பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2015
00:00

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது ஒரு நிறுவனம் திடீரென உருவாக்கி நமக்குத் தந்தது அல்ல. அதனைத் தொடர்ந்து செம்மைப் படுத்த, மைக்ரோசாப்ட் எந்த அளவிற்கு உழைத்துள்ளது என்பதை, தங்களின் விண்டோஸ் குறித்த கட்டுரை மிக அருமையாக விளக்கி உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு விண்டோஸ் பதிப்பு குறித்தும் அப்போதிருந்த படங்களை அந்த அந்த இடத்தில் காட்டியது மிக அருமை. நேர்த்தியாக அனைத்தையும் தர வேண்டும் என்ற உங்களின் ஆர்வமும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி. பாராட்டுகள்.
எல். டேனியல் சுகுமார், நாகர்கோவில்.

எப்படிப்பட்ட நிலைகளை எல்லாம், விண்டோஸ் சமாளித்து உருவாகி உள்ளது என்பதை அறிகையில், பில் கேட்ஸ் என்ற அந்த மாமனிதரை எண்ணி எண்ணி வியக்க வேண்டியதுள்ளது. எதனையோ கொடுத்துவிட்டு, ”இதுதான் போ” என்றில்லாமல், நம் வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளிலும் வசதிகளைத் தர பாடுபட்ட அவர் நிறுவனத்தினரும், அவரும், மனித குல சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் ஆவார்கள்.
எஸ். ஜூலியஸ் கிறிஸ்டோபர், சென்னை.

”இனிமேல் எல்லாமே இணையம்தான்” என்ற நிலை நிச்சயம் உருவாகத்தான் போகிறது. எந்த இடத்திலிருந்தும் எதனையும் இயக்கும் வகையில், இணையம் நம்மைப் பிணைக்க உள்ளது. இது குறித்து மிகச் சுருக்கமாக எழுதி உள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. பெரிய கட்டுரையாக இது குறித்து தரவும்.
கே.எம். ராமச்சந்திரன், கும்பகோணம்.

4கே திரை குறித்த அருமையான தகவல்களுக்கு நன்றி. சோனி தர இருக்கும் அந்த திறன் படைத்த காட்சியைப் பார்க்க விரும்புகிறேன். இது போன்ற தகவல்களை முந்தித் தரும் கம்ப்யூட்டர் மலர் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.
சேவியர் பிரகாஷ், மதுரை.

லூன் திட்டம் இந்தியாவில் இயக்கத்திற்கு வந்தால், இன்னும் இணைய இணைப்பிற்கான அடிப்படை தேவைகளைக் கூட அறியாத கிராம மக்களுக்கு இணையத்தின் வசதிகள் கிடைக்கும். ஆனால், நம் அரசு மெத்தனமாக இல்லாமல், தொலைதூரக் கிராம மக்களுக்கு இணையத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்லித் தயார் படுத்த வேண்டும்.
கா.தமிழ்ச் செல்வன், தஞ்சாவூர்.

நல்லது மேற்கொள்ள எந்த முயற்சி எடுத்தாலும், அதில் சில சில்மிஷங்களும் அமையும். அது போலத்தான், இணையத்தில் வதந்திகளும். நம்மில் பலர் இன்னும் உருப்படியான வேலை இல்லாமல் இருக்கிறோம் என்பதையே இந்தியா இணையம் வழி வதந்தி பரப்புவதில் முதலிடம் என்ற தகவல் காட்டுகிறது. ஆனால், இணையம் இருக்கும் வரையில், வதந்திகள் சோப்பு குமிழ்களாகத்தான் இருக்கும்.
எஸ்.ஆர். பூமிநாதன், திருச்சி.

கம்ப்யூட்டரை நாம் இயக்காத போது, ஹார்ட் டிஸ்க் இத்தனை வேலைகள் செய்கிறதா என்ற வகையில் அருமையான தகவல்களைத் தந்துள்ளீர்கள். ஹார்ட் டிஸ்க் குறித்த கட்டுரை நல்ல பாடக் கட்டுரையாகும். கம்ப்யூட்டர் எவ்வளவு திறமையான சாதனம் என்று நம்மால் உணர இந்தக் கட்டுரை உதவுகிறது.
கே.எஸ். பால்ராஜ் சேவியர், காரைக்கால்.

ஆப்பிள் வருமானம் உயர்வதில் ஆச்சரியமே இல்லை. அதனுடைய லாப விகிதம் அவ்வளவு அதிகமானது. அதே போல, தனக்கென ஒரு வழியைக் கொண்டு, தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருப்பது அதன் அருமையான வர்த்தக தந்திரமாகும். செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில், அதன் பயனாளர்கள் வேறு ஒரு சாதனத்திற்கு மாறாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
என். புருஷோத்தமன், ஸ்மிர்னா, அட்லாண்டா.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X