கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2015
00:00

கேள்வி: நான் ஒன் ட்ரைவில் 15 ஜி.பி. அளவு இடம் தருவதனால், என்னுடைய தனிப்பட்ட மற்றும் அலுவலகப் பணிகள் சார்ந்த பல பைல்களை அதில் பதிந்து வைத்து சேமித்துள்ளேன். இந்த அளவினை 5 ஜி.பி. ஆகக் குறைத்துள்ளதாக, உங்கள் கம்ப்யூட்டர் மலரில் செய்தி வெளியிட்டுள்ளீர்கள். 5 ஜி.பி.க்கும் மேலாக பைல்கள் இடத்தைக் கொண்டிருந்தால் என்ன செய்திட வேண்டும்? கட்டணம் செலுத்த வேண்டுமா?
என். ஜெயமுருகன், கோவை.
பதில்:
இது போல பல வாசகர்கள், குறிப்பாக அலுவலக நிர்வாகத்தில் உள்ளவர்கள் கடிதங்களை அனுப்பியுள்ளனர். அனைவருக்குமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட ஒன் ட்ரைவ் குறித்த மாற்றங்களைச் சுருக்கமாகத் தருகிறேன். மைக்ரோசாப்ட் அறிவித்த மாற்றங்கள், 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குறிப்பிட்ட தேதியில் அமலுக்கு வரும். நீங்கள் இலவச 15 ஜி.பி. திட்டத்தில், 5 ஜி.பி.க்கும் அதிகமான அளவில் பைல்களை ஒன் ட்ரைவில் பதிந்து வைத்திருந்தால், அனைத்து பைல்களையும் மேலும் ஓர் ஆண்டு வரை பெறலாம். ஆனால், மேலும் கூடுதலாகப் பதிய முடியாது. இந்தக் கால கெடுவிற்குள், அளவு மீறும் பைல்களை அல்லது கூடுதலானவற்றை வேறு ஒரு பயனாளராக அதில் அக்கவுண்ட் திறந்து பதிந்து வைக்கலாம். அல்லது வேறு ஒரு மீடியாவிற்கு மாற்றிக் கொள்ளலாம். கட்டணம் செலுத்திப் பெறும் 100 மற்றும் 200 ஜி.பி. திட்டங்கள் வாபஸ் செய்யப்படுகின்றன. இதற்குப் பதிலாக, மாதந்தோறும் 1.99 டாலர் செலுத்தி, 50 ஜி.பி. இடம் பெறும் வகையிலான திட்டம், வரும் 2016 தொடக்கத்திலிருந்து அமலுக்கு வருகிறது.

கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் 8.1 சிஸ்டம் பதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள், வரும் அக்டோபர் 31, 2016க்குப் பின்னர் கிடைக்காது. உரிமங்கள் வழங்கப்பட மாட்டாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அப்படியானால், விண்டோஸ் 10 சிஸ்டமும் இதே போல், ஒரு நாள் நிறுத்தப்படுமா? என்று என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளதா?
எஸ். பிரகாஷ் மோகன், சென்னை.
பதில்:
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பல வழிகளில், வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க மைக்ரோசாப்ட் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த கேள்வி அவசியம் தானா? என்று வரை விண்டோஸ் 10 சிஸ்டத்துடன்,
நிறுவனங்கள் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திடலாம் என்று, மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு
அப்கிரேட் செய்திடும் வகையில் தான், விண்டோஸ் 10 தற்போது கிடைத்து வருகிறது. ஒன்றைக் கவனித்தீர்களா? விண்டோஸ் 8க்கான உரிமம் வழங்குவது, ஜூன் 30, 2016 அன்று நிறுத்தப்படும். விண்டோஸ் 7க்கான உரிமம் அக்டோபர் 31 வரை வழங்கப்படும்.

