கேள்வி பதில்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2015
00:00

கேள்வி: நீங்கள் கம்ப்யூட்டர் மலரில் டிப்ஸ் தந்ததன் அடிப்படையில், என் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நான் பதிந்த தகவல்கள், போட்டோ மற்றும் விடியோக்களை, ஒரு ஆர்க்கிவ் அமைத்துப் பெற முடிவு செய்துள்ளேன். எனக்கு இவை திரும்ப பார்த்திட வேண்டு மென்றால், இவற்றை எப்படி இயக்கிக் காண்பது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. பலவித தகவல்கள் மற்றும் பதிவுகள் இருக்கையில், இவை எந்த வடிவில் கிடைக்கும்? எப்படி இவற்றை மீண்டும் பார்க்கலாம். சரியான வழியினை எனக்குக் காட்டவும்.
ஆ. நித்திஷ் குமார், மதுரை.
பதில்
: நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள தகவல்களை, போட்டோக்களை, விடியோக்களை மற்றும் செய்திகளை மொத்தமான ஒரு திரட்டாக, பேஸ்புக் துணையுடன் மேற்கொண்ட போது, அது உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்து வைக்கப்பட்டிருக்கும். பேஸ்புக்கில் மட்டுமே ஸ்டோர் செய்யப்பட்டுள்ள உங்களின் தகவல்கள் மற்றும் சார்ந்தவை அனைத்துக்கும் உங்களிடமும் ஒரு நகல் இருப்பது நல்லதுதானே. உங்களுடைய பேஸ்புக் தகவல்கள் அனைத்தும் ஒரு சுருக்கப்பட்ட ஸிப் (zip) பைலாக, உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும். இதனை, நீங்கள் விருப்பப்படும் டைரக்டரிக்கு இடம் மாற்றிக் கொள்ளலாம். பின்னர், இந்த ஸிப் பைலை வழக்கம் போல விரித்து, அதில் உள்ள பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். விடியோக்கள் அனைத்தும் எம்.பி.4 வடிவில் இருக்கும். வி.எல்.சி. மீடியா பிளேயர் அல்லது அதைப் போன்ற ஒரு செயலியைப் பயன்படுத்தி, அவற்றை இயக்கிப் பார்க்கலாம். படங்கள் அனைத்தும் ஜேபெக் (.jpg) வடிவில் இருக்கும். இமேஜஸ் பார்க்க நீங்கள் பயன்படுத்தும்
செயலியைப் பயன்படுத்தி இவற்றைக் காணலாம். நிலைத் தகவல்கள், நிகழ்வுகள் மற்றும்
செய்திகள் (Statuses, events and messages), எச்.டி.எம்.எல். பார்மட்டில் இருக்கும். ஏதேனும் நீங்கள் விரும்பும் பிரவுசரைப் பயன்படுத்தி இவற்றைப் பார்க்கலாம். நம் தகவல்கள் கொண்ட பைல்களை பேக் அப் எடுத்து வைப்பது
நல்ல ஒரு முயற்சியாகும். அதுவும், பேஸ்புக் தளமே இப்படி ஒரு வசதியை இலவசமாகத் தருவதால், அதனை நாம் அவசியம் பயன்படுத்தலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், புதிய சில டேட்டாவினை அமைக்க முயற்சிக்கையில், நெட்டு வரிசைகள் (Column) மற்றும் படுக்கை வரிசைகளை (Row) இடைச் செருகலாக இணைக்கிறேன். அவ்வாறு இணைத்த இடங்களில், சிறியதாக பிரஷ் போன்ற ஐகான் காட்டப்படுகிறது. இதில் கர்சர் அருகே செல்கையில், புதிய மெனு ஒன்று செயல்படுத்தக் கிடைக்கிறது. இவ்வாறு காட்டப்படுவதனை நிறுத்த முடியுமா? எனக்கு இது தேவையில்லை. டிப்ஸ் தரவும்.
ஆர். சந்தியா பிரகாஷ், மதுரை.
பதில்:
சின்ன விஷயம் தான். இருப்பினும், வேக, வேகமாக ஒர்க் ஷீட்டில் பணியாற்றுகையில், நமக்கு இது எரிச்சலைத் தருகிறது, இல்லையா! இதனைத் தோன்றாமல் இருக்கச் செய்திடலாம். இதனை Insert Options button என அழைக்கிறோம். இது உங்களுக்கு எப்போதும் தேவை இல்லை எனக் கருதினால், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. முதலில் Excel Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கம், Advanced என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கின்ற பல்வேறு ஆப்ஷன்ஸ் கொண்ட பட்டியலில் Cut, Copy, and Paste என்று இருப்பது வரை ஸ்குரோல் செய்து செல்லவும்.
