கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைச் சென்ற வாரம் முதல் பயன்படுத்தி வருகிறேன். பல ஆண்டுகளாக, என் கம்ப்யூட்டரில் சி கிளீனர் பயன்படுத்தி, அவ்வப்போது தேவையற்ற பைல்களை நீக்கி வருகிறேன். விண்டோஸ் 10க்கான சிகிளீனர் வெளிவந்துள்ளதா? அது தேவையா?
என். சுதர்சன், திருப்பூர்.
பதில்:
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பொறுத்த வரை, தேவையற்ற பைல்களை நீக்க, தனியாக தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் தேவை இல்லை என்றுதான் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. ஆனால், சிகிளீனர் போன்ற புரோகிராம்கள் தரும் அனைத்து வசதிகளும், விண்டோஸ் 10 இயக்க முறைமையில் கிடைக்குமா என்பதனைச் சோதித்து அறிய வேண்டும்.
இருப்பினும் உங்கள் கேள்விக்கான பதில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆம், சிகிளீனர் பதிகை 5.13 விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பிரிபார்ம் நிறுவன தளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சிகிளீனர் 5.13 பதிப்பில், ஆப்பரா மற்றும் குரோம் மீடியா கேஷ் பைல்களை நீக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இணையப் பயனாளர்கள், அண்மைக் காலத்தில் அதிகம் எதிர்பார்க்கும், குரோம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் நீக்கத்திற்கான ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இதனால், ஆப்பரா மற்றும் குரோம் பிரவுசர்களைப் பயன்படுத்துவோர், பிரவுசரில் உருவாக்கப்படும் தற்காலிக பைல்கள் அனைத்தும் நீக்கும் திறனை இந்த புதிய சிகிளீனர் பெற்றுள்ளது. மேலும், இந்த சிகிளீனர் பதிப்பு, 64 பிட் அமைப்பு இயக்கத்தில் சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கம்ப்யூட்டர் இயக்க வேகம் குறையாது. மேலும், இதில் யூனிகோட் டெக்ஸ்ட்டுக்கு சப்போர்ட் தரப்பட்டுள்ளது. அப்டேட் செய்திட தானாக இயங்கும் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்களுக்கு, விண் 10 ரெஜிஸ்ட்ரி சுத்தப்படுத்தும் செயல்பாடு இணைக்கப்பட்டுள்ளது. எனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர் வாங்கியவர்கள், அதன் வேகம் குறையாமல் தொடர்ந்து பயன்படுத்தலாம். மேலும், விண் 10ன் மாறா நிலை பிரவுசராக உள்ள எட்ஜ் பிரவுசரின் தேவையற்ற பைல்களையும் இது நீக்குகிறது. https://www.piriform.com/ccleaner/download என்ற முகவரியில் உள்ள, இதனை வடிவமைத்து வழங்கும் பிரிபார்ம் நிறுவனத்தின் இணைய தளப் பக்கத்தில், இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில் அதன் அளவைப் பெரிதாக்கலாம். ஆனால், ஒரு சில டாகுமெண்ட்களில், எழுத்துக்கள் வித்தியாசமாகக் காட்டப்பட, கூடுதல் அகலத்தில் காட்டப்படுகின்றன. இதனை எந்த இடத்தில் சென்று, அகலமாக மாற்றலாம்? வழி காட்டவும்.
கா. வைத்யநாதன், திருநெல்வேலி.
பதில்
: முதலில் நீங்கள் அகலமாக அமைக்க விரும்பும் சொல் அல்லது எழுத்துகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து பாண்ட் விண்டோவினைப் பெறவும். இதனை மெனு பாரில் Format கிளிக் செய்து முதல் பிரிவாக இருக்கும் Font என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம். இந்த விண்டோவில் பல டேப்கள் கிடைக்கும். இதில் Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Scale என்பதற்கு அருகில் உள்ள அளவு கட்டத்தில் ஏற்கனவே 100% என இருக்கும். இதனை 200% என அமைத்து ஓகே கிளிக் செய்து பார்த்தால் தேர்ந்தெடுத்த சொல்லில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகலமாக மாற்றப்பட்டு இருக்கும். இது உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால் அகல அளவின் சதவீதத்தைக் குறைக்கலாம்; கூடுதலாக வேண்டுமென்றால் உயர்த்தலாம்.

