் ஷீட்டினைப் பயன்படுத்துவோம். அதன் பின்னணி யில் உள்ள கிரிட் லைனால் அமைக்கப்பட்ட சிறிய கட்டங்களால் ஆன முழுப் பக்கம், இவற்றை அமைக்க உதவும். வேர்ட் டாகுமெண்ட்டிலும் இந்த கிரிட் லைன் கட்டங்களை உருவாக்கி, நமக்குத் தேவையான சார்ட், எழுத்து, படம் போன்றவற்றை அமைக்கலாம்.  ஆனால், இதில் என்ன பிரச்னை என்றால், டாகுமெண்ட்டை அச்சிடுகையில், இந்த கட்டப் பின்னணி அச்சாகாது.
வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010ல் கீழ்க்குறிப்பிட்டபடி செயல்பட்டு இந்த கிரிட் லைன் கட்டத்தினை அமைக்கலாம்.
1. Page Layout  டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. Arrange group பிரிவில், அடூடிஞ்ண ட்ராப் டவுண் லிஸ்ட் மீது கிளிக் செய்திடவும்.
3. View Gridlines என்பதில் செக் செய்திடவும். இந்த டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால், கிரிட்லைன்கள் நீக்கப்படும்.
கிரிட்லைன்களை எப்படி நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது? Align  ட்ராப் டவுண் லிஸ்ட்டில் Grid Settings  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், கிரிட் கட்டம், அதில் உள்ள ஆப்ஜெக்ட், கிரிட் லைன் அளவு என இன்னும் பலவற்றை மாற்றி அமைக்க ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் மிகவும் பயனுள்ளதாக நான் பார்த்தது Use Margins  ஆப்ஷன் தான். இது Grid Options  பிரிவில் கிடைக்கிறது. இதனை வேண்டாம் என டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டால், வேர்ட் கிரிட் கட்டத்தை மார்ஜின் வரை நீட்டிக்கும்.
வேர்ட் 2003 தொகுப்பில் எப்படி இதனை அமைப்பது எனப் பார்க்கலாம்.
1.ட்ராயிங் டூல் பாரில் (Drawing toolbar)  Draw   என்பதில் கிளிக் செய்திடவும்.  
2. அடுத்து, Grid   என்பதில் கிளிக் செய்திடவும்.
3. பின்னர், Display Gridlines   என்பதில் செக் செய்திடவும்.
முன்பே குறிப்பிட்டபடி, இந்த கட்டத்தினை அச்சில் கொள்ள வழி இருப்பதாகத் தெரியவில்லை.  
ஐகான் பட்டன்கள் எதற்காக?
வேர்டில் மெனு பாரினை ஒட்டி நிறைய பட்டன்கள் உள்ளன. இந்த பட்டன்களின் பெயர்கள் என்னவென்று தெரியவில்லை. சிறிய ஐகான்களாகத் தோற்றமளிக்கின்றன. பெயர் தெரிய வேண்டுமா? உடனே மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.
மார்ஜின் மாற்ற:
டாகுமெண்ட் அமைக்க காலி பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?  அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் File  மெனுவில்  Page Setup  செல்லவும். அங்கு Margins     டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக் கொள்ளலாம். காலியாக இருக்கும்போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவான பின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X