"ஐ.பி." மற்றும் "மேக்" முகவரிகள் அறிய
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2016
00:00

நம் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்கள், இணையத்தில் வலைப்பின்னல் அமைப்பில் இணைகையில், ஒவ்வொரு சாதனத்திற்குமான 'ஐ.பி.' (IP) மற்றும் 'மேக்' (MAC) முகவரிகள் தரப்படுகின்றன. இவற்றை எங்கு, எப்படி காணலாம்?
'ஐ.பி.' (IP) முகவரி என்பது, நம் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன், நெட்வொர்க் இணைப்பில் இணைகையில் தரப்படும் An Internet Protocol address (IP address) ஆகும். இது எண்களால் ஆன, அந்த குறிப்பிட்ட சாதனத்திற்கான முகவரி எண். இதனால் இரு பயன்கள் உண்டு. சாதனங்களின் வலைப்பின்னலில், சாதனம் தனித்து அறியப்படுகிறது. சாதனம் இயங்கும் இடமும் தெரிய வருகிறது. MAC முகவரி என்பது media access control address எனப்படுவதாகும். சாதனங்கள் வலைப்பின்னலில் இணைக்கப்படு இயங்குகையில், அதன் சாதனத் தன்மைக்கான முகவரியாகும். இதன் மூலம், அந்த சாதனம் தனித்து அறியப்படுகிறது. ஈதர்நெட் மற்றும் வை பி (Ethernet and WiFi) வலைப்பின்னல் தொடர்பு வகைகளில் இந்த முகவரி பயன்படுத்தப்படுகிறது.
இனி இந்த முகவரிகளை, சாதனங்களில் எங்கு சென்று அறிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்ளட் பி.சி. என எந்த டிஜிட்டல் சாதனம், ஒரு நெட்வொர்க் அமைப்பில் இணைகையில், நெட்வொர்க்கில் அதற்கென ஓர் ஐ.பி. முகவரியும், அதன் தனித் தன்மையுடன் கூடிய சாதன இயக்கத்திற்கு MAC முகவரியும் தரப்படும். இவற்றை நாம் அறிந்து கொண்டே ஆக வேண்டிய பல தருணங்கள் உண்டு.
இணைப்பில் செல்கையில், நீங்கள் ஒரு ரெளட்டரின் பின்னணியில் தான் இணைந்திருப்பீர்கள். எனவே, இதற்கென பொதுவான ஐ.பி. முகவரி (public IP address) உண்டு. இதனை நாம் வேறு ஒரு இடத்தில் தான் அறிந்து கொள்ள வேண்டும்.

விண்டோஸ் 10: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, இந்த முகவரிகளை, விரைவாக அறிந்து கொள்ளலாம். இதற்கு முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இவற்றை அறிய சற்று சுற்றிச் செல்ல வேண்டும். உங்கள் டாஸ்க் பாரில் உள்ள அறிவிப்பிற்கான இடத்தில் (notification area) சிஸ்டம் ட்ரேயில், Wi-Fi ஐகானில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், “Network settings” என்பதில் கிளிக் செய்திடவும்.
உங்களுடைய சாதனம் வை பி இணைப்பில் இல்லாமல், நேரடியாக வயர் மூலம் இணைக்கப்பட்டிருந்தால், Settings கிளிக் செய்து “Network & Internet” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எந்த வகை இணைப்பு என்பதை டைப் செய்து, கூடுதல் தகவல்களுக்கான இடத்தினைக் கானவும். இங்குள்ள விண்டோவில் “Advanced options” என்பதில் கிளிக் செய்திடவும். இதனை Settings கிளிக் செய்து, பின்னர் Network & Internet > Wi-Fi எனச் சென்றும் பெறலாம். இதில் கீழாகச் சென்று Properties என்னும் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து நெட்வொர்க் இணைப்பு முகவரிகளும் கிடைக்கும்.

விண்டோஸ் 7,8,8.1 மற்றும் விண் 10: கீழே தரப்பட்டுள்ள வழிகள், விண்டோஸ் 10க்கு முன் வந்த சிஸ்டங்களில் செயல்படும் என்றாலும், விண்டோஸ் 10லும் செயல்படும். கண்ட்ரோல் பேனல் திறந்து, அதில் Network and Internet / Network and Sharing Centre என்ற பிரிவில் “View network status and tasks” என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து “Change adapter settings” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் பயன்படுத்தும் வகை இணைப்பு பெயரில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Status” என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Connection என்பதில், “Details” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு நாம் தேடும் அனைத்து முகவரிகளும் ஒரு பட்டியலாகக் கிடைக்கும்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்: இப்போதெல்லாம், அனைத்து ஸ்மார்ட் போன்களும், ஏதேனும் ஒரு வகையில் இணைய இணைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது இவையும், மேற்குறித்த முகவரிகளைப் பெறுகின்றன. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், இந்த முகவரிகள் குறித்த தகவல்களை Settings அப்ளிகேஷனில் காணலாம். போன் திரையில் மேலாக இருந்து இழுக்கவும். கிடைக்கும் திரையில் உள்ள கியர் ஐகானில் டேப் செய்திடவும். அல்லது போனில் app drawer என்பதனைத் திறந்து “Settings” ஐகானில் டேப் செய்திடவும். இங்கு Wireless & networks என்ற பிரிவில் “Wi-Fi” என்பதில் தட்டவும். கிடைக்கும் மெனுவில் “Advanced” என்பதைத் தட்டி, Advanced Wi-Fi என்ற திரையைப் பெறவும். இந்த திரையில் கீழ் பகுதியில், நீங்கள் தேடும் IP மற்றும் MAC முகவரிகள் காட்டப்படும்.
உங்கள் ஆண்ட்ராய்ட் போன் தயாரிப்பாளரைப் பொறுத்து, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் பதிப்பைப் பொறுத்து, மேலே குறிப்பிட்டவற்றில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X