விண்டோஸ் 10 இயக்க என்ன வேண்டும்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2015
00:00

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அனைவரும் ஒரு கால கட்டத்தில் மாறிக் கொள்ளத்தான் வேண்டும் என்பதனை, மைக்ரோசாப்ட் மறைமுகமாகத் தெரிவித்து வருகிறது. மற்ற சிஸ்டங்களுக்கு சப்போர்ட் கொடுப்பதை நிறுத்தும் நாட்களுக்கான அறிவிப்பு, விண்டோஸ் 10 இறக்கிப் பயன்படுத்துவோருக்கான சலுகைகள் தருதல் எனப் பல வழிகளில், தன் வாடிக்கையாளர்களை, விண்டோஸ் 10 பக்கம் இழுக்கிறது. இதனால், பலரும் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிவிடலாம் என்ற முடிவினை எடுத்துள்ளனர். ஆனாலும், இவர்கள் விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்துப் பல சந்தேகங்கள் கொண்டுள்ளனர். தினமலர் கம்ப்யூட்டர் மலர் வாசகர்களிடமிருந்து வரும் அஞ்சல்கள், கடிதங்கள், அழைப்புகள் இவற்றைத் தெரிவிக்கின்றன. இந்த கேள்விகளை வகைப்படுத்தித் தொகுத்து, இங்கு பதில்கள் தரப்படுகின்றன.

கேள்வி: விண்டோஸ் 10 அப்கிரேட் செய்வதில், Product Key மற்றும் Digital Entitlement என இரு தொழில் நுட்ப சொற்களைச் சந்திக்கின்றோம். இவை எதனைக் குறிக்கின்றன? இவற்றின் பொருள் என்ன?
பதில்:
Product Key என்பது, வழக்கமாக, விண்டோஸ் இயக்கத்தினை நாம் அப்கிரேட் அல்லது உரிமம் பெறும் வகையில் மேம்படுத்தலைக் குறிக்கிறது. நீங்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தின் புதிய உரிமம் ஒன்றை, விண்டோஸ் 10 விற்பனை செய்பவரிடம் வாங்கினால், அல்லது விண்டோஸ் 10 உரிமங்களை நிறைய எண்ணிக்கையில் நிறுவனங்கள், Volume Licensing agreement என்ற முறையில் பெற்றால் அல்லது, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய சாதனம் ஒன்றை வாங்கினால், இன்ஸ்டலேஷன் செயல்பாட்டினை மேற்கொள்கையில், சிஸ்டத்தை இயக்கும் போது, Product Key ஒன்றைத் தர வேண்டியதிருக்கும்.
Digital Entitlement என்பது, விண்டோஸ் 7,8, மற்றும் விண்டோஸ் 8.1 லிருந்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு, புதிய ப்ராடக்ட் கீ இல்லாமல் அப்கிரேட் செய்திடும் உரிமையை, மைக்ரோசாப்ட் மேலே சொல்லப்பட்ட, ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை அதிகார பூர்வமாகக் கட்டணம் செலுத்திப் பெற்றவர்களுக்குத் தந்துள்ளது. இந்த உரிமையே Digital Entitlement என்று சொல்லப்படுகிறது.
இந்த புதிய முறைச் செயலாக்கம், விண்டோஸ் 10 சிஸ்டத்தில், உங்கள் ஹார்ட்வேர் அமைப்புடன், ப்ராடக்ட் கீ இணைக்கப்படுகிறது. அதாவது, ஒருமுறை நீங்கள் விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்துவிட்டால், பின் அந்த ஹார்ட்வேர் அமைப்பில், ஒவ்வொருமுறை அப்கிரேட் செய்திடும்போதும், ப்ராடக்ட் கீ, உள்ளீடாகத் தர வேண்டியதில்லை.

கேள்வி: என்னுடைய ஹார்ட்வேர் அமைப்பினை, விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்த பின்னர், மேம்படுத்த முடியுமா?
பதில்:
நீங்கள் பெற்றுள்ள உரிமத்தைப் பொறுத்தது இது. விண்டோஸ் 7,8, மற்றும் 8.1 சிஸ்டத்திலிருந்து அப்கிரேட் செய்த எந்த பயனாளருக்கும், ஒரு விண்டோஸ் டிஜிட்டல் உரிமை (digital entitlement) நேரடியாக உங்கள் சிஸ்டம் ஹார்ட்வேருக்கு (அதாவது மதர் போர்ட்) தரப்பட்டு பதியப்படும். எனவே, பின் நாளில், நாம் ஹார்ட்வேர் அப்கிரேட் செய்திட்டால், விண்டோஸ் 10க்கு, மைக்ரோசாப்ட் பணம் கேட்கும் என்பது வதந்தியாகும். எனவே, ராம் மெமரியை மாற்றினாலோ, புதிய ஹார்ட் ட்ரைவ் இணைத்தாலோ அல்லது புதிய ஜி.பி.யு. இணைத்தாலோ, எந்த சிக்கலும் இருக்காது.

கேள்வி: நான் என்னுடைய விண்டோஸ் 7/8/8.1க்கான கீயைப் பயன்படுத்தி, விண்டோஸ் 10 முழுமையாக இன்ஸ்டால் (Clean Windows 10 Install) செய்திட முடியுமா?
பதில்:
ஆம். விண்டோஸ் 10 பதிகை 1511 முதல், (அண்மைக் காலத்திய அப்டேட்) நீங்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, விண்டோஸ் 7/8/8.1 ப்ராடக்ட் கீ கொண்டு, ஆக்டிவேட் செய்திட முடியும்.

கேள்வி: நான் புதியதாக விண்டோஸ் 10 சிஸ்டம் பதிக்கப்பட்ட கம்ப்யூட்டரை வாங்கினால், எனக்கு Digital Entitlement உரிமை உண்டா?
பதில்
: இல்லை. இல்லவே இல்லை. அதிகார பூர்வ விண்டோஸ் 7/8/8.1 (கட்டணம் செலுத்திப் பெற்ற) உரிமம் பெற்றவர்கள், இலவசமாக அப்கிரேட் செய்து பெறும் சலுகைகளும் உரிமைகளுமே Digital Entitlement என்று அழைக்கப்படுகிறது. புதியதாக விண்டோஸ் 10 உரிமம் பெறும் பயனாளர்கள், வழக்கம்போல விண்டோஸ் இயக்கத்திற்கான ப்ராடக்ட் கீயினை எப்படி இன்ஸ்டலேஷன் சமயத்தில், அந்த செயல்பாட்டின் இடையே தர வேண்டியுள்ளதோ, அப்போது உள்ளீடு செய்திடலாம்.

கேள்வி: என்னிடம் பைரசி மூலம் பெற்ற விண்டோஸ் 7 உள்ளது. பல ஆண்டுகளாக இயக்கி வந்துள்ளேன். இது தானாக, இலவசமாக, அதிகாரப் பூர்வமான விண்டோஸ் 10 இயக்கமாக மாறிவிடுமா?
பதில்:
இல்லை. உங்கள் சிஸ்டம் விண்டோஸ் 10க்கு அப்டேட் செய்யப்படும். ஆனால், உங்கள் சிஸ்டம் பைரசியாகவே கருதப்படும். சிஸ்டத்திற்கான சப்போர்ட் (அப்கிரேடிங், பாதுகாப்பு பைல்கள்) எதுவும் கிடைக்காது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X