கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
00:00

கேள்வி: நான் அண்மையில், விடியோ படம் ஒன்றை இணைய இணைப்பிலேயே இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த இணைய தளம் Seized Domain என்று காட்டப்பட்டு ஒரு எச்சரிக்கை காட்டப்பட்டது. (அதனை படமாக இணைத்துள்ளேன்). Seized Domain என்றால் என்னவென்று தெரியவில்லை. மேலும், “Yahoo has forbidden this link.” என்றும் ஒரு செய்தி காட்டப்பட்டது. உடனே வைரஸ் இருக்கிறதா என்று முழுவதுமாகப் பரிசோதனை செய்தேன். வைரஸ் எதுவும் இல்லை என்று அறிவிப்பு கிடைத்தது. இருப்பினும் அச்சமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும்.
ஆர். மாலினி திரவியம், சென்னை.
பதில்:
நீங்கள் எந்த வகை தளத்தில் படம் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த எச்சரிக்கை வந்தது என்று கூறவில்லை. சில இணைய தளங்கள், கட்டணம் பெற்றுக் கொண்டு, படங்களைக் காட்டுகின்றன. அது போன்ற தளங்களில், தற்சமயம் தியேட்டர்களில் காட்டப்படும் படங்களைக் காட்டக் கூடாது. அப்படிக் காட்டுவதாக இருந்தால், அதற்கான கட்டணத்தை, அந்த படங்களின் உரிமையாளர்களுக்குப் பணம் செலுத்தி இருக்க வேண்டும். பார்ப்பவர்களிடமிருந்து இவர்கள் பணம் பெற்றுக் கொள்வார்கள். சில தளங்கள், பார்வையாளர்களிடம் கட்டணம் பெறுவதில்லை. ஆனால், படத்தின் உரிமையாளர்களுக்குப் பணம் செலுத்தி இருப்பார்கள். விளம்பரங்களிலிருந்து பணம் பெறுவதன் மூலம் ஈடு செய்து கொள்வார்கள்.
உங்களுக்கு வந்திருக்கும் எச்சரிக்கை, இந்த தளத்தினை, சட்டப்படி கண்காணிக்கும் அமைப்பு, மூடிவிட்டது என்ற பொருளைத் தருகிறது. இதிலிருந்து படம் பார்ப்பது, அவற்றை டவுண்லோட் செய்வதும் சட்டப்படி குற்றம். அது, திருட்டுப் பொருட்களை வாங்குவதற்குச் சமம். மேலும், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பே, இத்தகைய தடை செய்யப்பட்ட தளங்கள் குறித்து எச்சரிக்கை செய்தி காட்டும்.
எது எப்படி இருந்தாலும், இது போன்ற செய்தி கிடைத்தால், மீண்டும் அந்த இணைய தளத்திற்குச் செல்லாமல் இருப்பது நல்லது. இதே தளத்தில், உங்கள் கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி, எதனையேனும் டவுண்லோட் செய்திருந்தால், உடனே, அந்த கிரெடிட் கார்ட் கொடுத்த வங்கிக்கு, அந்த கார்டினை முடக்கி வைக்கும்படி தகவல் கொடுத்து, புதிய கார்ட் வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. பொதுவாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், இது அடிக்கடி நிகழும் சம்பவமாகும். நீங்கள் வெளிநாட்டினர் போல, இணைய தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறது. சிக்கல் உள்ள தளங்களை அணுகுவதைத் தவிர்க்கவும்.

கேள்வி: என் யாஹூ அக்கவுண்ட்டினை மூடி, அதன் தொடர்பினைத் துண்டிக்க எண்ணுகிறேன். இதற்குப் பல சொந்த காரணங்கள் உள்ளன. இதற்கு யாஹூ தளத்தில் எந்த வசதியும் தரப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த அக்கவுண்ட்டினை மூடினால், யு ட்யூப் பயன்படுத்த முடியாது என்று என் தோழி கூறுகிறாள். இது உண்மையா? அக்கவுண்ட் மூடுவதற்கு வழி காட்டவும்.