கேள்வி: என்னுடைய ஜிமெயில் அக்கவுண்ட் யாரோ ஒருவரால் கைப்பற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. என் மெயில் அக்கவுண்ட்டில் இருந்து பலவாறாக மெயில்கள், என் மெயில் தள காண்டாக்ட் முகவரிகளுக்குச் செல்வதாக என் நண்பர்கள் கூறுகின்றனர். என் மெயில் அக்கவுண்ட்டினைச் சில வேளைகளில் பார்க்க முடிவதில்லை. செட்டிங்ஸ் அமைக்கும் பணியையும் மேற்கொள்ள இயலவில்லை. என்ன செய்திடலாம்?
பா. மங்கையர்க்கரசி, தஞ்சாவூர்.
பதில்:
உங்களுடைய கடிதத்தில் தரப்பட்டுள்ள நீண்ட விளக்கம், உங்கள் ஜிமெயிலை ஒருவர் கைப்பற்றியுள்ளதனை உறுதி செய்கிறது. இவ்வாறு பிறர் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்ட அக்கவுண்ட்டினை மீட்டெடுக்க கூகுள் இரு வழிகளைத் தருகிறது. உங்கள் அக்கவுண்ட்டில் தற்போது சில வேளைகளில் நுழைய முடிகிறது என்று கூறியுள்ளீர்கள். எனவே, இந்த இரண்டு வழிகளையும் முயற்சிக்கலாம். நீங்கள் வழக்கமாக ஜிமெயில் பார்க்கும் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்கள் இல்லாமல், வேறு சாதனங்கள் வழியாக, ஐ.பி. முகவரி வழியாக உங்கள் அக்கவுண்ட் பார்க்கப்பட்டிருந்தால், அதனை நீங்கள் கண்டறியலாம் (Recently Used Devices/your last account activity). உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழைந்து செயல்பட முடிந்தால், உடனே அதன் பாஸ்வேர்டை மாற்றவும். Gmail security settings சென்று, அதனை two-step verification என்ற இரு வழிப் பாதுகாப்பு வழிக்கு மாற்றவும். இந்த இரு வழிப் பாதுகாப்பு வழியில், உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் நீங்கள் குறிப்பிடும் எண் கொண்ட ஸ்மார்ட் போனுக்கு வரும் எண் கொடுத்தால் மட்டுமே, உங்கள் அக்கவுண்ட்டைத் திறந்து பயன்படுத்த முடியும். கூடுதல் பாதுகாப்பு வழிகளுக்கு https://support.google.com/mail/checklist/2986618 என்ற கூகுள் தளம் சென்று பார்க்கவும். அவற்றில் உங்களுக்கு நன்கு புரிந்தவற்றைப் பயன்படுத்தவும்.
உங்கள் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால், ஜிமெயில் ஹெல்ப் பக்கத்தில், கிடைக்கும் account recovery formல் கேட்டுள்ள தகவல்களை நிரப்பவும். மீண்டும் உங்களுக்கு அக்கவுண்ட் கிடைக்க சற்று அதிக நேரம் ஆகலாம். ஆனால், கிடைத்தவுடன், மேலே தரப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளவும். உங்கள் தொடர்பு முகவரிகளை இந்த வகையில் தொலைக்காமல் இருக்க, எப்போதும் முகவரிகளை ஒரு பேக் அப் பைலில் பதிந்து வைக்கவும். எப்படி இந்த பேக் அப் பைலை உருவாக்கலாம் என முன்பு கம்ப்யூட்டர் மலரில் கட்டுரை தரப்பட்டது. அல்லது https://support.google.com/mail/answer/24911?hl=en என்ற முகவரியில் அதற்கான வழிகளைக் காணலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இதில் இரண்டு யு.எஸ்.பி. 2 போர்ட் உள்ளன. நான், யு.எஸ்.பி.3.0 மெமரி ஸ்டிக் வாங்கிப் பயன்படுத்தினால், அதில் சேவ் செய்யப்படும் டேட்டா, யு.எஸ்.பி. 2 வேகத்தில் கிடைக்குமா? அல்லது யு.எஸ்.பி. 3 வேகத்தில் கிடைக்குமா?
ஆர். சந்திரன், மதுரை.
