கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்துள்ளேன். இதில் பின்னணியில் நல்ல வெள்ளை கலரில் பேக் கிரவுண்ட் அமைக்க முடியுமா? விஸ்டாவில் இதனைக் கொண்டிருந்தேன். விண்டோஸ் 7 மற்றும் 8 நான் பயன்படுத்திப் பார்க்கவில்லை. விண்டோஸ் 10ல் இதற்கான ஆப்ஷன் எங்கு தரப்பட்டுள்ளது?
என். ஜெயப்பிரகாஷ், புதுச்சேரி.
பதில்:
கேள்விக்கு நன்றி. முதல் முறையாக இது போன்ற கேள்வியைப் பெற்றுள்ளேன். விண்டோஸ் 10 சிஸ்டத்தை இந்த நோக்கத்துடன் பார்த்ததில், சில வழிகள் தென்பட்டன. முதலில் உங்கள் தேடல் கட்டத்தில், “Desktop background” என டைப் செய்திடவும். கிடைக்கின்ற முடிவுகளில் “Choose background, slideshow or solid color” என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Themes என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைப்பதில் மீண்டும் Themes என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் Theme settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து உங்கள் தீம் ஆக High Contrast White என்பதை முடிவு செய்து கிளிக் செய்தால், நீங்கள் விரும்பியபடி பின்னணி வண்ணம் அமையும்.
இன்னொரு வழியும் உள்ளது. வெள்ளை வண்ணத்தில் இமேஜ் ஒன்றை போட்டோ பைலாகத் தயாரித்து, இந்த போட்டோவினை, படத்தை, பின்னணியாகப் பயன்படுத்தலாம். இதற்கு MS Paint செயலியைப் பயன்படுத்தவும். படம் 1920 x 1080 பிக்ஸெல் அளவில் அமைக்கப்பட வேண்டும். இதனைத் தயார் செய்த பின்னர், background settings சென்று, அங்கு கீழ் விரி மெனுவில், Picture என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்கு solid color, slideshow or picture என மூன்று ஆப்ஷன் கிடைக்கும். இதில் உங்கள் விருப்பப்படியானதைத் தேர்ந்தெடுக்கலாம். Browse தேர்ந்தெடுத்து, நீங்கள் ஏற்கனவே அமைத்த படத்திற்கான பைலை கிளிக் செய்து அமைக்கலாம்.

கேள்வி: நீங்கள் ஏற்கனவே விரிவாக அறிவுறுத்தியபடி, விண்டோஸ் 10 இயக்கத்திற்கான இன்ஸ்டலேஷன் மீடியாவினை, ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றில் தரவிறக்கம் செய்து கொண்டேன். நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதனைப் பயன்படுத்தி, விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்திட, ப்ராடக்ட் கீ எங்கு பெற வேண்டும்?
ஆர். ஸ்ரீப்ரியா, சேலம்.
பதில்:
நீங்கள் விண்டோஸ் 7 / 8/8.1 சிஸ்டத்திலிருந்து அப்கிரேட் செய்வதாக இருந்தால், விண்டோஸ் 10 பதிந்து கொள்ள ப்ராடக்ட் கீ தேவை இருக்காது. இதனை நீங்கள் குறிப்பிடும் அதே கட்டுரையில் தெரிவித்திருந்தேன். இன்ஸ்டலேஷன் செய்திடுகையில், upgrade ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 'clean installation' ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
மேலே சொன்ன மூன்று ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாமல், விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பவர்கள், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விற்பனை செய்பவர்களிடம், இதற்கான கட்டணம் செலுத்தினால், ப்ராடக்ட் கீ தரப்படும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் பைரசி செயலிகளை, மைக்ரோசாப்ட் கண்டறிந்து, நம் கம்ப்யூட்டர்களிலிருந்து நீக்கிவிடும் என பல வலைத் தளச் செய்திகள் கூறுகின்றன. மைக்ரோசாப்ட், விண் 10 சிஸ்டம் மூலம், நம் கம்ப்யூட்டர்களை அணுக முடியும் என்றால், எதனை வேண்டும் என்றாலும் செய்திடலாமே? இதற்காகத்தான், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகத் தருகிறதா?
ஆர்.பிரிய லஷ்மி, மதுரை.