என். ஜெசிந்தா, கோவை.
பதில்:
முதலில் உங்கள் அச்சத்தினைப் போக்குகிறேன். யு ட்யூப், யாஹு தளத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. எனவே, யாஹூ அக்கவுண்ட்டினை மூடுவதற்கும், யு ட்யூப் பயன்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. யு ட்யூப் கூகுள் நிறுவனத்தினைச் சார்ந்தது. யு ட்யூப் தளத்தில், விடியோ படம் எதனையாவது அப்லோட் செய்திட, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் குறித்து கேட்கப்படும். அதற்கு ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்று வேண்டும். ஆனால், யு ட்யூப் தளம் சென்று, அதில் உள்ள படங்களைப் பார்க்க ஜிமெயில் அக்கவுண்ட் தேவையில்லை. ஆனால், யாஹூ, Flickr போட்டோ தளத்துடன் சம்பந்தப்பட்டது. எனவே, இந்த போட்டோ தளத்தினைப் பயன்படுத்த நீங்கள் விருப்பப்பட்டால், யாஹூ அக்கவுண்ட்டினை மூடக் கூடாது. இனி, உங்கள் யாஹூ பிரச்னைக்கு வருவோம்.
யாஹூ அக்கவுண்ட் கணக்கினை நீக்க, முதலில் யாஹூ தளத்தில் சென்று, உங்கள் அக்கவுண்ட் செல்லவும். பின்னர், https://login.yahoo.com/?.done=https%3a%2f%2fedit.yahoo.com%2fconfig%2fdelete_user%3f.scrumb%3d0 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். நேரடியாக, இந்த தளம் சென்றால், உங்களுடைய யாஹூ அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் வழங்க வேண்டும். இந்தப் பக்கம் சென்றவுடன், உங்களுக்கு பல எச்சரிக்கை செய்திகள் வழங்கப்படும். நீங்கள் யாஹூ அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டியதற்கான பல காரணங்கள் தரப்படும். யாஹூ அக்கவுண்ட் நீக்கப்பட்டால், HotJobs, Yahoo! Mail, Yahoo! Address Book, Yahoo! Briefcase, and GeoCities ஆகிய தளங்களில் உள்ள உங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும் உங்களுக்குக் கிடைக்காது என்ற எச்சரிக்கை தரப்படும். யாஹூ தளத்தில், நீங்கள் கட்டணம் செலுத்தி எந்த சேவையினையாவது பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதுவும் முடக்கப்படும் என்றும், மீதமுள்ள உங்கள் பணம் திரும்பக் கிடைக்காது என்றும் அறிவுறுத்தப்படுவீர்கள். பின்னர், மீண்டும் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும். CAPTCHA குறியீடு தரப்பட்டு, அதனையும் சரியாக உள்ளீடு செய்திட வேண்டும். பின் மீண்டும் உங்கள் அக்கவுண்ட் முடிக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்படும். இதுவே உங்களுக்கான இறுதி நிலை. இதில் சரி என்று பதில் தந்தால், உங்கள் யாஹூ அக்கவுண்ட், 90 நாட்களுக்குள் நீக்கப்படும்.
யாஹூ அக்கவுண்ட்டினை நீக்கும் முன்னர், இந்த அக்கவுண்ட் வழியாக வந்த அனைத்தையும், ஒரு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அத்துடன், இந்த யாஹூ மெயில் வழியாக, நீங்கள் தொடங்கிய மற்ற மின் அஞ்சல் பதிவுகள் ஆகியவற்றையும் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

கேள்வி: நீங்கள் ஏற்கனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் உள்ள Adware ஐ எப்படி நீக்குவது எனக் குறிப்பினைத் தந்தீர்கள். பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை எப்படி நீக்குவது என டிப்ஸ் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். ஸ்டாலின், பழநி.
