மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைகள் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 டிச
2015
00:00

மொபைல் போன் தயாரிக்கும் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம், இந்தியாவில் மேலும் மூன்று தொழிற்சாலைகளை அமைக்கிறது. இதற்கென ரூ. 300 கோடி முதலீடு செய்திடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த தொழிற்சாலைகள் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட இருக்கின்றன. இதுவரை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தான் விற்பனை செய்திடும் போன்களைத் தயாரிக்க சீனாவைச் சார்ந்து இருப்பது குறையும். இந்த மூன்று தொழிற்சாலைகளும் இயங்கத் தொடங்குகையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 40 லட்சம் போன்களாக இருக்கும். தெலுங்கானா மாநிலத்தில் 20 ஏக்கர் நிலமும், ராஜஸ்தானில் 25 ஏக்கர் நிலமும் மற்றும் திருப்பதியில் 15 ஏக்கர் நிலமும் இதற்கென கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலைகளில், ஏறத்தாழ 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் மாநிலம், ருத்ராபூர் என்னும் ஊரில், போன்களை அசெம்பிளிங் செய்திடும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பத்து லட்சம் போன்கள் தயாராகின்றன. இது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விற்பனைத் தேவையில் 30 முதல் 35 சதவீத தேவையை நிறைவு செய்கின்றது. மீதம் தேவைப்படும் போன்களுக்கு, மைக்ரோமேக்ஸ் சீன நிறுவனங்களையே சார்ந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல், மொபைல் போன்களுக்கான பேட்டரிகளைத் தயார் செய்திடும் பிரிவினையும் இயக்க மைக்ரோமேக்ஸ் திட்டமிடுகிறது. இவற்றை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திடும். சென்ற அக்டோபர் மாதம், லாவா, செல்கான் மற்றும் கார்பன் நிறுவனங்களுடன் இணைந்து திருப்பதியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மொபைல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்னும் பெயரில் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க இருப்பதாக மைக்ரோமேக்ஸ் அறிவித்திருந்தது. இங்கு இந்த நிறுவனங்கள் தனித்தனியே தொழிற்சாலைகளைத் தொடங்கி, ஆண்டுக்கு 7 கோடி மொபைல் போன்களைத் தயாரிக்க திட்டங்களை அறிவித்தன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி, சென்ற அக்டோபர் 21ல் கலந்து கொண்டார்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X