கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2015
00:00

கேள்வி: ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துகிறேன். இதற்கான அப்ளிகேஷன்களை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இறக்கிக் கொண்டு வருகிறேன். மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச அப்ளிகேஷன்கள் எவை என்று கூற முடியுமா? அதன் மூலம், பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை இறக்கிப் பயன்படுத்த விரும்புகிறேன். உதவவும்.
என். புருஷோத்தமன், கிருஷ்ணகிரி.
பதில்:
ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் பயன்படுத்த, பல செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் சென்றால், நம் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பிற்கேற்ப இவற்றைக் காணலாம். இவற்றில், உங்கள் கேள்விக்கு பதில் தருவதற்காக, பெரும்பாலானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் செயலிகள் குறித்து, தகவல்கள் தேடியபோது பல புதிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை இங்கு தருகிறேன்.
முதலாவதாக இடம் பெற்றிருப்பது பேஸ்புக் மெசஞ்சர். அடுத்த இடத்தில் இருப்பது பேஸ்புக். இசைப் பாடல்களை கேட்க வழி தரும் பண்டோரா ரேடியோ (Pandora Radio) என்னும் செயலி அடுத்த இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் Google photosm என்ற செயலியும், ஐந்தாவது இடத்தில் Snapchat messenger செயலியும் உள்ளன. ஸ்நாப்ஷாட் மெசேஜ்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலம் மட்டுமே காட்டப்பட்டு, பின் மறைந்துவிடுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. போட்டோக்களைப் பகிர்ந்து கொள்ள பயன்படும் Instagram என்னும் செயலி அடுத்த ஆறாவது இடத்தில் உள்ளது. பிரபலமான இலவச விளையாட்டு Sky Safari ஏழாவது இடத்தில் உள்ளது. எட்டாவது இடத்தில் உள்ளது ஒரு ப்ளாஷ் லைட் ஆகப் பயன்படும் செயலி. கட்டணம் செலுத்தி பெறும் செயலிகளில் முதல் இடம் பெறுவது, Minecraft என்னும் கேம் ஆகும். இதனைத் தரவிறக்கம் செய்திட 6.99 டாலர் செலுத்த வேண்டுமாம்.

கேள்வி: என் எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் நான் பதியும் டேட்டா மற்ற புரோகிராம்களிலும் பயன்படுத்தும் வகையில், எம்.எஸ். ஆபீஸ் அமைக்கப்பட்டுள்ளதா? மற்ற சில அப்ளிகேஷன்களில், எக்ஸெல் டேட்டா காட்டப்படுகிறதே? இது ஆபீஸ் கட்டமைப்பில் உள்ளதா? அல்லது ஏதேனும் வைரஸ் புகுந்ததனால், ஏற்படும் மாற்றமா?
என். ஷீலா சந்திரன், சென்னை.
பதில்:
பொதுவாக, எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில், ஒன்றில் அமைக்கப்படும் டேட்டா மற்ற புரோகிராம்களிலும் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் உங்கள் எக்ஸெல் ஒர்க் புக்கில் தரும் டேட்டா மற்ற அப்ளிகேஷனில் பகிர்ந்து கொள்ளப்படக் கூடாது என முடிவு செய்தால், கீழே தந்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின் கீழாக உள்ள Excel Options பட்டனில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 என்றால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், General என்று ஒரு குரூப் தரப்பட்டிருப்பதனைக் காணலாம்.
4. இங்கு Ignore Other Applications That Use Dynamic Data Exchange (DDE) என உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றினை அமைக்கவும்.
5. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், எக்ஸெல் செயலி, டி.டி.இ. (DDE Dynamic Data Exchange) தகவல்களை மற்ற அப்ளிகேஷன்களுடன் பகிர்ந்து கொள்ளாது. இந்த ஏற்பாடு, விண்டோஸ் இயக்கத்திற்குள்ளாக, மற்ற அப்ளிகேஷன்களுடன், எக்ஸெல் செயல்படும் விதத்தினை மட்டுமே மாற்றுகிறது. மற்றபடி, எக்ஸெல் தொகுப்பு செயல்பாட்டில், எந்த மாற்றமும் இருக்காது.

