சென்ற மாதம், எச்.டி.சி. நிறுவனம், தன் டிசையர் 828 ஸ்மார்ட் போன் குறித்து இந்தியாவில் அறிவிப்பினை வெளியிட்டது. சென்ற வாரம், ப்ளிப் கார்ட் இணையதளம் வழியாக மட்டும், இந்த போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் 5.5. அங்குல திரை 1920 x 1080 பிக்ஸெல் மற்றும் HD IPS டிஸ்பிளே திறன் கொண்டது. இதனை இயக்குவது ஆக்டா கோர் MediaTek MT6753 ப்ராசசர். இது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் செயல்திறன் கொண்டது. பின்புறமாக 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, LED ப்ளாஷ் மற்றும் OIS, BSI சென்சார்களுடன் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்டிகல் இமேஜ் நிலை நிறுத்தும் திறன் குறிப்பிடத்தக்கது. இதன் விடியோ 1080p பதிவுத் திறன் கொண்டது.
இந்த ஸ்மார்ட் போனின் ராம் நினைவகம் 2 ஜி.பி. கொள்ளளவு கொண்டது. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 2 டெரா பைட் அளவிற்கு உயர்த்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப். இதன் யூசர் இன்டர்பேஸ் எச்.டி.சி. போன்களுக்கான பிரத்யேக தயாரிப்பாகும்.
முன்புறமாகவும் கூடுதல் பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதில் 26.8மிமீ லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறமாக இரண்டு பூம் சவுண்ட் ஸ்பீக்கர்கள் உள்ளன. டோல்பி ஆடியோ சிஸ்டம் இயங்குவது, ஆடியோ ரசிகர்களை மகிழ்விக்கும். மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோவும் இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும். இரண்டு நானோ சிம்களை இதில் இயக்கலாம். இது ஒரு 4ஜி ஸ்மார்ட்போன்.
இதன் பரிமாணம் 157.7×78.9×7.9 மிமீ. எடை 148 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,800 mAh திறன் கொண்டது.
கருப்பு கிரே மற்றும் முத்து வெண்மை நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.19,990.