கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 நவ
2010
00:00

கேள்வி: நான் டெக்னிக்கல் டாகுமெண்ட்ஸ் அதிகம் எழுதுபவன். வழக்கமாக, வாக்கியங்களின் முதல் எழுத்துத் தானாக, கேப்பிடல் எழுத்தில் அமைவதை நிறுத்திவிடுவேன். வேர்ட் 2010 தொகுப்பில் இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும்.  –பழ. செல்லப்பன், காரைக்குடி
பதில்: முன்பு நீங்கள் எப்படி மற்ற வேர்ட் தொகுப்புகளில் இந்த தடையை உருவாக்கினீர்களோ, அதே போல இப்போதும் அமைக்கலாம்.
1. ரிப்பனில் “File” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. மைக்ரோசாப்ட் ஆபீஸ் பேக் ஸ்டேஜ் வியூ தோன்றும். இதில்  “Options”  என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். (அல்லது மேலே குறிப்பிட்ட 1 மற்றும் 2ல் உள்ள செயல்பாட்டிற்குப் பதிலாக Alt + T அழுத்திப் பின் எழுத்து கீ   O அழுத்தவும்.
3. இனி, “Word Options” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இடது புறம் உள்ள  “Proofing” என்பதில் கிளிக் செய்திடவும்.
4. வலதுபுறம் உள்ள பிரிவில்  “AutoCorrect options” என்பதன் கீழாக உள்ள  “AutoCorrect options” பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. நிறைய டேப்கள் கொண்ட “AutoCorrect” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 
6. “AutoCorrect”  என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
7. இதில்  “Capitalize first letter of sentences” என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் ஏற்கனவே உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து, அதனை நீக்கவும். பின்னர் கிடைக்கும் அனைத்து ஓகே பட்டன்களிலும்  கிளிக் செய்து வெளியேறவும். இனி, மீண்டும் வேர்ட் 2010 திறந்து இயக்குகையில், உங்கள் டெக்னிக்கல் டாகுமெண்ட் மட்டுமின்றி, வேறு எந்த டாகுமெண்ட்டிலும், வேர்ட் தானாக, வாக்கியத்தின் முதல் எழுத்தினைக் கேப்பிடல் எழுத்தாக மாற்றி அமைக்காது.