கேள்வி: என் ஐ பேடில், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்த எண்ணி, ஐ ட்யூன்ஸ் ஆப் ஸ்டோருக்குச் சென்றேன். ஆனால், அது கிடைக்கவில்லை. என்ன பெயரில், இது கிடைக்கிறது? பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துவது நல்லதா?
என். முருகேசன், வத்தலக்குண்டு.
பதில்:
சரியான நேரத்தில், இந்த கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஐ.ஓ.எஸ். சாதனங்களில், பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்த, ஆப்பிள் நிறுவனம் தடை விதித்திருந்தது. இரண்டு நிறுவனங்களும், தாங்கள் வகுத்துக் கொண்ட சில வரையறைகளை விட்டுக் கொடுத்துச் செல்லாததனால், இந்த நிலை வெகு நாட்களாகத் தொடர்ந்து இருந்து வந்தது. பயர்பாக்ஸ் தரும் மொஸில்லா, தன் பயனாளர்களை எண்ணி, ஆப்பிள் நிறுவனத்துடன் பின்னர் சமரசத்திற்கு வந்தது. ஆப்பிள் விதிக்கும் தர வரையறைகளை, மொஸில்லா ஏற்றுக் கொண்டுள்ளது. அண்மையில் வெளியான ஒரு தகவலின்படி, இனி, பயர்பாக்ஸ் பிரவுசரை, ஐ.ஓ.எஸ். இயங்கும் சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐ ட்யூன்ஸ் அப்ளிகேஷன் ஸ்டோரில் தேடிப் பாருங்கள். கிடைக்கும்; அல்லது விரைவில் கிடைக்கலாம்.

கேள்வி: சென்ற வாரம் என் அலுவலகத்திற்கு வந்த கம்ப்யூட்டர் பொறியாளர்கள், சில கம்ப்யூட்டர்களில் உள்ள ஹார்ட் ட்ரைவ் விரைவில் கெட்டுப் போய்விடும் என்றும், அதனை Ghosting செய்திட வேண்டும் என்று கூறினார்கள். அது எதனைக் குறிக்கிறது என்று சொல்லவில்லை. இது, ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொரு கம்ப்யூட்டரில் ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்துவதனைக் குறிக்கிறதா? ஏன் இந்தப் பெயர் சொல்லி அழைக்கின்றனர்?
ஆர். விஜயசங்கர், சென்னை.
பதில்:
ஹார்ட் ட்ரைவ் ஒன்றில் உள்ள டேட்டா அனைத்தையும், அப்படியே இன்னொரு ஹார்ட் ட்ரைவில் நகலாக எடுத்துப் பதிக்கும் முறையே Ghosting ஆகும். தொழில் நுட்ப ரீதியாக இன்னொரு பெயரும் இந்த செயல்பாட்டிற்கு உண்டு. Cloning என்றும் கூறுவார்கள். இது சற்றுப் பொதுவான பெயர். Ghosting முறையில் நகல் எடுப்பது, பெரிய நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள டேட்டாவினை நகல் எடுப்பதாகும். டேட்டாவினை மொத்தமாக நகலாகக் கொண்டு செல்வது இந்த முறையில் பின்பற்றப்படும்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், நாம் சேவ் செய்யாத போதும், அல்லது மறந்த போதும், டாகுமெண்ட் தானாக சேவ் செய்யப்படுமா? இது மாறா நிலையில் உள்ளதா? அல்லது நாம் வேர்ட் புரோகிராமில் செட் செய்திட வேண்டுமா? அனைத்திற்கும் உதவும் வகையில் விளக்கம் தரவும்.
என்.காசிநாதன், செங்கல்பட்டு.
பதில்:
நாம் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், கண்ட்ரோல் + எஸ் அழுத்தி, பைலுக்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம். ஆனால், இதனை மறக்கும் நிலையில், வேர்ட் தானாக, டாகுமெண்ட்டினை சேவ் செய்து வைத்திருக்குமா? என்பது உங்கள் கேள்வி. அவ்வாறு வைத்திட நாம் என்ன செய்திட வேண்டும்? இதற்கான வழிகளை இங்கு தருகிறேன்.
வேர்ட் புரோகிராம் தானாகவே நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களை சேவ் செய்திடும். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பினை நாம் முதலில் அமைத்துக் கொள்ல வேண்டும்.
1. முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். இது ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கீழாக Word Options பட்டன் கிடைப்பதைப் பார்க்கலாம். இதனை அழுத்தவும்.
2. தொடர்ந்து, டயலாக் பாக்ஸ் இடதுபுறம் உள்ள Save என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய விண்டோவில், Save AutoRecover Info Every என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். இதன் அருகே கொடுக்கப்பட்டுள்ள சிறிய பாக்ஸில், நிமிடங்கள் என்பதன் அருகே 10 என மாறா நிலையில் இருக்கும். அதாவது, வேர்ட் தானாக, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சேவ் செய்திடும் என்று பொருள். ஆனால், இதில் நீங்கள் விரும்பும் கால இடைவெளியை (ஒரு நிமிடம் கூட அமைக்கலாம்). அமைத்திடவும். 1 முதல் 120 நிமிடம் வரை அமைக்கலாம். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி, வேர்ட், நீங்கள் செட் செய்த கால இடைவெளியில், டாகுமெண்ட்டை சேவ் செய்து கொள்ளும். இதனால், மின்சக்தி கம்ப்யூட்டருக்குத் தடை பட்டாலும், நாம் செட் செய்த கால அளவில் டாகுமெண்ட் சேவ் செய்யப்பட்டு கிடைக்கும்.
ஆனால், இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கும் குறைவான கால நேரத்தில் இதனை அமைத்தால், டாகுமெண்ட் அடிக்கடி சேவ் செய்யப்படுவது, கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாமதப்படுத்தலாம். இன்னொன்றையும் கவனத்தில் கொள்வது நல்லது. ஆட்டோ சேவ் செய்திடுகையில், உங்கள் பைல் சேவ் செய்யப்படுவதில்லை. பைல் கிராஷ் ஆகி, அடுத்த முறை அதனை ரெகவர் செய்திட முயற்சிக்கையில், வேர்ட் புரோகிராமிற்குத் தேவையான தகவல்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன.

