வேர்டில் 'ஸ்குரோலிங்' பட்டைகள்: வேர்டில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்களில், கீழாகவும் வலது புறமாகவும் ஸ்குரோல் பார்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நீங்கள் டாகுமெண்ட்டின் எந்த பகுதியைப் பார்க்கிறீர்கள் என்பதனைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், நீங்கள், டாகுமெண்ட் ஒன்றைப் பார்க்க அதிக இடம் வேண்டும் என விரும்பினால், அல்லது, வேர்ட் புரோகிராமினை மவுஸ் இல்லாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தால், இந்த ஸ்குரோல்பார்களின் செயல்பாட்டினை நிறுத்தலாம். திரையில் காட்டப்படாமல் வைக்கலாம். இதற்குக் கீழே தந்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தி, கீழாகக் கிடைக்கும் Word Options பட்டனை அழுத்தவும். வேர்ட் 2010 எனில், ரிப்பனில் File டேப் அழுத்தி, அதன் பின்னர் Options என்பதைக் கிளிக் செய்திடவும்.)
2. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அங்கு உள்ளவற்றின் பட்டியலில், Display பிரிவைப் பெறவும்.
4. இதில் உள்ள Show Horizontal Scroll Bar என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அமைத்தால், இந்த ஸ்குரோல் பார் காட்டப்படும். எடுத்துவிட்டால், காட்டப்பட மாட்டாது.
5. இதே போல Show Vertical Scroll Bar என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸையும் கையாளவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஸ்குரோல் பார்களுக்கான வரையறை இரண்டையும் 'தேவையில்லை' எனக் குறியிட்டு விட்டால், அவை மறைக்கப்படும்.
தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.