ஒன் டிரைவ் இடம் குறைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2015
00:00

மைக்ரோசாப்ட் இதுவரை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த இலவச “ஒன் ட்ரைவ்” இடத்தின் அளவினைக் குறைத்து அதிரடியாக அறிவிப்பு வழங்கியுள்ளது.
ஒவ்வொரு பயனாளருக்கும், 15 ஜி.பி. அளவு இடம் ஒதுக்கித் தந்தது. இதில், டாகுமெண்ட்கள், படங்கள், விடியோ பைல்கள் என எதனை வேண்டுமானாலும் தேக்கி வைத்து, தேவைப்படும்போது, எடுத்துப் பயன்படுத்த மைக்ரோசாப்ட் அனுமதித்தது. ஆபீஸ் 365
சந்தாதாரர்கள், அக்டோபர் 2014லிருந்து, எவ்வளவு வேண்டுமானாலும் இதில் இடம் எடுத்துக் கொள்ள வழி தந்தது. மாதந்தோறும் கட்டணம் செலுத்தி வந்தவர்களுக்கு, 100 மற்றும் 200 ஜி.பி. என இடம் அளித்தது. இவை அனைத்திலும் தற்போது மாற்றத்தினை,
இடக் குறைப்பினை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இலவசமாகத் தரப்படும் இடம் இனி 5 ஜி.பி. ஆக இருக்கும். கேமரா ரோல் என போட்டோக்களுக்கு இலவசமாக 15 ஜி.பி. அளிக்கப்பட்டது உடனடியாக நிறுத்தப்படுகிறது. ஆபீஸ் 365 சந்தாதாரர்கள், இனி ஒரு டெராபைட் அளவு பயன்படுத்திக் கொள்ளலாம். மாதந்தோறும் 1.99 டாலர் கட்டணம் செலுத்துபவர்களுக்கு 50 ஜி.பி. இடம் வழங்கப்படும். இந்த மாற்றம் வரும் புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து அமல் செய்யப்படும். அதற்குள் ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தி வருபவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள அளவிற்கேற்ப தங்கள் திட்டத்தினை மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும்.
தற்போது ஒன் ட்ரைவ் என அழைக்கப்படும் இந்த வசதியினை, மைக்ரோசாப்ட் தொடக்கத்தில் FolderShare என்ற பெயரில் தந்தது. பின்னர் இதன் பெயர் Live Mesh, Sync,SkyDrive, மற்றும் இறுதியாக OneDrive என அழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. தான் வழங்கிய சேவை வகையிலும், அதன் இணைய வடிவத்திலும் பல மாற்றங்களை மைக்ரோசாப்ட் கொண்டு வந்தது. இறுதியில், ஒன் ட்ரைவ் இயக்கம், நம் கம்ப்யூட்டரின் பைல் எக்ஸ்புளோரர் பிரிவில் கொண்டு வரப்பட்டது.
தன் விண்டோஸ் இயக்க பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஐ.ஓ.எஸ். சாதனங்கள் மற்றும் விண்டோஸ் போன்களிலும், இந்த வசதியை வடிவமைத்து வழங்கியது மைக்ரோசாப்ட். இதனுடன் போட்டியிட்ட ஆப்பிள் நிறுவனத்தின், ஐ க்ளவ்ட் (iCloud) வசதி, ஆப்பிள் இயக்க சாதனங்களில் மட்டுமே வழங்கப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் வசதிகளில், எந்த ஒரு அக்கவுண்ட் வைத்திருந்தாலும், (Hotmail, Live, அல்லது Outlook.com) அவர்கள், இலவசமாக, ஒன் ட்ரைவில் இடம் பெறலாம். 15 ஜி.பி. இலவச இடம் வழங்கப்பட்டது. ஏப்ரல், 2012க்கு முன் இதில் அக்கவுண்ட் வைத்திருந்தவர்களுக்கு 25 ஜி.பி. இடம் இலவசமாக வழங்கப்பட்டது. மொபைல் ஒன் ட்ரைவ் அப்ளிகேஷன் மூலம் போட்டோக்களை ஒருங்கிணைக்கும் வசதியைப் பயன்படுத்தியவர்களுக்கு மேலும் 15 ஜி.பி. இடம் தரப்பட்டது. ஆக, மொத்தம் அவர்களுக்கு 30 ஜி.பி. இடம் இலவசமாகக் கிடைத்தது. மற்ற நிறுவனங்கள் வழங்கிய க்ளவ்ட் இட சேவைகளுடன் ஒப்பிடுகையில், மைக்ரோசாப்ட் தர்ம பிரபுவாகவே இயங்கியது. ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ க்ளவ்ட்' தருவது 5 ஜி.பி. இலவச இடம்; கூகுள் ட்ரைவ் 15 ஜி.பி.; ட்ராப் பாக்ஸ் 2 ஜி.பி. கட்டணத் திட்டங்களிலும், மைக்ரோசாப்ட் தரும் திட்டங்கள், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், குறைவாகவே உள்ளன.