பதில்:
உங்களைப் போலவே, மேலும் பல வாசகர்கள், பயர்பாக்ஸ் பிரவுசர் சார்ந்து பல கேள்விகளை அனுப்பி உள்ளனர். முதலில் Adware குறித்து கூறுகிறேன். இது ஒருவகை மால்வேர் புரோகிராம். இது தானாக இயங்கி, விளம்பரங்களைக் காட்டும். பாப் அப் கட்டச் செய்திகளைத் தரும். நாம் பிரவுசரில் ஏதேனும் டைப் செய்திட முயற்சிக்கையில், இது போன்ற செயல்களை மேற்கொண்டு நமக்கு எரிச்சலைத் தரும். பொதுவாக, நாம் எதனையேனும் இலவசமாகத் தரவிறக்கம் செய்கையில், அவற்றுடன் ஒட்டிக் கொண்டு, இந்த Adware வந்து நம் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு, இந்த வேலைகளைச் செய்திடும். அது மட்டுமின்றி, சில வைரஸ்களைத் தானாக உங்கள் கம்ப்யூட்டருக்குத் தரவிறக்கம் செய்திடும். இணையப் பயனாளர்களுக்கு இது சகிக்க முடியாத செயலாக இருக்கும். ஆனால், இதனை நாம் தவிர்க்கலாம் மற்றும் நீக்கலாம்.
ஏற்கனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இதனை எப்படி நீக்கலாம் எனக் குறிப்பு தந்திருந்தேன். பயர்பாக்ஸ் பிரவுசரில் நீக்குவது குறித்து இங்கு பார்க்கலாம். 1. மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்கவும். மேலாக உள்ள மூன்று கோடுகள் கொண்ட ஐகானைக் கிளிக் செய்து, “Settings” பெறவும். இங்கு பல ஆப்ஷன்கள் தரப்படும். அதில், “Add-Ons” என்று இருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இடதுபுறம் உள்ள, Extensions என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எக்ஸ்டன்ஷன்கள் உள்ள பட்டியல் ஒன்று தரப்படும். இதில் நீங்களாகத் தரவிறக்கம் செய்து, அல்லது அனுமதி கொடுத்து இன்ஸ்டால் செய்தவை தவிர மற்றவற்றைக் கவனிக்கவும். அல்லது, “Optimizer”, “Coupons”, “Deals”, “Adverts” போன்ற பெயர்கள் உள்ளவற்றைப் பார்க்கவும். இந்த சொற்கள், அட்வேர் எக்ஸ்டன்ஷன் புரோகிராமில் இணைக்கப்படும் பொதுப் பெயர்களாகும். இங்கு தொல்லை தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராமினைக் கண்டு கொள்ளவும். பின் அதனைத் தேர்ந்தெடுத்து, “Disable” என்ற பட்டனை அழுத்தவும். உடன், இந்த எக்ஸ்டன்ஷன் முடக்கப்படும். தொடர்ந்து, “Remove” என்ற பட்டனில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் நீக்கப்படும். அடுத்து பிரவுசரை மூடிப் பின் திறக்கவும். அட்வேர் இனி இயங்காமல் இருப்பதனைக் காணலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன். இதில் பி.டி.எப். பைல்களைப் படிக்க முயற்சிக்கையில், எட்ஜ் பிரவுசர் திறக்கப்பட்டு, அதில் பைல் திறக்கப்படுகிறது. அடோப் அல்லது மற்ற பி.டி.எப். ரீடர் வழியாகப் படிக்க, அதனைத் திறந்து, பின்னர், பைலைத் திறக்க வேண்டியதுள்ளது. வழக்கமான பி.டி.எப். ரீடர் புரோகிராமினை, மாறா நிலையில் அமைக்க என்ன செய்திட வேண்டும்? செட்டிங்ஸ் எப்படி மாற்ற வேண்டும்?
இ.அன்புச் செல்வன், புதுச்சேரி.