கேள்வி: என் கம்ப்யூட்டரை நான் இல்லாதபோது வேறு யாரேனும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை எப்படி அறிவது? – என். லஷ்மி பிரபா, மதுரை
பதில்: நல்ல கேள்வி. பலரின் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் சந்தேகம் நீக்கும் கேள்வி. அலுவலகங்களில், வீடுகளில் நம் பயன்பாட்டிற்கென உள்ள கம்ப்யூட்டர்களை, நாம் அங்கு இல்லாத போது, மற்றவர் பயன்படுத்தும் நிகழ்வுகள் நிச்சயம் ஏற்படலாம். இதனை எப்படி அறிவது? இதற்கு விண்டோஸ் இயக்கத்தில் வழி தரப்பட்டுள்ளது. இதனை நமக்குக் காட்டும் வசதியின் பெயர்  Event Viewer  ஆகும். எக்ஸ்பி முதல் இன்றைய விண்டோஸ் 7 வரை இது  தரப்பட்டுள்ளது. எக்ஸ்பியில் ஸ்டார்ட், ரன் அழுத்தி, eventvwr.msc   என டைப் செய்திடவும். விஸ்டாவிலும், விண்டோஸ் 7லும், சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். உடன், எப்போது எந்த நேரத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் காட்டப்படும். இதில் முதலில் தரப்படும் விஷயங்கள் நமக்குப் புரியாது. இறுதியாகப் பயன்படுத்தியவர் பெயர், கம்ப்யூட்டர் பெயர் காட்டப்படும். அதனைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி, கம்ப்யூட்டரில் நடக்கும் நிகழ்வுகளை,  Application, Security,, மற்றும்  System  என  மூன்று லாக் பைல்களில் அமைத்து வைத்துக் கொள்கிறது. விஸ்டாவில் இவை அனைத்தும் Windows Logs   என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம்  Setupமற்றும் Forwarded Events  எனவும்     இவற்றைக் கொள்கிறது.    உங்களுடைய நோக்கத்திற்கு System log  என்பதுதான் தேவை. இடது புறம்  உள்ள System  என்பதில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பட்டியல் கிடைக்கும். இங்கு நீங்கள் கம்ப்யூட்டரை விட்டு நகன்ற தேதி, நேரம் அடிப்படையில் உள்ள நிகழ்வுகளைக் கண்டு, யார் பயன்படுத்தி இருப்பார்கள் எனப் பார்க்கலாம். அத்துடன் யார் அதிக நேரம் பயன்படுத்தினார்கள் என்றும் கவனிக்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். வெப்சைட்டுக்கான பெயர் டைப் செய்கையில், ஒவ்வொரு எழுத்திற்கும், ஒரு குரூப் வெப்சைட் பெயர் கிடைக்கும். இப்போது முழுவதும் டைப் செய்த பின்னரே, தளம் கிடைக்கிறது. இதற்கென்ன காரணம்? மீண்டும் எப்படி பழைய முறையில் இணைய தளப் பெயர்களைப் பெறலாம்?  –டி. காமராஜ் கார்த்தி, சிவகாசி
பதில்: உங்கள் பிரவுசரில் ஆட்டோ கம்ப்ளீட் (Auto Complete)  என்ற வசதி எப்படியோ நிறுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இந்த வசதிதான், நீங்கள் அட்ரஸ் பாரில், இணைய தள முகவரியினை டைப் செய்கையில், எழுத்துக்களை வாங்கிக் கொண்டு தன் நினைவகத்தில் உள்ள, நீங்கள் ஏற்கனவே பார்த்த இணைய தள முகவரிகளுடன் ஒப்பிட்டு, இணையாக உள்ளவற்றைப் பட்டியலிடுகிறது.  இந்த வசதியினை மீண்டும் எப்படி ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.
மேலாக, பிரவுசரின்  வலது மூலையில் உள்ள  Tools   என்பதில் கிளிக் செய்திடவும். பின் அங்கிருந்து, Internet Options  என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில், Content   என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Auto Complete   என்னும் பிரேம் கிடைக்கும்.  இதில் Settings   என்பதில் கிளிக் செய்திடவும்.  இங்கு Use Auto complete for  என்று தலைப்பிட்டு, கீழாக இணைய முகவரி, படிவம், யூசர் பெயர் ஆகிய பிரிவுகள் இருக்கும். எந்த வகைகளில் உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதி வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறவும்.  மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து இயக்கினால், நீங்கள் இணைய தள முகவரிகளை அமைக்கையில், முன்பு அமைத்த தள முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். அதிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கும்போது, ஹோம் பேஜ் வெப்சைட்டுக்குப் பதிலாக, நான் இறுதியாகப் பார்த்த வெப்சைட் திறக்கப்பட வேண்டும். இதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்.  –சி. சம்பந்த மூர்த்தி, திண்டுக்கல்
பதில்: உங்கள் கேள்வியைப் படித்தவுடன் ஆஹா! இது ஒரு அருமையான ஏற்பாடே என்று வியக்கத் தோன்றியது. உங்கள் கேள்விக்கு நன்றி. பயர்பாக்ஸ் பிரவுசர் திறக்கும்போது,  மூன்று விஷயங்களைக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உங்களுடைய ஹோம் பேஜ், காலியாக இருக்கும் தளம் அல்லது இறுதியாக மூடுகையில் இருந்த தளம் கொண்ட ஒரு டேப் (அல்லது டேப்கள்). இது எப்படி என்று பார்ப்போம்.
உங்கள் பிரவுசரின் மேல் பகுதிக்குச் செல்லுங்கள். திரையின் குறுக்கே செல்லும் பட்டையில் பைல், எடிட் எனப் பல மெனுக்களுக்கான தலைப்புகள் உள்ளனவா! இதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழ் விரி பட்டியலில் Options   என்பதில் கிளிக் செய்க. இங்கு ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும். இதில் குறுக்காக, ஏழு டேப்கள் கிடைக்கும். முதலில் உள்ள   General  என்ற டேப்பில் கிளிக்கிடவும். கீழாக When Firefox starts  என்று இருக்கும் இடம் வரை செல்லவும். மேலும் கீழுமாக உள்ள அம்புக் குறிகளில் ஒன்றில் கிளிக் செய்திடவும். இதில் மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இவற்றில் Show my windows and tabs from last time என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஓகே கிளிக் செய்திடவும். அவ்வளவுதாங்க! அடுத்த முறை நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர் திறக்கையில், மூடும்போது இருந்த தளம் அல்லது தளங்களுடன் பயர்பாக்ஸ் உங்களை வரவேற்கும். மறந்துறாதீங்க! உங்க கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்க வேண்டும்.  இதைச் சொல்ல வாய்ப்பளித்தற்கு நன்றி.

கேள்வி: சீனாவில் மொபைல் போன்களில் ஒரு வைரஸ் பரவி, இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது எனக் கேள்விப் பட்டேன். இது இந்தியாவிற்கும் வருமா?  –இராச. இளங்கோவன், கோவை
பதில்:  ஏறத்தாழ பத்து லட்சம் மொபைல் போன்களுக்கு மேல் ஒருவித வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஷாங்காய் டெய்லி என்னும் சீன நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதே போன்ற ஒரு மால்வேர் வைரஸ் ரஷ்யாவில் மொபைல் போன்களைத் தாக்கியது. ஏறத்தாழ அதே போன்ற தாக்குதலை, இந்த வைரஸ் சீனாவில் ஏற்படுத்தியுள்ளது.  போனில் போலியான ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கான லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தவுடன், வைரஸ் போனில் செயல்பட்டு, சிம் குறித்த தனிநபர் தகவல்களை, ஹேக்கர்களின் சர்வருக்கு அனுப்புகிறது. இந்த தகவல்கள் கிடைத்தவுடன், அதில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு, பணம் பறிக்கும் வகையிலான எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடி யுவான் சீனப் பணம் ஹேக்கர்களின் வெப்சைட்டுக்குச் செல்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. சீன அரசு இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய படாத பாடு பட்டுக் கொண்டி ருக்கிறது. ஆனால் அனைத்து முயற்சி களையும் இந்த வைரஸ் ஏமாற்றிக் கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டுள்ளது.  அடுத்த படியாக அதிகம் மொபைல் பயன்படுத்தும் நம் நாட்டிற்கும் இது வரலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X