பதில்:
உங்களுடைய கம்ப்யூட்டரில் என்ன வகை யு.எஸ்.பி. போர்ட் உள்ளதோ, அந்த வேகத்தில் தான் டேட்டா திரும்ப கிடைக்கும். நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் யு.எஸ்.பி. 3 வகை மெமரி ஸ்டிக், இந்த யு.எஸ்.பி. 2 வகை போர்ட்டிலும் சிறப்பாகச் செயல்படும். அந்த வகையில் தான் அவை வடிவமைக்கப்படுகின்றன.
யு.எஸ்.பி. 3.0 போர்ட் வழி அதிக வேகத்தில் நமக்கு டேட்டா பரிமாற்றம் கிடைக்கும். இணைய அலைக்கற்றை சற்றுப் பெரிதாகவே இயங்கும். மின் சக்தி பயன்பாட்டிலும் சிறப்பான செயல்பாடுகள் காணப்படும். உங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.
பின் ஒரு நாளில், நீங்கள் உங்களுடைய யு.எஸ்.பி. 3 மெமரி ஸ்டிக்கினை, யு.எஸ்.பி. 3 போர்ட்டில் பயன்படுத்துகையில், அதிக வேகத்தில் டேட்டா பரிமாற்றம் நடைபெறுவதை நீங்கள் காணலாம்.

கேள்வி: ஸ்மார்ட் போனில் செல்பி எடுப்பதில் ஸ்டிக் பயன்படுத்தும்போது, எப்படியும், போன் ஸ்கிரீனை அழுத்தித்தானே, போட்டோ எடுக்க வேண்டும். எப்படி ஸ்டிக் உதவுகிறது?
என். சுலோச்சனா, மயிலாடுதுறை.
பதில்:
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, 'காசுக்கேற்ற தோசை' தான். ஓரிருவருடன் செல்பி எடுப்பதாக இருந்தால், உள்ளங்கையில் வைத்தவாறே எடுத்துக் கொள்ளலாம். போன் ஸ்கிரீனில் கேமரா ஐகான் அழுத்தி படம் எடுக்கலாம். பின்புலம் பெரியதாகவோ, நிறைய பேருடன் போட்டோ எடுக்க வேண்டும் எனத் திட்டமிடுகையில், ஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டிக்கில், நிலையாகக் ஸ்மார்ட் போனை இணைத்து படம் எடுக்கிறோம். சற்றுத் தொலைவாக நம் முன்னால், கேமரா இருப்பதால், அதிக இடம் அல்லது நபர்களை போட்டோவினுள் கொண்டு வரலாம். இதில், கேமராவில் டைமர் எனப்படும் சற்று நேரம் கழித்து, படம் எடுக்கும் வசதி இருந்தால், அதனைப் பயன்படுத்தலாம். சில செல்பி ஸ்டிக்குகளில், அவற்றைக் கேமராவுடன் இணைத்து, ஸ்டிக்கின் மறுமுனை அழுத்திப் படம் எடுக்கும் வசதி தரப்பட்டுள்ளது. அதனை அழுத்திப் படம் எடுக்கலாம்.
உங்களுக்குக் கூடுதலாக, ஓர் எச்சரிக்கை தகவல் தரட்டுமா? சென்ற ஆண்டில், செல்பி எடுக்க முயல்கையில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாம். இதனை “வாஷிங்டன் போஸ்ட்” என்ற பத்திரிக்கை அறிவித்துள்ளது. உலக அளவில், செல்பி எடுக்கும்போது ஏற்பட்ட மரணங்களில், பாதிக்கு மேல் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, ஜனவரியில், மதுரா அருகே, ட்ரெயின் செல்லும்போது செல்பி எடுத்த மூன்று இளைஞர்கள் இறந்தது மிகவும் துக்ககரமான தகவல். தமிழ்நாட்டில், நாமக்கல் அருகே, பாறை ஒன்றின் மீது செல்பி எடுத்த வாலிபர் ஒருவர் இறந்ததும் அதிர்ச்சி தரக்கூடியதே. மும்பையில் அரசு, சில இடங்களை, செல்பி எடுப்பது தடை செய்யப்பட்ட இடம் என அறிவித்துள்ளது. எனவே, கவனமாக, தேவைப்பட்டால் மட்டுமே செல்பி எடுக்க வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X