கேள்வி: கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருக்கும்போது, அதன் சி.பி.யு. டவரைச் சற்று நகர்த்தலாமா? என் அலுவலகத்தில், நண்பர் இவ்வாறு நகர்த்துகிறார். இது சரியல்ல என்று சொன்னால், எல்லாமே அசைக்கமுடியாதபடி, ஸ்குரூக்களால் இறுக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தங்களின் கருத்தறிய ஆவல். அதனை, அலுவலகத்தில் அனைவருக்கும் தெரிவிக்கப் போகிறேன்.
என். ஸ்ரீராமன், சென்னை.
பதில்
: என் கருத்து மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி. கம்ப்யூட்டர் இயங்கும்போது, சி.பி.யு. டவரை நகர்த்துவது தவறு, தவறு, சரியல்ல. இதற்கான காரணத்தைப் பார்ப்போமா! சி.பி.யு. டவரில் உள்ள ஹார்ட் ட்ரைவ், கம்ப்யூட்டர் இயங்கும்போது, உள்ளுக்குள்ளாகச் சுழன்று கொண்டிருக்கும். காற்று, தூசு புகாதபடி அது அமைக்கப்பட்டு, இறுக்கமான நிலையில் அமைக்கப்பட்டிருந்தாலும், நம்முடைய நகர்த்தல் அதனைப் பாதிக்கும். ஏனென்றால், உள்ளாக, சுழலும் டேட்டா டிஸ்க்குகள், நிமிடத்திற்குக் குறைந்தது 5,000 முறைக்கு மேல் சுழன்று கொண்டிருக்கும். இதன் மீது டேட்டா எழுதும் கரமானது எழுதுவதற்குக் காத்துக் கொண்டிருக்கும். ப்ராசசரின் ஆணைப்படி, அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும். எனவே, நாமாக ஏற்படுத்தும் அசைவுகள், டேட்டா எழுதும் கரத்தினை, டிஸ்க்கில் தேவையற்ற இடத்தில் மோதலை ஏற்படுத்தி, டிஸ்க்கைக் கெடுத்துவிடும். அதில் உள்ள டேட்டாவினை நாம் மீண்டும் பெற முடியாது. இது போன்ற எதிர்பாராத விளைவுகளைத் தடுக்கும் வகையில், எழுதும் கரத்தினை இயக்கும் தொழில் நுட்பம் தற்போது கிடைக்கிறது. இருப்பினும் அது 100% பாதுகாப்பினைத் தரும் என்று உறுதி கூற இயலாது. எனவே, டெக்ஸ்டாப் மட்டுமல்ல, லேப்டாப் கம்ப்யூட்டர், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினைக் கூட, அது இயங்கும்போது நகர்த்துவது நல்லதல்ல.

கேள்வி: வேர்டில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட்கள், ஒரு பக்கத்தில் எவ்வளவு இடம் பிடிக்கும் என்பதை எப்படிச் சரியாகக் கணிப்பது. குறிப்பாக, ஏ4 அளவிலான ஒரு தாளில் டாகுமெண்ட் பக்கம் எப்படி அமையும் என்பதனை, எந்த செட்டிங்ஸ் மூலம் நாம் அறிய முடியும்?
எம். ஜெயசுதா, திருப்பரங்குன்றம்.
பதில்:
அதாவது, டாகுமெண்ட் டெக்ஸ்ட் ஒரு பக்கத்தில் எடுத்துக் கொள்ளும் இடம் எவ்வளவு எனத் தெரிந்து கொண்டு, பிரிண்ட் எடுக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதுதான் உங்கள் கேள்வி எனப் புரிந்து கொண்டு, இந்த பதிலை அளிக்கிறேன். டாகுமெண்ட்டினைத் திறந்து Print Layoutல் அதனைக் காணவும். இப்போது காட்டப்படும் காட்சியில், நீங்கள் தயார் செய்த டெக்ஸ்ட்டைச் சுற்றிலும், புள்ளிகள் அமைந்த கோடு காணப்படும். இதனைப் பார்த்து பயப்பட வேண்டாம். அச்சிடுகையில் இந்த கோடு காட்டப்பட மாட்டாது. ஆனால், நீங்கள் விரும்பும் வகையில், டாகுமெண்ட் டெக்ஸ்ட் எந்த அளவில் தாளில் இடம் எடுத்துக் கொள்ளும் என்று காட்டும். இந்தக் காட்சி காட்டப்படுவதனை ஒரு செட்டிங்ஸ் மூலம் நாம் அமைக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Word Options டயலாக் பாக்ஸை முதலில் பெறவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும்.
4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது. தேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பீல்டுகளை உருவாக்கி, அவ்வப்போது அவை அப்டேட் செய்யப்படும் டிப்ஸ் நீங்கள் சில மாதங்களுக்கு முன்னர் தந்தீர்கள். அதனைப் பின்பற்றி, இப்போது என் தேவைகளுக்கென, பல பீல்டுகளை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறேன். ஆனால், சில வேளைகளில், குறிப்பிட்ட பீல்டுகள், அப்டேட் ஆகாமல் இருந்தால் நல்லது என்ற நிலை வருகிறது. குறிப்பிட்ட சில பீல்டுகளை மட்டும், ஒரு டாகுமெண்ட்டில், அப்டேட் ஆகாமல் இருக்கும்படி செய்திட முடியுமா? தயவு செய்து டிப்ஸ் வழங்கவும்.
என். பீர் முகமது, புதுச்சேரி.
பதில்:
நல்ல கேள்வி. பீல்டுகளை அமைத்து, அவற்றில் இணைக்கப்பட்டுள்ள டேட்டாவினை அப்டேட் செய்வது நல்ல செயல்பாடு. ஆனால், நீங்கள் கேட்கும்படி, சில பீல்டுகளில் அப்டேட் செய்திடாமல், அவற்றை மாற்றி அமைப்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. எனவே, கேள்விக்கு நன்றி. இந்த நோக்கத்துடன், எம்.எஸ். ஆபீஸ் உதவிப் பக்கங்களில் தேடி விடை கண்டுபிடித்தேன். கீழே அதற்கான அமைப்பினைத் தருகிறேன்.
1. எந்த பீல்ட் மேம்படுத்தப்பட வேண்டாம் என முடிவு செய்கிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட பீல்டுகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
2. பீல்டுகளை அப்டேட் செய்திட விரும்பினால், Shift+F9 கீகளை அழுத்தவும்.
3. தொடர்ந்து, Ctrl+F11 என்ற கீகளை அழுத்தினால், அந்த பீல்டுகளின் டேட்டா, மேம்படுத்தப்பட மாட்டாது.
4. ஏதேனும் ஒரு நாளில், நீங்கள் போட்டிருக்கும் இந்த தடையை நீக்கி, அவை மேம்படுத்தப்பட வேண்டும் என விரும்பினால், கீழே தந்துள்ளபடி செயல்படவும். எந்த பீல்டுகளின் தடையை நீக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து, Ctrl+Shift+F11 என்ற கீகளை அழுத்தவும்.

