சின்ன சின்ன செய்திகள் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
சின்ன சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
00:00

புதிய தீவனப்பயிர் இரகங்கள்: கினியாப்புல் கோ (ஜ.ஜி) 3 - இந்த இரகம் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மும்பாசா என்ற கினியா புல்லிலிருந்து வளர்ப்புத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டது. முந்தய இரகமான கோ.2ஐ விட அதிகமான மற்றும் அகலமான இலைகளைக்
கொண்டது.
இந்த புல்வகை நிழலைத் தாங்கி நன்கு வளர்வதால் தென்னந்தோப்புக்கு ஊடுபயிரிட ஏற்றது. பசுந்தீவன விளைச்சல் ஆண்டுக்கு (7 அறுவடைகளில்) ஒரு எக்டரில் 320 டன் கொடுக்கவல்லது. முதல் அறுவடை 70 - 75 நாட்களிலும், அடுத்தடுத்த அறுவடைகள் 40-45 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம்.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ.(பி.எஸ்)5 - இந்த இரகம் தீவனக்கம்பு ஐ.பி.20594 ஐயும், நேப்பியர் புல் எஃடி 437ம் இலைக்கன்று செய்து உருவாக்கப்பட்டது. அதிக பசுந்தீவன விளைச்சலாக ஆண்டுக்கு (7 ஆண்டுகளில்) ஒரு எக்டரில் 360 டன் கொடுக்கவல்லது. அதிக தூர்கள் (30-40 தூர்கள்) குத்து மற்றும் சாயாத தன்மையுடையது.
குளிரைத் தாங்கி வளர்வதால் ஆண்டு முழுவதும் சீரான விளைச்சல் தரவல்லது. அகலமான இலைகள் மற்றும் மிருதுவான தண்டுகள் கொண்டது. இதன் உலர்தீவன விளைச்சல் 79.21 டன் / எக்டர் / ஆண்டு. விரைவில் தழைத்து வளரக் கூடியது. முதல் அறுவடை 75 - 80 நாட்களிலும் அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம்.

தீவனச்சோளம் கோ.31: இப்புதிய இரகம் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது கோ (எப்.என்) 29ன் கருதி மாற்று தேர்வு. அதிக பசுந்தீவன விளைச்சலாக ஆண்டுக்கு 17 அறுவடைகளில், ஒரு எக்டரில் 190 டன் கொடுக்கவல்லது. அகலமான இலைகளுடன் கூடிய அதிக தூர்கள் இதன் சிறப்பு. விதை உதிராத தன்மையால் கூடுதல் விதை உற்பத்திக்கு (970 கிலோ / எக்டர் / ஆண்டு) வழிகோலுகிறது. அதிக புரதசத்து (9.86%) மற்றும் உலர் எடை விளைச்சல் (49.73 டன் / எக்டர் / ஆண்டு) கொண்டது. குறைந்த அளவு நச்சுப்பொருள் (172 பிபிஎம்), மற்றும் நார்ச்சத்து (19.8%) உடையது. விரைவாக தழைக்கும் திறனால் ஆண்டிற்கு 6-7 அறுவடைகள் செய்யலாம். மிகவும் சுவையானது. கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் விரும்பி உண்ணக்கூடியது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : முனைவர் சா.பாபு, தீவனப்பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 03. தொலைபேசி: 0422 - 661 1228.

கிட்டி முறையிலான எலி ஒழிப்பு: இப்பணியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம், சீரமங்கலம் அறிவொளி நகரைச் சேர்ந்த என்.ரவி கூறும்போது ""அறிவொளி நகரில்'' சுமார் 30 குடும்பத்தினை பாரம்பரியமாக எலி பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார்கள். ரவியிடம் 400 கிட்டிகள் உள்ளன. தேவையான கிட்டிகளை மூங்கில் குச்சிகளைக் கொண்டு அவர்களே வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு ஏக்கருக்கு 300 கிட்டிகள் நட்டார். ஓரளவிற்கு எலிகளை நெற்வயல்களில் ஒழித்து விட முடியும். ஒரு கிட்டிக்கு ரூ.4 என்ற அளவில் விவசாயிகளிடம் வாடகை வசூலிக்கிறார்கள். ஆண்டுக்கு சம்பா மற்றும் கோடை பருவத்தில் மட்டும் வேலை இருக்கும். இவரிடம் உள்ள 400 கிட்டிகளை கொண்டு ஆண்டுக்கு சுமார் 6000 எலிகளைப் பிடிக்கிறார்கள். இதேபோல் அவர்கள் பகுதியிலுள்ள மற்றவர்களிடம் உள்ள 10,000 கிட்டிகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் எலிகளைப் பிடித்து அழித்து வருவதாக தெரிவிக்கிறார்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X