4. அங்கு Show Insert Options Buttons என்று இருப்பதில், செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை நீக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் குறிப்பிட்ட பிரஷ் அடையாள ஐகான் கிடைக்காது.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் விஸ்டா இயங்குகிறது. ஹார்ட் டிஸ்க் 500 ஜி.பி. திறன் கொண்டது. இதனை டிபிராக் செய்யும்படி என் நண்பர் கூறுகிறார். அதனால் ஏதும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மேற்கொள்ளவில்லை. நீங்கள் இது குறித்த அறிவுரை கூறவும்.
என். நீலமேகம், கும்பகோணம்.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல் சிஸ்டம் முறை FAT32 வகை என்றால், டிபிராக் செய்வது அவசியம். தற்போதுள்ள NTFS வகை ஹார்ட் ட்ரைவிலும் இதனை மேற்கொள்ளலாம். ஆனால், இரண்டாவது வகையில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.
ஆங்கிலத்தில் fragments என்றால் 'துண்டுகள்' என்று பொருள். இந்த துண்டுகளை, முன்பிருந்தபடி மாற்றுவதே defrag செய்வதாகும். ஒரு பைல் பல துண்டுகளாகப் பதியப்பட்டதனைத் தேடி எடுத்து, வரிசையாக ஹார்ட் டிஸ்க்கில் பதிவதே டிபிராக் செய்திடும் பணியாகும்.
டிபிராக் செய்வதற்கு, இணையத்தில் சில புரோகிராம்கள் கிடைக்கின்றன. விண்டோஸ் சிஸ்டத்திலும் டிபிராக் செய்திட வசதி உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் பதியப்படுகையில், ஏற்கனவே உள்ள பைல்கள் எடுத்துக் கொண்டுள்ள இடம், காலியாக ஆங்காங்கே உள்ள சிறிய அளவிலான இடம் இவற்றால், பைல்கள் துண்டுகளாகப் பதியப்படும். இதனால், அந்த பைலைத் தேடிப் படிப்பது சற்று சிரமமான காரியமாகக் கம்ப்யூட்டருக்குத் தென்படலாம். குறிப்பாக நேரம் அதிகமாகும். ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழல வேண்டியதிருக்கும். டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும். இதற்காக, அடிக்கடி டிபிராக் செய்வது தேவையற்ற செயல்.

கேள்வி: திடீரென என் டெஸ்க்டாப்பில், ரீ சைக்கிள் பின் ஐகானைக் காணவில்லை. ஏதேனும் வைரஸ் இதனை நீக்கியிருக்குமா? இதனை எப்படி திரும்பப் பெறுவது? நான் அடிக்கடி, ரீசைக்கிள் பின்னில் உள்ள பைல்களை மொத்தமாக அழிப்பது உண்டு. அதனால், இதுவும் சேர்ந்து அழிந்திருக்குமா? நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். மீண்டும் பெறுவதற்கான குறிப்புகளைத் தரவும்.
என். பெஞ்சமின், கோவை.
பதில்:
நல்ல கேள்வி. இந்த 'அசம்பாவிதம்' பலருக்கு அடிக்கடி நேருவது உண்டு. எனக்குப் பல வாசகர்கள் இதே தொனியில், கடிதங்களை அனுப்பி உள்ளனர். அனைவருக்குமான பதில் இதோ:
நீங்கள் ரீசைக்கிள் பின்னில் உள்ள அனைத்து பைல்களையும் நீக்கும் முயற்சியில், அப்போது கிடைக்கும் மெனுவில், Empty Recycle Bin என்பதற்குப் பதிலாக, Delete என்பதனை அழுத்தியிருப்பீர்கள். உடனே, ஐகான் நீக்கப்பட்டிருக்கும். அல்லது, நீங்கள் ஏதேனும் தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் பயன்படுத்தி, அது, ரீ சைக்கிள் பின் ஐகானை மறைத்து வைத்திருக்கலாம். இதனை மீண்டும் பெற கண்ட்ரோல் பேனல் இடை
முகத்தினைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7, விண் 8 மற்றும் விஸ்டா சிஸ்டங்களுக்கும் இதே செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
1. டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalize என்பதில் கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் விண்டோவின் இடது பக்கத்தில், Change desktop icons என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Desktop Icon Settings என்ற பாக்ஸ் கிடைக்கும்.
3. இங்கு Recycle Bin என்ற செக்பாக்ஸில் கிளிக் செய்து பின்னர் Apply என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இதில் Recycle Bin Fill மற்றும் Recycle Bin Empty என இரண்டு இருக்கும். இரண்டையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது ரீசைக்கிள் பின் ஐகான், உங்கள் டெஸ்க்டாப் திரையில் இடம் பெற்றிருக்கும்.
விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துபவர்கள், http://go.microsoft.com/?linkid=9643543 என்ற இணைய தளத்தில், Microsoft Fix it 50210 என்பதனை டவுண்லோட் செய்து, ஒரே கிளிக்கில், காணாமல் போன ரீசைக்கிள் பின்னை வரவழைக்கலாம்.
இன்னொரு வழியும் உள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப்பில், ரைட் கிளிக் செய்து New folder என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் போல்டருக்கான Name பீல்டில், Recycle bin.{645FF040-5081-101B-9F08-00AA002 F954E} என்பதனைச் சிறிய பிழைகூட இல்லாமல் டைப் செய்து, எண்டர் தட்டவும். போல்டர் ரீசைக்கிள் ஐகானாகக் காட்சி அளிக்கும்.
விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சில மாற்றங்கள் செய்தும், காணாமல் போன ரீ சைக்கிள் பின்னைக் கொண்டு வரலாம். ஆனால், அதில் சிறிது ரிஸ்க் உண்டு என்பதால், இங்கு தரவில்லை.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், சில வேளைகளில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், நம்மை அறியாமல், ஏதேனும் ஒரு கீயை அழுத்திவிட்டால், அந்த கீக்கான எழுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் இடத்தில் பதிவாகிறது. இது பல வேளைகளில் எரிச்சலைத் தருகிறது. இந்த செயல்பாட்டினை எப்படி நீக்குவது? ஏதேனும் செட்டிங்ஸ் அமைப்பு உண்டா?
என். மல்லிகா தேவி, பழனி.
பதில்:
நல்ல கேள்வி. நாம் அறியாமல், கீ போர்டில் சில வேளைகளில் தடுமாறுகையில், நம் விருப்பத்திற்கு மாறாக செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், நமக்கு அது சிரமமாகத்தான் இருக்கும். இதனை உடனடியாக பழைய படி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் வேண்டும் என்றால், கண்ட்ரோல் + இஸட் (Ctrl+Z) மேற்கொள்ளலாம். இருப்பினும் அதனை அறியாமல் மேலும் சில கீகளைத் தட்டிவிட்டால், பல முறை, கண்ட்ரோல் + இஸட் அழுத்த வேண்டியதிருக்கும். இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படாமல் இருக்கும் படி, வேர்ட் புரோகிராமில் ஒரு சின்ன செட்டிங்ஸ் மேற்கொள்ளலாம்.
1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். பின்னர் கீழாக Word Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
கிடைக்கும் விண்டோவின் இடது பக்கம் Advanced என்பதில் கிளிக் செய்திடவும். Advanced Options for working with Word என்ற விண்டோ காட்டப்படும். இதில் முதல் தேர்வாக, Typing Replaces selected Text என்று செக்பாக்ஸுடன் ஒரு ஆப்ஷன் காட்டப்படும். இதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டு, ஓகே கிளிக் செய்து வெளியேறினால், இனி டெக்ஸ்ட் செலக்ட் செய்த பின்னர், அந்த இடத்தில் அழுத்தப்பட்ட கீக்கான எழுத்து அமையாது.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும்போது, எனக்குத் தேவையான இடங்களில், டேப்களை அமைக்கிறேன். சில வேளைகளில், நான் இலக்கு வைத்த இடத்திற்குச் சற்று முன் பின்னதாக அமைந்துவிடுகிறது. சரியான இடத்தில் டேப்பினை மீண்டும் அமைத்த பின்னர், ஏற்கனவே அமைத்ததனை எப்படி நீக்குவது. ரிப்பனில் அதற்கான டூல் இல்லையா? தயவு செய்து வழி காட்டவும்.
எஸ். அன்புமொழி, சேலம்.
பதில்:
டேப்களை அமைத்த பின்னர், அது தேவையில்லாமல் போய், புதிய இடத்தில் அந்த டேப் இருக்க வேண்டும் என்று எண்ணினால், அதன் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று, பின் மவுஸின் இடது புறத்தை அழுத்தியவாறு இழுத்து, புதிய இடத்தில் விட்டால், அது நகர்ந்து, புதிய இடத்தில் அமைந்துவிடும். ஏற்கனவே, அமைந்ததை நீக்க, இதே போல கர்சரை அதன் மீது வைத்து, இடது புறத்தை அழுத்தியவாறு, மேலே உள்ள மார்ஜின் கோட்டிற்கு மேலாக இழுத்துவிடவும். மறைந்துவிடும். இதற்கான ரிப்பனில் டூல் எல்லாம் தேட வேண்டாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X