பதில்:
நிச்சயமாக இல்லை. பலர் வேண்டும் என்றே இது போன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, ”பயனர் உரிமை ஒப்பந்தம்” (End User License Agreement EULA) http://www.microsoft.com/en-us/Useterms/Retail/Windows/10/UseTerms_Retail_Windows_10_English.htm என்ற இணைய முகவரியில் உள்ளது. இதனைப் படித்துப் பார்த்தால், உங்கள் பயம் அடிப்படையற்றது எனத் தெரியும். மைக்ரோசாப்ட் சொல்வது வேறு. அதன் விண்டோஸ் ஸ்டோரில், ஏதேனும் திருட்டுத்தனமான புரோகிராம்கள், பயனாளர்களுக்கு வழங்கும் பொருட்டு அப்லோட் செய்யப்பட்டால், அவற்றைக் கண்டறிந்து, மைக்ரோசாப்ட் நீக்கும் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து கண்காணிக்கும் வேலையை மைக்ரோசாப்ட் மேற்கொள்ளாது.

கேள்வி: புதியதாக ஐபோன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். இதில் கேப்ஸ் லாக் தொடர்ந்து பயன்படுத்த, கீ போர்டில் என்ன செய்திட வேண்டும் எனத் தெரியவில்லை. தொடர்ந்து கேபிடல் எழுத்து டைப் செய்திடும் வகையில் அமைக்க வேண்டும். பின்னர், பழைய படி ஷிப்ட் கீ பயன்படுத்தி அமைக்கும் வழியும் வேண்டும். இதற்கான செட்டிங்ஸ் எங்கு உள்ளது?
எ.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
பதில்:
ஐ.ஓ.எஸ். 9 சிஸ்டத்தில், கீ போர்டில் உள்ள ஷிப்ட் கீயினை இரு முறை தட்டவும். ஷிப்ட் கீயில் மேலாக நோக்கும் அம்புக் குறி கீயின் கீழாக, ஒரு சிறிய கோடு காட்டப்படும். இப்போது டைப் செய்தால், அனைத்தும் கேப்ஸ் லாக் போட்டது போல அனைத்தும் கேபிடல் எழுத்துகளாகக் கிடைக்கும். மீண்டும் ஷிப்ட் கீ அழுத்தினால், இந்த செயல்பாடு மறைந்து, வழக்கம்போல் செயல்பாடு கிடைக்கும். மாறா நிலையில், கேப்ஸ் லாக் இயக்கப்பட்டு நமக்கு ஐ.ஓ.எஸ்.சிஸ்டத்தில் கிடைக்கிறது. இதனை மாற்ற வேண்டும் என எதற்காவது திட்டமிட்டால், ஹோம் ஸ்கிரீனில் “Settings” என்பதில் தட்டவும். இந்த செட்டிங்ஸ் ஸ்கிரீனில், இடது பக்கத்தில் “General” என்று இருப்பதில் தட்டவும். இங்கு கிடைக்கும் ஸ்கிரீனில், வலது பக்கம் உள்ள “General” என்பதில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் “Keyboard” என இருப்பதில் மீண்டும் தட்டவும். “Keyboards” என்பதில், கீழாகச் சென்று, “Enable Caps Lock” என்ற ஸ்லைடர் பட்டனைத் தட்டி, அந்த இயக்கத்தினை நிறுத்தலாம். இந்த பட்டனைத் தட்டியவுடன், ஸ்லைடர் பட்டன், கிரே மற்றும் வெள்ளை வண்ணத்திற்கு மாறும்.
பழைய முறையில் டச் கீ போர்ட் பெற http://www.howtogeek.com/231351 என்ற இணையப் பக்கத்தில் தெளிவாக வழி தரப்பட்டுள்ளது. அவற்றைப் பின்பற்றலாம்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில், நாம் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கும்போது, நார்மல் டெம்ப்ளேட் லோட் ஆகி, அதில் நம் டாகுமெண்ட்டை அமைக்கிறோம். நான் இந்த டெம்ப்ளேட்டினை மாற்றி அமைக்க முயற்சித்து, எங்கு அவை ஸ்டோர் செய்யப்பட்டுள்ளன என்று கண்டறிய முயற்சி செய்தேன். விடை தெரியவில்லை. வேர்டில் உள்ள ஹெல்ப் விண்டோ சென்றும் தெரியவில்லை. விளக்கம் அளித்து உதவவும்.
என். சத்ய பிரகாஷ், கோவை.
பதில்:
மைக்ரோசாப்ட் தன் டெம்ப்ளேட் பைல்களை, அவ்வளவு எளிதில் தன் பயனாளர்கள் பெறும் வகையில் அமைக்கவில்லை. எனவே, ஒரு டெம்ப்ளேட் பைலை, எடிட் செய்து மாற்றி அமைக்க அதனைப் பெறும் முயற்சி வெற்றி பெறுவதில்லை. வேர்ட் ஹெல்ப் பிரிவும் இந்த விஷயத்தில் பிடிவாதமாய் உதவிட மறுக்கிறது. டெம்ப்ளேட் பைல்கள் எங்கு ஸ்டோர் செய்யப்பட்டுள்ளன என்று அறிய கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தி, கீழாகக் கிடைக்கும் Word Options பட்டனை அழுத்தவும். வேர்ட் 2010 எனில், ரிப்பனில் File டேப் அழுத்தி, அதன் பின்னர் Options என்பதைக் கிளிக் செய்திடவும்.)
2. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. கிடைக்கும் ஆப்ஷன்கள் பட்டியலில் கீழ் நோக்கி ஸ்குரோல் செய்து சென்று, File Locations என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் File Locations டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. அடுத்து File Types பட்டியலில், User Templates என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு டெம்ப்ளேட் பைல் உள்ள இடத்திற்கான வழி மிகவும் சிறியதாக இருந்தால், அதனைப் பின்பற்றிச் செல்லவும்.
5. இல்லையேல், Modify பட்டனைக் கிளிக் செய்திடவும் (நீங்கள் எடிட் செய்யப் போவதில்லை என்றாலும், இந்த பட்டனில் கிளிக் செய்திடவும்). வேர்ட் Modify Location டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. இங்கு மேலாகக் காட்டப்படும் Look In என்னும் கீழ் விரி மெனுவில், டெம்ப்ளேட் பைல்களுக்கான டைரக்டரி வழி காட்டப்படும். இதனைப் பின்பற்றி, உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேட் பைலைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

கேள்வி: என் இணையத் தேடலுக்கு குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் பிரைவேட் மோட் என்று சொல்லப்படும் நிலைக்கு எப்படிச் செல்வது? ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கின்ற இணைய தளங்களை மூட வேண்டுமா? நாம் பார்ப்பது, ஹிஸ்டரியில் செல்லாத வகை என்று எப்படி உறுதி செய்து கொள்வது?
என். கிருஷ்ணன், திருச்சி.
பதில்:
கூகுள் குரோம் பிரவுசரில், நீங்கள் பார்க்கும் தளங்கள் குறித்த குறிப்பு எதுவும் பதியப்படாத நிலைக்கு, “Incognito” என்று பெயர் தரப்பட்டுள்ளது. பிரவுசரின் மேலாக, மெனு பாரில், வலது மேல் மூலையில், மூன்று புள்ளிகள் அமைந்துள்ள மெனு பட்டனைத் தொடவும். கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், “New incognito tab” என்னும் இடத்தில் தொட்டால், நீங்கள் விரும்பும் வகையில், குறிப்பு எதுவும் பதியப்படாத இணையத் தேடலுக்கு வழி தரப்படும். ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த தளங்கள், இன்னொரு விண்டோவில் இருக்கும். கீழாக சிஸ்டம் ட்ரேயில் பார்த்தால், இரண்டு குரோம் பிரவுசர் ஐகான்கள் இருப்பதைப் பார்த்து இதனை உறுதி செய்து கொள்ளலாம். நீங்கள் பார்த்துப் பயன்படுத்திக் கொண்டிருப்பது, “Incognito” நிலை என்பதை உறுதி செய்திட, பிரவுசர் மெனுவில், இடது புறம் மேலாகப் பார்க்கவும். ரகசிய போலீஸ் ஏஜேண்ட் போன்ற ஒருவரின் முக ஐகான் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். நீங்கள் ஒவ்வொரு டேப் திறக்கும்போதும், அதே போன்ற ஐகான், தளப் பக்கத்திற்கான இடத்தில் பெரியதாகக் காட்டப்படும். இந்த விண்டோவினை மூடிவிட்டால், ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த தளப் பக்கங்கள் கொண்ட பிரவுசர் காட்டப்படும். அதனை உடனே பயன்படுத்தலாம்.

கேள்வி: என் வேர்ட் புரோகிராமில், ஸ்கிரீன் டிப் வருவதை நிறுத்த வேண்டும். பின்னர், தேவைப்படும்போது பெற்றுப் பயன்படுத்தவும் விரும்புகிறேன். இதற்கான வழி உண்டா? அல்லது மாறா நிலையில் உள்ள இதனை மறைக்க முடியாதா? தெளிவு படுத்தவும்.
எஸ். ஷண்முக ராஜன், மதுரை.
பதில்
: ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) மாறா நிலையில் வேர்ட் புரோகிராமில் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவையாகும். இவற்றை நிறுத்தலாம். மீண்டும் வேண்டும்போது இயக்கிக் கொள்ளலாம். இதற்கு கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும். அதன் பின்னர், இவை காட்டப்படாமல் இருக்கும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
4. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X