ரூ. 1,000க்கும் குறைந்த விலையில், மொபைல் போன் வாங்கிப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கு, ஸென் நிறுவனம், சென்ற மாதம் ஒரு போனை ரூ.825 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். எழுத்துகளும் எண்களும் கொண்ட கீ போர்ட் தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. டி.எப்.டி. வகை ஸ்கிரீன் உள்ளது. எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத் ஆகியன தரப்பட்டுள்ளன. பின்புறக் கேமரா 1.3 எம்.பி. திறன் கொண்டது. இதில் வீடியோவும் பதியலாம். இதன் பேட்டரி 1000 mAh திறன் கொண்டது