ஆண்ட்ராய்ட் இயக்க முறைமைகளின் பல பதிப்புகள், இன்று ஸ்மார்ட் போனில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் அண்மைக் காலத்திய பதிப்பு 'மார்ஷ்மாலவ்'. இது மொத்த போன்களில் 0.5% போன்களில் மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் கிட்கேட் பதிப்பு மொத்த போன்களில், 36.6% போன்களில் உள்ளது. இது நவம்பர் மாதத்தில் 37.8% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல ஜெல்லி பீன் சிஸ்டம், 29% லிருந்து, 26.9% ஆகக் குறைந்துள்ளது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் 2.9% லிருந்து, 3.3% ஆக உயர்ந்துள்ளது. ஜிஞ்சர் ப்ரெட் மற்றும் ப்ரையோ எந்தவித ஏற்றத்தாழ்வின்றி, அப்படியே முறையே 3.4% மற்றும் 0.2% ஆக உள்ளன.