பதில்
: நீங்கள் சொல்வது உண்மையே. விண்டோஸ் 10ல் தரப்பட்டிருக்கும் எட்ஜ் புரோகிராம், அதன் பிரவுசர் மட்டுமல்ல; பி.டி.எப். ரீடரும் கூட. மாறா நிலையில் இதுவே இயங்கும். இதனால், தர்ட் பார்ட்டி (அடோப், பி.டி.எப்.எக்ஸ்சேஞ்ச் ரீடர்) பி.டி.எப். ரீடர் எதுவும் இன்ஸ்டால் செய்திடமால், இதனையே பயன்படுத்தலாம். ஆனால், அதிக வசதிகள் கொண்ட பி.டி.எப். ரீடர் தேவை எனில், மாறா நிலையில் உள்ள இதனை மாற்றி, தர்ட் பார்ட்டி பி.டி.எப். ரீடர் புரோகிராமினை இயக்கலாம். அதற்கான வழிகள்:
பைல் எக்ஸ்புளோரரில், நீங்கள் திறக்க விரும்பும் பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், “Open with > Choose another app” என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில், நீங்கள் விரும்பும், ஏற்கனவே, இன்ஸ்டால் செய்யப்பட்ட தர்ட் பார்ட்டி, பி.டி.எப். ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் “Always use this app” என்பதனைத் தேர்ந்தெடுத்தால் தான், அதுவே நிலையான ஒன்றாக அமைக்கப்படும். இந்த மெனுவில், நீங்கள் விரும்பும் பி.டி.எப். ரீடர் புரோகிராம் காட்டப்படவில்லை என்றால், “More apps”, என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது “Look for another app in this PC” என்ற தொடர்பில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் பி.டி.எப்.ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, அதனையே மாறா நிலை (Default) புரோகிராமாக அமைக்கவும்.
இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் திறக்கவும். அங்கு “Default Programs” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து, “Associate a file type or protocol with a program” என்பதில் கிளிக் செய்திடவும். சிறிது நேரத்தில், பல பைல் வகைகள் காட்டப்படும். அந்தப் பட்டியலில் கீழாகச் சென்று, .PDF என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, “Change program” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பாப் அப் விண்டோ திறக்கப்பட்டு, நீங்கள் தேர்ந்தெடுக்க, அப்ளிகேஷன்கள் பட்டியல் ஒன்று தரப்படும். இந்த பட்டியலில், நீங்கள் விரும்பும் புரோகிராம் இல்லை என்றால், “More apps” என்பதில் கிளிக் செய்திடவும். இதிலும் இல்லை என்றால், see “Look for another app in this PC” என்பதில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் பி.டி.எப்.ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, அதனையே மாறா நிலை (Default) புரோகிராமாக அமைக்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ulaa - Mumbai,இந்தியா
14-ஜன-201604:13:30 IST Report Abuse
ulaa வணக்கம் :-) தாங்கள் thumbs.db மற்றும் desktop.ini என்ற பெயருள்ள file களை நீக்குவதற்கான முறையை செவ்வனே விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி. ஒரு கேள்வியின் விடை தருவீர்களா விண்டோஸ் 7 _இல் டெஸ்க்டாப் மேல் save செய்யப்பட்ட ஒரு பட file , filename மாற்ற , வேறு டிரெக்டரி'க்கு மாற்ற , செய்ய, அல்லது ஓபன் செய்ய, வழி விடாது அமர்ந்துள்ளது. இந்த file _ஐ செய்வது எப்படி ? :-)
Rate this:
Cancel
Raja - butterworth,மலேஷியா
14-ஜன-201601:47:44 IST Report Abuse
Raja rename செய்து உருவாக்கிய ஒரு போல்டரில் அதை மற்றவர்க்கு காப்பி செய்து கொடுத்தாலும், அந்த போல்டரின் நேமினை மாற்றமுடியாமல் அமைப்பதற்கு என்ன செய்தல் வேண்டும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X