இசை வளர்ச்சி | மஞ்சரி | Manchery | tamil weekly supplements
இசை வளர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2015
00:00

இசை ஜீவநதியா? இல்லை மாபெருங்கடல். ஏனென்றால் ஜீவநதிகூட வற்றி விடுகிறது. ஆனால் கடலில் பல அரிய பொக்கிஷங்கள் புதைந்துள்ளன. முத்து, பவளம், வலம்புரி சங்கு போன்ற பொக்கிஷங்களை நமக்கு அளிக்கின்றன. அதுபோல இசைக் கடலும் சிறந்த கலைஞர்களை உருவாக்குகிறது.
இயல், இசை, நாட்டியம், நாடகம் என்ற முத்தமிழில் இசைக்குத்தான் முதலிடம். அக்காலகட்டங்களில் தெருக்கூத்து என்று வழங்கும் நாடகம் இரவு முழுவதும் நடைபெறுமாம். முக்கிய கதாபாத்திரங்கள் ஒருவர் மாறி ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்களாம். எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், டி.ஆர். மகாலிங்கம் மற்றும் எம்.ஏ.மசீத், உடையப்ப தேவர், தமிழ்ச்செல்வி போன்றவர்களின் நாடக நிகழ்ச்சிகளில் இசைக்குத்தான் முக்கியத்துவம் நாடகங்களில் சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.
இசைக்கு ராஜா தியாகராஜா, அவர் சாகித்யங்கள் தெய்வீக மணம் பொருந்தியவை. திருவையாறு உற்சவத்தில் எல்லாக் கலைஞர்களும் சேர்ந்து இவரது பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடுவது எல்லோரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.
மும்மூர்த்திகளில் தியாகராஜர் தவிர முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் கீர்த்தனைகளும் இசைக்கு ஓர் சிகரமாகும். இவர்கள் எல்லாம் தெய்வீக அருள் பெற்றவர்கள்.
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், முத்துத்தாண்டவர், பாரதியார், பாபநாசம் சிவம், கோபாலகிருஷ்ண பாரதி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், பெ.தூரன், அருணாசலக் கவிராயர் போன்றோர்களின் பாடல்கள் மற்றும் தேவாரம், திருப்பாவை, திருவாசகப் பாடல்கள் தமிழிசையைப் பெரிதும் வளர்த்து வருகிறது என்றால் மிகையாகாது.
முன்பெல்லாம் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு, கிராமபோன் ரிகார்டுகளின் மூலம் கேட்டு மகிழ்ந்தனர். இன்றோ கிராமபோன் இருப்பிடமே தெரியவில்லை. காரணம் ரேடியோ எல்லோரையும் ஆட்கொண்டது. டி.வி. வந்ததும் இதன் மதிப்பும் ஓரளவு குறைந்தது. ஆனால் பல புதிய அலைவரிசைகளின் வரவால் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. காசட், சி.டி. வரவால் இசையின் வளர்ச்சி மேலும் வெற்றி நடைபோடுகிறது.
தற்சமயம் லாப்-டாப் மற்றும் டெஸ்க் டாப் முதலியன மாணவர்கள், அலுவலர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் எல்லோரையும் ஆக்கிரமித்துள்ளன. எப்படியோ இவைகள் இசை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகினறன என்றால் மிகையாகாது.
கதாகாலக்ஷேப விரிவுரைகளில் இசைக்கு ஒரு தனி மதிப்புதான். இதற்கு மாங்குடி சிதம்பர பாகவதர், திருவையாறு அண்ணாசாமி பாகவதர், சேங்காலிபுரம் தீட்சிதர், எம்பார் விஜயராகவாசாரியார், திருமுருக கிருபானந்த வாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள், பன்னிபாய், சிவானந்த விஜய லட்சுமி, கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள், கல்யாணபுரம் ஆராவாமுதாசாரியார், டி.என். சேஷகோபாலன், விசாகா ஹரி போன்ற பல மேதைகளின் இசைத் தொண்டை மறக்க இயலாது.

- கலா நிகேதன் பாலு

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X