மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 டிச
2015
00:00

தான் ஏற்கனவே அறிவித்தபடி, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், Canvas 5 ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் வளைவு நுனிகளைக் கொண்ட 5.2 அங்குல திரை, 1920 x 1080 பிக்ஸெல் திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில், 64 பிட் அளவில் இயங்கும் Octa-Core MediaTek MT6753 ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதனை, ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மாலோ சிஸ்டத்திற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இதன் ராம் மெமரி 3 ஜி.பி. அளவில், DDR3 வகையினதாகத் தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம்.
இதன் பரிமாணம் 148 x 73.6 x 8.5 மிமீ. எடை 143 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பின்புறக் கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ் வசதியுடன், முகமறிந்து இயங்கும் நுட்பத்துடன், 13 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. 0.2 விநாடியில் போகஸ் செய்து கொள்ளும் வகையில், ஆட்டோ போகஸ் தொழில் நுட்பம் இணைந்துள்ளது. முன்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டது. குறைவான வெளிச்சத்தில் கூட, தெளிவான படங்களை எடுக்கும் வகையில், ப்ளாஷ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களை (4ஜி+2ஜி) இயக்கலாம். இந்தியாவில், 4ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளில் இதனை இயக்கலாம் என்று மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. இதன் பேட்டரி, 2,900 mAh திறனுடையது. தொடர்ந்து 10 மணி நேரம் பேசும் வசதியைத் தருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 275 மணி நேரம் மின் சக்தியைத் தக்கவைக்கிறது.
இரு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.11,999. ஏர்செல் நிறுவனம் இதனைத் தன்னிடம் வாங்குவோருக்குச் சில சலுகைகளை அளிக்கிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X