சென்ற மாதம், அனைவரும் எதிர்பார்த்தபடி, மோட்டாராலோ நிறுவனம் தன்னுடைய மோட்டோ ஜி டர்போ மாடல் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,499 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 1280 x 720 பிக்ஸெல்கள் கொண்டு எச்.டி. டிஸ்பிளே திறனுடன் 5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1.1. (லாலிபாப்) ஆக உள்ளது. டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் சிஸ்டத்துடன் 13 மெகா பிக்ஸெல் திறனுடன், இதன் பின்புற இயக்கக் கேமரா உள்ளது. இது 1080p திறனுடன் விடியோ பதிவையும் மேற்கொள்கிறது. ஐ.ஆர். பில்டர் இந்தக் கேமராவுடன் தரப்பட்டுள்ளது. முன்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 4ஜி எல்.டி. இ. நெட்வொர்க் இணைப்பினை இதில் மேற்கொள்ளலாம். இதன் ப்ராசசர் ஆக்டா கோர் ஸ்நாப் ட்ரேகன் 615 ஆகும். இதனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் கூட, போனை தொடர்ந்து 6 மணி 15 நிமிடங்கள் பயன்படுத்தலாம். இதில் 15W Turbo சார்ஜர் தரப்பட்டுள்ளது. மூன்று அடி ஆழ நீரில், இந்த போனை 30 நிமிடங்கள் வைத்திருந்தாலும், இது கெட்டுப் போகாது.
இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம்.ரேடியோ ஆடியோ ரசிகர்களை மகிழ்விக்கும். இதன் பரிமாணம் 142.1 x 72.4 x 6.1-11.6 மி.மீ. எடை 155 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,470 mAh திறன் கொண்டு டர்போ சார்ஜ் வசதியுடன் செயல்படுகிறது. ரூ.14,499 என விலையிடப்பட்டுள்ள இந்த மாடல் ஸ்மார்ட் போன் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில் இதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.