கேள்வி: என்னுடைய டாகுமெண்ட்களில், அன்றைய தேதியை, தானாக கம்ப்யூட்டர் அமைக்கும் வகையில் எப்படி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்? என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எம்.எஸ். ஆபீஸ் 2007 இயக்கி வருகிறேன்.
என். சுஜாதா, சேலம்.
பதில்
: நீங்கள் டாகுமெண்ட் என்று குறிப்பிட்டதனால், வேர்ட் டாகுமெண்ட் என்று எடுத்துக் கொண்டு, கீழே அதற்கான குறிப்புகளைத் தருகிறேன். அதிர்ஷ்டவசமாக, இதற்கு மிக எளிய வழி ஒன்று உள்ளது. ஒவ்வொரு முறை நீங்கள் வேர்ட் டாகுமெண்ட்டினைத் திறக்கையில், அது அன்றைய தேதியை, குறிப்பிட்ட இடத்தில் அமைத்துவிடும். முதலில், உங்கள் டாகுமெண்ட்டினைத் திறக்கவும். எங்கு அன்றைய தேதி அமைக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை நிறுத்தவும். இதன் பின், ரிப்பனில், INSERT டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர், டெக்ஸ்ட் (Text) குரூப்பில், Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Field என்பதில் கிளிக் செய்திடுக. அடுத்து Categories பகுதியில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Field names என்ற பெட்டியில் CreateDate, PrintDate, or SaveDate என்பதில் கிளிக் செய்திடவும். Date formats பாக்ஸில், நீங்கள் விரும்பும் வகையிலான தேதி பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும். இனி, அனைத்து பாக்ஸ்களையும் மூடவும். குறிப்பிட்ட இடத்தில், தேர்ந்தெடுத்த வடிவில், அன்றைய தேதியும் நேரமும் காட்டப்படும்.
உங்களுக்கு போனஸாக ஒரு டிப்ஸ் தரட்டுமா? எக்ஸெல் ஒர்க் ஷீட்டிலும் இதே போல அன்றைய தேதியை அமைக்க, எந்த செல்லில் அதனை அமைக்க வேண்டுமோ, அதில் =TODAY() என்ற பார்முலாவினை அமைக்கவும். எப்பொழுது நீங்கள் அந்த ஒர்க் ஷீட்டினைத் திறக்கிறீர்களோ, அந்த செல்லில், அன்றைய தேதி அமைக்கப்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X