கேள்வி: நீங்கள் எக்ஸெல் ஒர்க்புக்கிற்காக தந்த டிப்ஸ் வழியில், குறிப்பிட்ட பகுதியை மட்டும் அச்சடிக்க, பிரிண்ட் ஏரியா என அதனை மார்க் செய்து வைத்தேன். இன்னும் அந்த குறியீடு உள்ளது. இதனை எப்படி நீக்குவது?
எஸ். நிரஞ்சனா, திருப்பூர்.
பதில்
: நல்ல கேள்வி. நான் டிப்ஸ் தரும்போது, அதனை நீக்குவது குறித்து குறிப்பிடவில்லை. நீங்களாக அறிந்து கொள்வீர்கள் என்று எண்ணி விட்டுவிட்டேன். இதோ அதற்கான வழிகளைத் தருகிறேன். இது பிரிண்ட் ஏரியா எனக் குறிப்பிட்டதை நீக்கத்தான். அதில் அளவிடப்பட்ட வரிசைகளை நீக்க அல்ல.
1. பைல் மெனுவில் இருந்து Print Area என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் ஒரு துணை மெனு ஒன்றைத் தரும்.
2. இதில் Clear Print Area என்பதில் கிளிக் செய்திடவும். குறியீடு மறைந்துவிடும்.
என்ன அவ்வளவுதானா? என நீங்கள் மீண்டும் கேட்கலாம். இதோ, இன்னும் சில குறிப்புகளைத் தருகிறேன்.
1. Insert மெனுவிலிருந்து Name என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஒரு துணை மெனு தரப்படும்.
2. இதில் Define என்று தரப்பட்டுள்ளதைட் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் Define Name என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் தரப்பட்டுள்ள பெயர்களில் Print_Area என்று தரப்பட்டிருப்பதைக் காணவும். இதுதான், நீங்கள் பிரிண்ட் ஏரியா என குறிப்பிட்ட இடம் குறித்த குறிப்பாகும். நீங்கள், குறிப்பிட்ட ஒர்க் புக்கில், பிரிண்ட் ஏரியா என எதனையும் குறிப்பிடவில்லை என்றால், இந்த பெயர் காட்டப்பட மாட்டாது.
3. இங்கு Print_Area குறியீட்டினைத் தேர்ந்தெடுத்து, அடுத்து Delete என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, நீங்கள் அமைத்த பிரிண்ட் ஏரியா குறியீடு நீக்கப்படும். அடுத்து Close அழுத்தி வெளியேறவும்.

கேள்வி: என்னிடம் உள்ள ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி.யில், இன்டர்நெட் இணைப்பதற்கான ஐகான் இல்லை. அல்லது, “வை பி” என எதுவும் இல்லை. எப்படி இன்டர்நெட் இணைப்பது? தயவு செய்து அதற்கான வழிகளைக் கூறவும். என்னிடம் பி.எஸ்.என்.எல். இணைப்பு உள்ளது.
என். அருமைநாயகம், சீர்காழி.
பதில்:
“Connect to Internet” என ஐகான் எதுவும் ஹோம் ஸ்கிரீனில் இருக்காது. டேப்ளட் பி.சி.யில், “Settings” திறக்க வேண்டும். அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும். உங்களுடைய டேப்ளட் மாடல், நிறுவனத்தைப் பொறுத்து இது வேறுபடும். அடுத்து, உங்கள் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும். டேப்ளட் பி.சி.யில், airplane mode ஆப் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், இது இயக்கப்பட்டிருந்தால், வயர்லெஸ் இணைய இணைப்பினைத் தடுத்துவிடும். இனி, வை பி அல்லது நெட்வொர்க் கனெக்ஷன் பகுதியில், உங்கள் டேப்ளட் பி.சி. உணர்ந்தறியும் அனைத்து வை பி இணைப்புகளின் பெயர்களும் காட்டப்படும். உங்கள் இணைப்பின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இருக்கும். அதில் தட்டி, இயக்கினால், உடன் பாஸ்வேர்ட் கேட்கப்படும். சரியாக பாஸ்வேர்டைக் கொடுத்தால், இணைப்பு கிடைக்கும். அடுத்த முறை, உங்கள் இணைய இணைப்பினை நீங்கள் இயக்கி இருந்தால், டேப்ளட் பி.சி. தானாகவே உணர்ந்து, அதில் இணைந்து கொள்ளும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X