கூகுள் நிறுவனம் தன்னுடைய மொபைல் போன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளர்கள் குறித்து, சென்ற வாரத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு, ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வருவதாக அறிவித்துள்ளது. ஜனவரி மாதம், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனாளர்களில், 32.6% பேர் லாலிபாப் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். இது டிசம்பரில் 29.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக வெளியான, மார்ஷ் மலோ, இன்னும் 0.7% ஆண்ட்ராய்ட் போன்களில் மட்டுமே இயங்குகிறது. இது முந்தைய மாதத்தின் பயன்பாட்டைக் காட்டிலும் 0.2% அதிகமாகும். கிட்கேட் இன்னும் முதல் இடத்தில் உள்ளது. இதன் பயன்பாடு 36.1%. ஜெல்லி பீன் 24.7% லிருந்து, 26.9% ஆக உயர்ந்துள்ளது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் 2.7% ஆகக் குறைந்தது. ஜிஞ்சர் ப்ரெட் 3% போன்களில் காணப்பட்டது. ப்ரையோ சிஸ்டம் 0.2% போன்களில் மட்டுமே இயங்கி வருகிறது. வரும் காலத்தில், மார்ஷ் மலோ பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.