இவ்வாறு இருக்கையில், ஏன் மைக்ரோசாப்ட், ஒன் ட்ரைவில், தன் இலவச இடம் தரும் திட்டத்தில் அதிரடி இடக் குறைப்பினை மேற்கொண்டது? என்ற வினா எழலாம். மைக்ரோசாப்ட் நிறுவனமே இதற்கான காரணத்தினைத் தந்துள்ளது.
ஆபீஸ் 365 சந்தாதாரர்களுக்கு, ஒன் ட்ரைவினைப் பயன்படுத்த, எல்லையற்ற இடம் அளித்தது மைக்ரோசாப்ட். ஒரு சில பயனாளர்கள், இதில் பல பெர்சனல் கம்ப்யூட்டரின் பைல்களை, மொத்தமாகப் பதிந்து தேக்கி வைக்க ஆரம்பித்தனர். தாங்கள் தரவிறக்கம் செய்த பல திரைப்படங்களுக்கான பைல்களை, அப்படியே ஒன் ட்ரைவில் பதிந்தனர். தாங்கள் பதிவு செய்த நிகழ்ச்சிகள் அடங்கிய டி.வி.ஆர். (DVR) களை அப்படியே தேக்கி வைத்தனர். ஒரு சிலரின் பதிவு 75 டெரா பைட் அளவிற்குச் சென்றது. இது ஒன் ட்ரைவ் பயன்பாட்டின் சராசரியைக் காட்டிலும், 14,000 மடங்கு அதிகமாக இருந்தது.
“இது போல மிக அதிகமான இடத்தைத் தந்து இடம் அளவில் பெயர் எடுப்பதைக் காட்டிலும், க்ளவ்ட் சேவையில், தரமான, புதிய வகை சேவைகளைத் தர மைக்ரோசாப்ட் முடிவெடுத்துள்ளது” என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினைக் கேட்ட பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், முதல் நாளே, தங்கள் கோபத்தை, இணைய தளத்தில் காட்டினர். “ ஒரு சிலரின் அராஜகத்தால், மைக்ரோசாப்ட் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை அல்லவா தகர்க்கப்படுகிறது. இது நிச்சயமாக நம்பிக்கைத் துரோகம் ஆகும்” எனப் பலர் கருத்து தெரிவித்தனர். “இதே போல, மற்ற சலுகைகளையும் மைக்ரோசாப்ட் வாபஸ் பெறத் தொடங்காது என்பது என்ன நிச்சயம்? இப்போது ஆபீஸ் 365 தொகுப்பினை ஒருவர் ஐந்து கம்ப்யூட்டர்களில் பதிந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார். இது மூன்றாகவும், பின்னர் ஒன்றாகவும் குறைக்கப்படுமா?” என ஒருவர் கேட்டுள்ளார். “ஒவ்வொரு நாளும் நான் மைக்ரோசாப்ட் சேவைகளில் தான் என் மூச்சுக் காற்றை விடுகிறேன். இது போல வாடிக்கையாளர்களை கைவிட்டால், நான் எப்படி நம்பிக்கையுடன் செயலாற்றுவது?” என இன்னொருவர் வினா தொடுத்துள்ளார்.
இருந்தாலும், இதுவரை கிடைத்த இலவச அளவு குறைக்கப்பட்டதனால், கோபமுறும் தன் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது குறைக்கப்பட்ட அளவில், எந்த அளவிற்கு பைல்களை சேமித்து வைக்கலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 5 ஜி.பி. இலவச இடத்தில், 6,600 ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் அல்லது 1,600 போட்டோக்கள் (9 மெகா பிக்ஸெல் கொண்ட ஜேபெக் வடிவ பைல்கள்) சேமிக்கலாம். ஆபீஸ் 365 சந்தாதாரர்களுக்கு இலவசமாகத் தரப்படும் 1 டெரா பைட் இடத்தில், 10 லட்சம் டாகுமெண்ட்ஸ் அல்லது 3 லட்சத்து 30 ஆயிரம் படங்களைத் தேக்கி வைக்கலாம்.
புதிய இடக் குறைப்பினால், இதுவரை நீங்கள் எவ்வளவு இடத்தைப் பயன்படுத்தி வருகிறீர்கள் என அறிய விரும்பினால், https://onedrive.live.com/options/ManageStorage என்ற இணைய தளம் சென்று, உங்கள் அக்கவுண்ட்டில் எவ்வளவு இடம் நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று கண்டறிந்து, அதிகமாக இடம் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதற்கேற்ப பைல்களை நிர்வகிக்கலாம் என்று மைக்ரோசாட்ப் அறிவித்துள்ளது. இதனால், தேவையற்ற பைல்களை நீக்கலாம். அல்லது கட்டணம் செலுத்தி இடம் பெறும் திட்டத்தினை மேற்கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X