சாம்சங் கேலக்ஸி ஜே 3 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
சாம்சங் கேலக்ஸி ஜே 3
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 டிச
2015
00:00

அண்மையில், சாம்சங் நிறுவனம் தான் விரைவில் வெளியிட இருக்கும், சாம்சங் கேலக்ஸி ஜே 3 ஸ்மார்ட் போன் குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் இதனை சீனாவில் வெளியிட்டுள்ளது. Galaxy J3 (SM-J3109Z) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனில், 5 அங்குல அளவிலான ஹை டெபனிஷன் Super AMOLED display திரை உள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280 x 720 பிக்ஸெல்கள்.
சென்ற, செப்டம்பரில், இந்தியாவில் அறிமுகமான, கேலக்ஸி ஜே 2 ஸ்மார்ட் போனில், 4.7 அங்குல அளவில் திரை இருந்தது. இதன் மற்ற சிறப்பம்சங்கள். 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1.5 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதன் பின்புறக் கேமரா, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி.ப்ளாஷ் கொண்டு, 8 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. முன்புற செல்பி கேமரா 5 எம்.பி.திறன் கொண்டதாக உள்ளது. இதன் பரிமாணம் 142.3 x 71x 7.9 மிமீ. எடை 138 கிராம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இதன் பேட்டரி 2,600 mAh திறன் கொண்டதாக உள்ளது. வெள்ளை, கறுப்பு மற்றும் தங்க வண்ணங்களில் இது கிடைக்கும். இந்தியாவில் இது அறிமுகமாகும் நாள் மற்றும் விலை குறித்து எந்த தகவலும் இதுவரை தரப்படவில்லை.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X